சென்னை: இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான சிக்மா படத்தின் பிரமோஷனுக்காக கொடுத்த பேட்டி சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை வைரலாகி இருப்பது ஜேசன் பதில்களால் மட்டுமல்ல அந்த பேட்டியை நடத்திய தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி) பற்றிய விவாதமும் தான்.
டிடியின் பேட்டி
தனியார் யூடியூப் சேனலுக்கு டிடி எடுத்த இந்த பேட்டியில் ஜேசன் சஞ்சயிடம் தொடர்ந்து உற்சாகமாக கேள்விகள் கேட்டதும், அவர் சொன்ன ஒவ்வொரு பதிலுக்கும் எக்ஸைட்மெண்ட் ரியாக்ஷன் கொடுத்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் உங்களை படம் இயக்க கூப்பிட்டால் இந்தியாவில் இருந்து யாரை கூப்பிட்டு போவீங்க என்று கேட்ட கேள்விக்கு, எனக்கு முதலில் தோன்றுவது அப்பா தான்... நல்ல காம்பினேஷனாக இருக்கும் என்று ஜேசன் கூறிய பதில் இணையத்தில் பெரிய வரவேற்பு பெற்றது.
ஜேசன் சஞ்சய் விளக்கம்
ஆனால் இந்த பேட்டியில் ஆரம்பத்தில் அவர், நான் முதலமைச்சர் பையனை இண்டர்வியூ எடுக்க போறேன் என்று சொன்னதும் எனக்கு ரொம்ப எக்சைட்டாக இருக்கு... என்ன கேள்வி கேட்க போறேன்னு தெரியல என்று பதட்டத்துடனே பேசினார். பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் இவருக்கு எதற்கு இந்த பதட்டம்? அதுவும் இவர் இதற்கு முன்பு சிஎம் மகனை பேட்டி எடுத்ததே இல்லையா? இதற்கு முந்தைய ஆட்சியில் கூட இவர் பேட்டி எல்லாம் எடுத்திருக்கிறார்.. அது மறந்து போச்சா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதோடு பழைய விஷயத்தையும் தோண்டி கலாய்க்கிறார்கள். குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலினுடன் அவர் பேசும்போது, அரசின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட சாம்பாரை சாப்பிட்டு பார்த்து இந்த சாம்பார் ரொம்ப சூப்பரா இருக்கு... இதுக்காகவே பிரைமரி ஸ்கூலுக்கு மறுபடியும் படிக்க போயிடலாம் போல இருக்கு என்று பெருமையாக பேசினார். அப்போதே அந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டது. காலையில் வைத்த சாம்பார் இவங்க நிகழ்ச்சி நடத்துற சாயங்காலம் வரைக்கும் பிரஷா இருந்ததா? என்னங்க இப்படி உருட்டுறீங்க என்று பலர் கிண்டல் செய்திருந்தனர். ஆனால் இப்போது அதே போல ஜேசன் சஞ்சயின் பேட்டியில் ஒப்பிட்டு யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களை அதிகமாக புகழ்கிறாரா? என்று சில நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் போஸ்ட்கள் போட்டு வருகிறார்கள். சிஎம் பையன் என்பதை மறந்துடுங்க! ஆனால்.. விஜய் மகன் சொன்ன வார்த்தை! பாயிண்ட்டை பிடித்த ரசிகர்கள்விஜய் மகன் பேட்டி
கலாய்க்கும் நெட்டிசன்கள்
அதே நேரத்தில் ஒரு சிலர் டிடிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அது அவருடைய பிரசன்டேஷன் ஸ்டைல், பல வருஷங்களாக எல்லா நடிகர்களிடமும் இதே மாதிரி தான் அவர் உற்சாகமாக பேசுவார். விஜய், அஜித், சூர்யா, ரஜினி என யாராக இருந்தாலும் டிடி எப்போதும் ரசிகையாகவே பேசுவார் என்று அவருக்கு சப்போர்ட் ஆகவும் சொல்லி வருகின்றனர். இப்போ ஒரே ஒரு பேட்டியில் பேசிய ஜேசன் சஞ்சயை மட்டும் வைரலாகவில்லை. அந்த பேட்டியை எடுத்த டிடியையும் மீண்டும் சோசியல் மீடியாவில் விவாதத்தின் மையமாக மாற்றி இருக்கிறது.