சென்னை: ஜனநாயகன் என்ற பெயரை கேட்டாலே விஜய் ரசிகர்கள் உடனே திரும்பி பார்ப்பார்கள். என்ன ஏதாவது அப்டேட் இருக்கா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அந்த அளவிற்கு இருக்கிறது. இப்போது ஜனநாயகனுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தான் ஒரு முக்கிய அறிவிப்பு வந்திருக்கிறது. அதுவும் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கிடைக்கவில்லை. எனவே தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வடக்கு தொடருந்து இருந்தார். அதுவும் தாமதமானதால் ஒரு கட்டத்தில் மனுவை வாபஸ் வாங்கி இருந்தார். அதோடு மறு சென்சார்க்கும் விண்ணப்பித்து இருந்தார்.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் இந்த படம் அடுத்த வாரம் வரும் அடுத்த மாதம் வரும் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர். அப்படியே ஆறு மாதம் கடந்து விட்டது. ஆனாலும் சில ரசிகர்கள் விஜய் முதல்வர் ஆன பிறகு வந்தால் அதில் டைட்டில் கார்டில் சிஎம் விஜய் என்று வரவேண்டும், தளபதி விஜய் என்பதே விடவும் சிஎம் விஜய் என்று வந்தால் தான் கெத்தாக இருக்கும் என்று காத்திருந்தனர். அந்த ரசிகர்களின் ஆசை தான் இப்போது நிறைவேறி இருக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஏ சர்டிபிகேட்டை சென்சார் கொடுத்து இருந்தது. இது குறித்து கே வி என் நிறுவனம் எதுவுமே வாய் திறக்கவில்லையே என்று ரசிகர்கள் பேசி வந்த நிலையில் ஜனநாயகன்படத்தின் இணை தயாரிப்பாளரும் விஜய்யின் அட்மினுனான ஜெகதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜனநாயகன் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் என்று பெயர் போடப்பட்டிருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் ஷேர் பட்டனை தெறிக்க விடுகிறார்கள். ஆரம்பத்தில் ஜனநாயகன் படத்தில் மாண்புமிகு முதலமைச்சர் டைட்டில் கார்டு எலலாம் வராது என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது ஜெகதீஷ் மாண்புமிகு முதலமைச்சர் என்று விஜயை டேக் செய்து போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த மாதமே வெளியாகும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட போஸ்ட்
ஜனநாயகம் டைட்டில் கார்டு
ஜனநாயகன் ரிலீஸ் தேதி
கடந்த ஜனவரி மாதமே வந்திருந்தால் அதில் தளபதி விஜய் என்று வந்திருக்கும். இப்போ வருவதால் முதலமைச்சர் விஜய் ஆக டைட்டில் கார்டில் இடம் பிடித்திருக்கிறார் எங்க தளபதி என்று ரசிகர்கள் கமெண்ட்களை கொட்டுகிறார்கள். ஆனாலும் இந்த படம் வரும் 23 அல்லது 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.