ரஜினியின் ஜானி படம் தான் ரொம்ப பிடிக்கும்.. ஏனென்றால்? விஜய் மகன் சொன்ன விஷயம்! பாராட்டும் ரசிகர்கள்

  • சென்னை: நடிகர் விஜய்யின் மகனும், இயக்குனராக அறிமுகமாகிய ஜேசன் சஞ்சய் கொடுத்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுவரை தனது குடும்பம், அப்பா விஜய், சினிமா பயணம் குறித்து மட்டுமே பேசி இருந்த ஜேசன் இந்த முறை தனக்கு மிகவும் பிடித்த தமிழ் திரைப்படங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருப்பது ரசிகர்களின் கவனத்தை எடுத்து இருக்கிறது.

    Advertisement

    விஜய் மகன் பேட்டி

    அந்த பேட்டியில் தான் தமிழில் தனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்றால் ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா முதல் பாகம், அயன், ஜானி, துப்பாக்கி ஆகிய படங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த படங்களை நான் மீண்டும் மீண்டும் பார்ப்பேன். ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார். அதில் குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ஜானி படத்தை பற்றி பேசும்போது, அந்த படத்தில் ரஜினி சாரை மிகவும் வித்தியாசமான கோணத்தில் காட்டி இருப்பார்கள். அந்த கேரக்டரில் அமைதியும், உணர்வுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    ஜேசன் சஞ்சய்க்கு பிடித்த படங்கள்

    அதேபோல தன்னுடைய அப்பா விஜய் நடித்த துப்பாக்கி படம் குறித்தும் அவர் பேசியுள்ளார். துப்பாக்கி படத்தில் அப்பாவின் நிதானமான நடிப்பு, தீவிரவாதிகளுக்கு எதிராக அவருடைய ஆக்சன், அந்த கதையின் ஓட்டம் எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது. அது எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என்றும் தெரிவித்திருக்கிறார். இதோடு தனக்கு மாஸ் படங்கள் மட்டுமல்ல கதாபாத்திரங்களின் ஆழமும், வித்தியாசமான கதை திரைக்கதையும் கொண்ட படங்களை அதிகம் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ரஜினியின் ஜானி படம்

    கேரக்டர்களின் உணர்வுகள், திரைக்கதையின் வலிமை, புதிய கதை சொல்லும் முறை ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கும். அந்த அனுபவத்தை இந்த படங்கள் எனக்கு கொடுத்திருக்கின்றன என கூறுகிறார். இந்த பேட்டி வெளியான பிறகு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக பல வருஷங்களாக விஜய், ரஜினி ரசிகர்கள் இடையே சோசியல் மீடியாவில் விவாதங்களும் ரசிகர் போட்டிகளும் நடைபெற்று வரும் நிலையில் எனக்கு ரஜினி சாரின் ஜானி மிகவும் பிடித்த படம் என்று சஞ்சய் வெளிப்படையாக கூறி இருப்பது பலருடைய கவனத்தை பெற்றுள்ளது.

    Advertisement

    “சுட்டா சூரியனை தொட்டுக்கிட்டு” பாட்டு தான் எனக்கு பிடிக்கும்! ஏனென்றால்? விஜய் மகன் பேச்சு! வெடிக்கும் விவாதம்
    நல்ல சினிமாவை ரசிக்கிறவர்களுக்கு ரசிகர் போட்டி கிடையாது. படத்தை படமாக பார்க்கும் பார்வை சஞ்சய்யிடம் இருக்கிறது, விஜய்யின் மகனாக இருந்தாலும் ரஜினியின் சிறந்த படத்தை பாராட்டி இருக்கிறார் என்று ஜேசனை பலரும் பாராட்டுகிறார்கள்.

    English Summary

    Jason Sanjay: Actor Vijay's son and debut director Jason Sanjay's interview is going viral on social media. Jason, who used to only talk about his family, father Vijay, and his cinema journey, this time opened up about his favorite Tamil movies, which has caught the attention of fans.