Jana nayagan Review: ஜனநாயகன் ரிவ்யூ.. பகவந்த் கேசரிதானா? விஜய்யின் புது அவதாரமா? முழு படம் எப்படி இருக்கு?

  • சென்னை: விஜய்யின் கடைசி படம் என்றாலே எதிர்பார்ப்பு வேற லெவல். அதுவும் முதல்வர் விஜய் ஆன பிறகு வெளியாகும் ஜனநாயகன் படத்திற்காக 7 மாதங்களாக ரசிகர்கள் தவம் இருந்தார்கள். ஒரு வழியாக இன்று அந்த படம் தியேட்டரில் திருவிழா போல மாறிவிட்டன. ஆனால் படம் பார்த்துட்டு வெளியே வந்தவங்க பேசுற முதல் கேள்வி என்னன்னா இது பகவந்த் கேசரிதானா? இல்ல புது படமா? என்பதுதான். அது பற்றி தான் இப்போ விரிவாக பார்க்க போகிறோம்.

    Advertisement

    இது பாலையா நடிச்ச பகவந்த் கேசரியா? என்று கேட்கிறவர்களுக்கு ஆமாம் என்பது தான் பதில். ஆனால் அது பாலையா சாப்பாடு, இது விஜய் ஸ்பெஷல் பிரியாணி என்று எடுத்துக் கொள்ளலாம். உண்மைய சொல்லனும்னா கதையின் எலும்புக்கூடு அப்படியே பகவந்த் கேசரிதான். அங்கே பாலகிருஷ்ணா ஒரு பயந்து போன பொண்ணை தைரியமான ஆளா மாற்றுவார். அதேபோலத்தான் ஜனநாயகனில் விஜய் மமீதாவை பயத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து வாழ்க்கையில் எதிர் கொள்ள கற்றுக் கொடுக்கிறார்.

    Advertisement

    ஒப்பீடு

    அங்கேயும் இங்கேயும் அதே கதை தான். ஆனால் ஹெச் வினோத் சும்மா காப்பி அடிக்கல, அங்கே வில்லன் ஒரு தனி பிரச்சனை இங்கே வில்லனுக்கு சர்வதேச நெட்வொர்க், ஆயுத கடத்தல், ஆப்பிரிக்கா, அரசியல், மதக்கலவரம் என பெரிய ஸ்கேல் கொடுத்திருக்கிறார். அதனால் பாதி படம் தீரன் அதிகாரம் ஒன்று ஃபீலும், மீதி படம் பகவத் கேசரி ஃபீலும் வருகிறது.

    விஜய்யின் நடிப்பு

    பகவத் கேசரியில் காஜல் அகர்வால் டாக்டராக வந்து பாலையாவுடன் ரொமான்ஸ் செய்வார். ஆனால் ஹெச் வினோத் என்ன நினைச்சாரோ தெரியல விஜய் கடைசி படம் ரொமான்ஸ் டைம் வேஸ்ட் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு போல, அந்த டிராக்கையே தூக்கிட்டார். அதற்கு பதிலாக பூஜா ஹெக்டேவை நிருபராக கொண்டு வந்து கதைக்குள் வைத்திருக்கிறார். அது படத்துக்கு நல்ல பலம்.

    Advertisement

    பகவத் கேசரியில் வில்லன் வந்துட்டு போயிடுவார். இங்கே பாபிக்கு நல்ல ஸ்கிரீன் டைம் இருக்கு. பின்னணி கதையும் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. பிளானும் பெருசு. ஆனால் இவ்வளவு பெரிய வில்லனா சொல்லுறீங்க இன்னும் கொஞ்சம் மிரட்டி இருக்கலாம் என்று தோன்றும் இடங்களும் இருக்கு. பாலையா படத்தில் ஸ்ரீலீலா எப்படி கதையின் இதயமோ, இங்கே அதே வேலையை மமீதா பைஜூ செமையா செய்திருக்கிறார். சித்தப்பா என்று விஜயை கூப்பிட சீன்கள், பயந்து நடுங்கற காட்சிகள் கிளைமாக்ஸில் வரும் மாற்றம் எல்லாம் அவருக்கு ஸ்கோர் தான்.

