அடேங்கப்பா! ஜனநாயகன் டிக்கெட் விலை இவ்வளவா? விஜய் ரசிகர்களை ஷாக் ஆக்கிய அட்வான்ஸ் புக்கிங்

  • சென்னை: வரும் ஜூலை 23ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தை சுற்றி நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விஜய்யின் படம் என்பதற்காக மட்டுமில்லை, இது தமிழகம் முதலமைச்சர் விஜய் கடைசியாக நடித்த படம் என்பதாலேயே இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தின் டிக்கெட் விலை தற்போது இணையத்தில் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

    Advertisement

    ஜனநாயகன்படத்தின் டிக்கெட் விலை

    தமிழகத்தில் வழக்கம்போல பெரும்பாலான தியேட்டர்களில் 100 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் நிலைமையே வேறு விதமாக இருக்கிறது. குறிப்பாக பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் விலை பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறது.

    Advertisement

    அதிலும் உள்ள ஒரு பிரபல மல்டிப்ளெக்ஸில் ரிக்ளைனர் (சாய்வு இருக்கை) டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? ரூ.2500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். இதுதான் இப்போ ஜனநாயகன் ரசிகர்களிடம் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ஆனால் இன்னொரு விஷயத்தையும் இதில் கவனிக்க வேண்டும். டிக்கெட் விலை இவ்வளவு அதிகமாக இருந்தாலும் முன்பதிவு பாதிக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

    அட்வான்ஸ் புக்கிங்

    முதல் நாள் முதல் காட்சிக்கு பல தியேட்டரில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விலை முக்கியம் இல்லை விஜய் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற மனநிலையில்தான் ரசிகர்கள் இருப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்படுகிறது. காரணம் இந்த படத்தினை பார்ப்பதற்காக பல மாதங்களாகவே ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து இப்போ அதற்கு பலம் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்.

    Advertisement

    முதலில் போன தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதிலிருந்து பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி ஒவ்வொரு மாதமும் கடக்கும் போதெல்லாம் அடுத்த மாதம் வந்துவிடுமா? அடுத்த வாரம் வந்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பிலேயே ரசிகர்கள் காத்திருந்தனர். ஒரு வழியாக தளபதி விஜயாக நடித்த படம் மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யின் படம் என்று சொல்வது போல இப்போ மாறி இருக்கிறது.

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ஏற்கனவே ஜனநாயகன் படம் லீக் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த படம் வெளியாகும் 23ஆம் தேதிக்கு தியேட்டரில் போய் பார்த்தே தீருவோம் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மத்திய திரைப்பட தணிக்கை குழு இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. ஆனாலும் படத்திற்கான எதிர்பார்ப்புக்கு மட்டும் ரசிகர்களுக்கு குறையவே இல்லை. சரி படம் வெளியே வந்த பிறகு ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    Advertisement

    English Summary

    Jana Nayagan: Expectations are increasing day by day around the movie Jana Nayagan, which is slated to release on July 23. Fans are eagerly waiting to watch this film not only because it is Vijay's film but also because it is Tamil Nadu Chief Minister Vijay's last film. But the ticket price of this movie is now becoming a big talking point on the internet. Jana Nayagan Is the ticket price of the Democrat so much from ₹100 to ₹2,500.