விஜய் பற்றி பெருமையாக பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடி திரிஷாவின் பதிவு வைரல்! கிளம்பிய புதிய விவாதம்!

  • சென்னை: நடிகர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான சிக்மா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக கொடுத்த பேட்டி சோசியல் மீடியாவில் பேசப் பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக பலரும் எதிர்பார்த்ததுபோல எந்த சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய அப்பா விஜய் பற்றி பெருமையாகவே பேசியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

    Advertisement

    இதற்கு இடையே நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. ஒரே நேரத்தில் பேசப்படுவதால் இரண்டையும் இணைத்து சோஷியல் மீடியாவில் பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஜேசன் சஞ்சய்யிடம் ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் உங்களை ஹாலிவுட் படம் இயக்க அழைத்தால் இந்தியாவில் இருந்து யாரை கூப்பிட்டு போவீங்க என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, என்னுடைய முதல் சாய்ஸ் என்னுடைய அப்பா தான், நல்ல காம்பினேஷனாக இருக்கும் என்று எந்த தயக்கமும் இல்லாமல் பதிலளித்தார்.

    Advertisement

    விஜய் மகன் பேட்டி

    அதோடு நான் சின்ன வயதில் இருக்கும்போது அப்பாவுடன் சூட்டிங்க்கு போவேன் அப்போது எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. பிறகு பைலட் ஆக வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு பிறகு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று நினைத்தேன். அப்பாவுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்த்து இருக்கிறேன் என்று பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

    ஜேசன் சஞ்சய் பேட்டி

    ஜேசன் சஞ்சய்யின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு சர்ச்சைகள் வந்தாலும் அப்பாவை பெருமையாகத்தான் பேசுகிறார். அப்பா மீது இருக்கும் பாசம் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெரிகிறது என்று கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஆங்கிலத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

    Advertisement

    நடிகை திரிஷா இன்ஸ்ட்டா ஸ்டோரி

    அதில், "Me at any social gathering those days", "I'm fun for about 32 minutes & then I start thinking about going home." அதாவது எந்த ஒரு சமூக நிகழ்ச்சிக்கு சென்றாலும் முதல் 32 நிமிடங்கள் மட்டுமே உற்சாகமாக இருப்பேன். அதற்குப் பிறகு வீட்டுக்கு போய் விட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும் என்ற அர்த்தத்தில் இந்த பதிவு சாதாரணமாக ஒரு பதிவாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் திரிஷாவும் இவ்வளவு வெளிப்படையாக பேசுகிறாரே என்று பலரும் கூறி வருகின்றனர்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் திரிஷா குறித்து பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் இணையத்தில் பரவி வந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் தன்னுடைய அப்பா பற்றி பெருமையாக பேசியதற்கு திரிஷா இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறாரா? என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அந்த பதிவில் எந்த ஒரு தகவல்களும் அப்படி இல்லை என்று திரிஷாவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    சிஎம் பையன் என்பதை மறந்துடுங்க! ஆனால்.. விஜய் மகன் சொன்ன வார்த்தை! பாயிண்ட்டை பிடித்த ரசிகர்கள்
    இது ஒரு சாதாரண பதிவுதான் இதில் ஜேசன் சஞ்சய்யின் கருத்துகளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. திரிஷா இதுபோல எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பகிர்ந்து கொண்டிருப்பார்... அதேபோலத்தான் இதுவும் என்று அவருடைய ரசிகர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். இந்த சர்ச்சைக்கு திரிஷா அடுத்து என்ன பதில் போஸ்ட் போட போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

    English Summary

    Jason Sanjay: Actor Vijay's son and director Jason Sanjay's interview for the promotion of his debut film Sigma has been the talk of the social media. Especially, as expected by many, he spoke proudly about his father Vijay without giving room for any controversy, which has given fans a pleasant surprise. Meanwhile, a post posted by actress Trisha on her Instagram store is currently going viral on the internet. Many people are sharing different opinions on social media by combining the two as they are spoken at the same time.