    அனிருத் இசை

    அதுபோல படம் ஆரம்பிச்சு சில நிமிஷம் வர கதை என்னன்னு யாரும் பாக்க மாட்டாங்க. ஏன்னா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்று டைட்டில் கார்டு வந்த உடனே தியேட்டர்ஸ் ஸ்பீக்கரே சத்தம் கேட்காத அளவுக்கு ரசிகர்கள் கத்துறாங்க. அதுக்கு மேல தளபதி கச்சேரி பாட்டு வேற இருக்கு... சொல்லவா வேணும்? அந்த பாடல் வரும்போது படம் பார்க்க வந்தவங்களே கச்சேரிக்கு வந்த மாதிரி எழுந்து ஆடுறாங்க.

    Advertisement

    அனிருத் எப்பவும் போல தீயை அணைய விடாமல் கொழுந்து விட்டி எறிய வைத்து இருக்கிறார். சில காட்சிகளில் திரைக்கதை கொஞ்சம் ஸ்லாவா போகும் நேரத்தில் பின்னாடி இருந்து அனிருத் வந்து சைடு ஆகுங்க நான் பார்க்கிறேன் என்று பீஜியம் போட்டுட்டு காட்சியை தூக்கி விடுறாரு. பகவத் கேசரி முழுக்க பாலையா ஸ்டைல்... ஹீரோவாக வந்து பஞ்சு அடிப்பார் எல்லாரும் பறப்பாங்க அவ்வளவுதான்.

    ஜனநாயகன் பிளஸ் பாயிண்ட்

    ஆனால் இங்கே வினோத் போலீஸ், இன்வெஸ்டிகேஷன், சர்வதேச ஆயுத கடத்தல், அரசியல் பின்னணி, லாஜிக் கனெக்சன் என்று தன்னுடைய டிரேடு மார்க்கை டச் கொடுத்து இருக்கிறார். அதனால் தான் இது வெறும் ரீமேக் மாதிரி தெரியாமல் இருக்கிறது. ஆனால் குறைய இல்லையா? என்று கேட்டால் அதுவும் இருக்கிறது. விஜய் இந்த படத்தில் ரொம்ப சீரியஸ். சிரிச்சு பேசுற, கலாய்க்கிற, குறும்பு பண்ணுற விஜய் கொஞ்சம் மிஸ் ஆகிறது.

    Advertisement

    ஜனநாயகன் பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்... என்ன இப்படி சொல்லிட்டாரு!
    இன்னொரு விஷயம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் புதிய கதை, புதிய உலகம் என எதிர்பார்த்து இருப்பார்கள் அந்த இடத்தில் ரீமேக் தேர்வு செய்தது சிலருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ஆனால் சிலருக்கு கேள்வி இது பகவத் கேசரியை விட நல்லதா இருக்கா? இல்லையா? என்பது. ஆனால் எமோஷனலாக 2 படமும் நல்ல வேலை செய்திருக்கிறது.

    பகவந்த் கேசரி VS ஜனநாயகன்

    ஆக்ஷனில் ஜனநாயகன் கொஞ்சம் மேலே. வில்லன் ட்ராக்கில் ஜனநாயகன் அப்கிரேட். குடும்ப செண்டிமெண்ட்டில் பகவத் கேசரி கொஞ்சம் முன்னிலை வகிக்கிறது. மாஸ் மொமென்ட் விஜய் ரசிகர்களுக்கு ஜனநாயகன் தான் ஜாக்பாட். கடைசியாக பார்த்தால் ஜனநாயகம் என்பது பகவத் கேசரியின் ஷார்ட் பை ஷார்ட் காபி கிடையாது. அதே கதையை எடுத்து பாலையா ஸ்டைலை கழட்டி, வினோத்தின் ஆக்சன், அனிருத் இசை, விஜயின் மாஸ், அரசியல் கட்சி, பெரிய வில்லன் ட்ராக் எல்லாம் சேர்த்து விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் எடிசன் ஆக மாற்றி இருக்கிறார்கள்.

    Advertisement

    ஒரு லைனில் சொன்னால் பகவத் கேசரியை பார்த்தவர்களுக்கு இது அப்கிரேட் வெர்ஷன்.. பார்க்காதவருக்கு இது பக்கா மாஸ் கமர்சியல் என்டர்டைன்மென்ட் தான்.

    English Summary

    Jana nayagan Review: If it is Vijay's last film, the expectations are on a different level. That too, fans have been waiting for 7 months for the movie Jana nayagan, which will be released after Vijay became the Chief Minister. In a way, today the film has become like a festival in the theatre. But the first question that people who come out after watching the film is, is this Bhagavanth Kesari? Is it a new movie? That is. We are going to see about that in detail now.