அப்பா தான் முதலில் ஞாபகம் வந்தார்.. ஜேசன் சஞ்சய் பேட்டியால் விஜய் குடும்பம் பற்றி வெளிவந்த உண்மை

  • சென்னை: நடிகர் விஜய்யின் குடும்ப பிரச்சனைகள் மற்றும் விவாகரத்து வதந்திகள் குறித்து மீடியாவில் பல்வேறு செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த நேர்காணல் சோஷியல் மீடியாவில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.. அந்த நேர்காணலின் பின்னணி மற்றும் விஜய் குடும்பத்தின் உண்மை நிலவரம் குறித்து ஊடகவியலாளர் வெங்கடேசன் தன்னுடைய கருத்துக்களை ஷேர் செய்துள்ளார்.

    Advertisement

    Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன் பேசும்போது, "ஒரு குடும்பம் என்று இருந்தால் அதில் சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் வருவது இயற்கைதான். அதையெல்லாம் கடந்து குடும்பத்தை வழிநடத்துவதுதான் மிகப்பெரிய திறமையாகும்.

    Advertisement

    ஜேசன் சஞ்சய் பேட்டி

    விஜய்க்கு தனது மகள் திவ்யா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் மீது அளவுகடந்த அன்பு இருக்கிறது. ஜனநாயகன் படத்தில் தந்தை-மகள் பாசப் பிணைப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்கே அந்த அன்புதான் முக்கியக் காரணம். தேர்தலுக்கு முன்பாக சங்கீதா கோர்ட்டுக்கு சென்ற விவகாரம் மிகவும் அமைதியான முறையில் தான் கையாளப்பட்டது. ஆனால், அது அரசியல் காரணங்களுக்காக வெளியில கொண்டு வரப்பட்டது.

    "ஜேசன் சஞ்சய் ஒரு நேர்காணல் கொடுத்துவிட்டார், அது தேர்தல் சமயத்தில் வெளியாகும், அப்போது விஜய்யின் உண்மையான முகத்திரை கிழிக்கப்படும்" என்றெல்லாம் எதிர்ப்பாளர்கள் பல கதைகளைப் பரப்பி வந்தனர்.

    Advertisement

    அதேபோல, சங்கீதாவும் பேட்டி கொடுத்துவிட்டார், அது இந்த ஊடகத்தில் வரப்போகிறது, அந்த ஊடகத்தில் வரப்போகிறது என்று விஜய்யின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றார்கள். ஆனால், சங்கீதா இப்போதுவரை எந்தவொரு நேர்காணலும் அளிக்கவில்லை.

    சங்கீதா குரலாக பேசிய மகன்

    தற்போது ஜேசன் சஞ்சய் அளித்துள்ள இந்த ஒரே நேர்காணல், விஜய்க்கு எதிராக பரப்பப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் ஒரு சரியான பதிலடியாக அமைந்துள்ளது.

    ஜேசன் தனது அப்பாவை பற்றி மிகவும் உயர்வாக பேசியுள்ளார். ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்தால் யாரை அழைத்துச் செல்வீர்கள்? என்று நெறியாளர் கேட்டதற்கு, ஒரு நொடி கூட யோசிக்காமல் அப்பா என்று பதிலளித்துள்ளார். ஜேசன் நினைத்திருந்தால், "இப்போது அது குறித்து எண்ணம் இல்லை" என்று அந்த கேள்வியையே அவர் தவிர்த்திருக்கலாம்.

    Advertisement

    ஆனால், உடனடியாக "அப்பா" என்று சொன்னதிலிருந்தே, அவர்களுக்கு இடையிலுள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ள முடிகிறது. அதாவது சங்கீதாவீன் மறு குரலாகவே ஜேசன் பேசியிருக்கிறார்.

    அதுமட்டுமல்ல, இந்த படத்தின் கதையை ரெடி பண்ணும்போதே, தனது அப்பா, அம்மா, தங்கை திவ்யா ஆகியோரிடமும் ஜேசன் ஷேர் செய்துள்ளார்.. பொதுவாக பிள்ளைகளுக்குத் தாயின் மீது உள்ள பாசம் வெளியில் தெரியும், அப்பாவின் மீதான அன்பு மனதிற்குள்ளேயே இருக்கும். அந்த பாசத்தைதான் இந்த நேர்காணலின் மூலம் ஜேசன் வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, தனது தங்கை படிப்பில் மிகவும் திறமைசாலி என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    அப்பா முதலமைச்சர்

    தன்னுடைய அப்பா தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியால் தனக்கு 150% கூடுதல் பொறுப்பு வந்துள்ளதாக மிகவும் முதிர்ச்சியுடனும் எளிமையாகவும் ஜேசன் பேசியிருக்கிறார்..

    லைக்கா நிறுவனம் முதன்முதலில் கத்தி படத்தின் மூலம் தமிழில் தடம் பதித்தபோது, விஜய் அளித்த வாய்ப்பே அவர்களுக்கு பெரிய டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது. அந்த நன்றியுணர்ச்சியால்தான், ஜேசன் சஞ்சய் கதையின் கருவைப்பற்றி டிஸ்கஸ் செய்ய சென்றபோது, அவரது கமர்ஷியல் திரைக்கதையை பார்த்து ஆச்சரியப்பட்டு, "உங்கள் அப்பாவால்தான் எங்கள் நிறுவனம் உருவானது, எனவே நீங்கள் எங்கள் நிறுவனத்தின் மூலமாகவே டைரக்டராக அறிமுகமாக வேண்டும்" என்று வாய்ப்பளித்துள்ளனர்.

    Advertisement

    விஜய் படங்களிலிருந்து விலகுவதால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு, இப்போது ஒரு "குட்டி தளபதி" வந்துவிட்டார். அடுத்த மாதம் வெளியாகவுள்ள சிக்மா படத்திற்கு தியேட்டர்களில் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டங்களை மேற்கொள்வார்கள்" என்றெல்லாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    English Summary

    Jason Sanjay Amazing Interview.. "Dad Came to My Mind First" Reveals Vijay Family Bond