வாரிசு நடிகைக்கு ஜான்வி கபூருக்கு தூண்டில் போட்ட பாலிவுட் நடிகர் இவரா? உன் மச்சங்களை பார்க்கலாமா

  • சென்னை: பாலிவுட் வட்டாரத்தில் எப்போதுமே பரபரப்புகளும், ட்விஸ்ட்களும் ஓடிக் கொண்டிருக்கும்.. அதிலும் முன்னணி வாரிசு நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை என்றால் கேட்கவே வேண்டாம்.. அந்தவகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூருக்கு பற்றின ஒரு கிசுகிசு செய்தி, மீண்டும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. உடனே அந்த நடிகர் யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் ஆராய துவங்கி உள்ளனர்.

    Advertisement

    கடந்த 2024ம் ஆண்டு "காபி வித் கரண் Season 8" நிகழ்ச்சியில், ஜான்வி கபூர் தனது தங்கை குஷி கபூருடன் பங்கேற்றார்.. அப்போது தொகுப்பாளர் கரண் ஜோஹர், "பாலிவுட் நடிகர் ஒருவரிடமிருந்து உனக்கு வந்த ரொம்பவே ஃபிளர்ட்டியான (Flirty) மெசேஜ் எது?" என்று ஒரு வில்லங்கமான கேள்வியை கேட்டிருந்தார்.

    Advertisement

    ஜான்வி கபூர்

    அதற்கு பதிலளித்த ஜான்வி, "உன் உடம்பில் இருக்கிற எல்லா மச்சங்களையும் நான் பார்க்கலாமா?" என்று ஒரு முன்னணி பாலிவுட் நடிகர் எனக்கு மெசேஜ் அனுப்பினார்" என்றார்..

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கரண் ஜோஹர், "உனக்கு அவ்வளவு மச்சங்களா இருக்கிறது?" என்று கேட்டு அடக்க முடியாமல் சிரித்து விட்டார். உடனே ஜான்வி கபூர், "ஆமாம், எனக்கு நிறையவே மச்சங்கள் இருக்கின்றன" என்று வெட்கத்துடன் சிரித்தபடியே பதிலளித்தார். ஆனாலும் அன்றைய நிகழ்ச்சியில் ஜான்வி அந்த நடிகரின் பெயரை சொல்லாமல் மூடி மறைத்து விட்டார்.

    ஸ்ரீதேவி மகள் ஜான்வி

    பிறகு கரண் ஜோஹர், "ஜான்வி, நீங்கள் நடிகர்களை டேட்டிங் செய்ய விரும்புவதில்லை என்று ஒரு கொள்கையை வைத்திருக்கிறீர்களாமே, அது உண்மையா?" என்று கேட்டார்..

    Advertisement

    அதற்கு ஜான்வி கபூர், "ஆமாம், இனிமேல் நான் எந்தவொரு நடிகருடனும் டேட்டிங் செய்யப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். 2 நடிகர்கள் காதலிக்கும்போது, அவர்களுக்கு இடையே தேவையில்லாத போட்டி மனப்பான்மையும் அசவுகரியமான சூழலும் இயல்பாகவே உருவாகிவிடுகிறது. அந்த மாதிரியான பதற்றமான உணர்வை என்னால் சமாளிக்க முடியாது.

    மச்சங்கள் - மெசேஜ் அனுப்பியது எந்த நடிகர்

    நடிப்புத் தொழில் என்பது ஒருவரின் முழு கவனத்தையும் சிந்தனையையும் முழுமையாக ஈர்த்துவிடக்கூடியது. ஆனால், என்னுடைய வாழ்க்கை துணையாக வருபவர் என் மீது மட்டுமே அதிக ஈர்ப்போடும், கவனத்தோடும், நேசிப்போடும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இருவரும் திரையுலகில் நடிகர்களாக இருக்கும் பட்சத்தில், அது கண்டிப்பாக சாத்தியப்படாது. அதனால் தான் நடிகர்களை காதலிப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளேன்" என்று பதிலளித்தார்.

    Advertisement

    கடந்த 2024-ல் ஒளிபரப்பான இந்த பேட்டிதான், மீண்டும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஜான்வி சொன்ன டேட்டிங் சமாச்சாரத்தை விட்டுவிட்டு, மச்சங்களை பார்க்கலாமா என்று ஜான்வியிடம் கேட்ட குறும்புக்கார நடிகர் யார்?" என்று பாலிவுட் ரசிகர்கள் ஆராய துவங்கி விட்டனர்..

    மேலும் சில இணையவாசிகள், ஜான்வியுடன் இணைந்து நடித்து இளம் பாலிவுட் நடிகர்களின் பெயர்களையும் லிஸ்ட் எடுத்து அதை வைத்து, ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆக மொத்தம் இது பழைய செய்தி என்றாலும்,, ஜான்விக்கு தூண்டில் போட நினைத்த அந்த பிரபலம் யார் என்பதுதான் தற்போதைய பாலிவுட் ஹாட் டாபிக்...!!

    English Summary

    Sridevi's Daughter Janhvi Kapoor Reveals Flirty Text: Which Bollywood Actor Wanted to See Her Beauty Marks?