சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, யோகிபாபு, மிஸ்கின், லப்பர் பந்து புகழ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள நகைச்சுவை-த்ரில்லர் ஜானர் படம் 'பரிமளா அண்ட் கோ' (Parimala & Co) இப்போது Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயராம் மகள்களுக்கு காதல் தொல்லை தரும் ரவுடியான, சாண்டி மாஸ்டர் கதாப்பாத்திரம் திடீரென கொலை செய்யப்பட, ஆதாரங்கள் அனைத்தும் ஜெயராம் குடும்பத்தாருக்கு எதிராக இருக்க, இதிலிருந்து தப்பிக்க அக்குடும்பம் என்ன செய்கிறது என்ன பதைபதைப்பை பார்ப்போர் சிரிக்கும் வகையில் தந்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். கதாப்பாத்திரங்களின் பெயர்களிலேயே இது டார்க் காமெடி படம் என்பதை நீங்கள் பக்காவாக தெரிந்து கொள்ளலாம். ஜெயராம் வசிக்கும் வீடு, அவரின் பெண் குழந்தைகள் தங்களுக்குள் போட்டுக் கொள்ளும் சண்டைகள், ஊர்வசி செய்யும் வீட்டு வேலைகள் என நடுத்தர வர்க்கத்து குடும்ப வாழ்வியலை கண்முன் கொண்டு வந்து நிஜத்திற்கு நெருக்கமாக படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.
ஜெயராம்-ஊர்வசி கெமிஸ்ட்ரி பக்காவாக பொருந்திப் போவது படத்திற்கு இன்னொரு பலம். மிஸ்கின் தனது வழக்கமான நையாண்டி பாணியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்து கலக்குகிறார். அறிமுக சீனிலேயே, மேலே போலீஸ் யூனிபார்மும், கீழே லுங்கியுமாகதான் காட்சியளிக்கிறார். மிஸ்கினின் டிரேட் மார்க் முத்திரை இந்த படத்திலும் உண்டு என்று ரசிகர்களை உணர வைத்த தருணம் அது. ஹீரோயிசம் தூக்கிப் பிடிக்கப்படவில்லை என்பது படத்தின் இன்னொரு பலம். அர்ஜுன், அபிராமி நடிப்பில் வெளியான "பிளாஸ்ட்" திரைப்படமும், இப்படித்தான் இயல்பாக ஆரம்பிக்கும், ஆனால் கொஞ்சம் அதிகமாக ஹீரோயிசமும் சேர்ந்திருக்கும். ஒரு வகையில், இவ்விரு படங்களும், டூரிஸ்ட் பேமிலி படமும் ஒரே கோட்டில் இணைகிறது. அது.. தமிழ் சினிமா பக்கத்து வீடுகளில் சூட் செய்யப்பட ஆரம்பித்துள்ளது என்பதைத்தான் உணர்த்துகிறது. குடும்பத்தோடு ஜாலியாக பார்த்து என்ஜாய் செய்ய வேண்டிய பரிமளா அண்ட் கோ-வை மிஸ் செய்துவிட வேண்டாம்.அந்த படங்களில் நடிச்சது என்னுடைய மகன்கள் தான்! பிரிவினையை தடுக்க எடுத்த ரிஸ்க்! பாண்டிராஜ் உருக்கம்