நடிகை யோகலட்சுமிக்கு சம்மன் அனுப்பிய hotstar.. என்ன தவறு செய்தார்? ரசிகர்களை பதற வைத்த நோட்டீஸ்

  • சென்னை: ஹார்ட் பீட் சீரிஸ் மூலம் பிரபலமடைந்த நடிகை யோகலட்சுமிக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சம்பன் அனுப்பி இருக்கிறது என்ற தகவல் நேற்று முதல் சோசியல் மீடியாவில் காட்டுதீ போல பரவி வருகிறது. நீதிமன்ற நோட்டீஸ் போல வெளியான அந்த போஸ்டரை பார்த்த பலரும் என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? என்று குழம்பி போனார்கள். ஆனால் அந்த சம்மன் பின்னர் ஒரு சுவாரசியமான திருப்பம் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

    Advertisement

    ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில், ஜியோ ஹாட்ஸ்டார் ரசிகர்களை இவ்வளவு நாள் காத்திருக்க வைத்த குற்றசாட்டின் பேரில் யோக லட்சுமி ஆஜராக வேண்டும் என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருக்கிறது. முதலில் இதை பார்த்தவர்களுக்கு உண்மையான நோட்டீஸ் போலவே தெரிந்தாலும் பிறகு இது புதிய அறிவிப்புக்காக உருவாக்கப்பட்ட வித்தியாசமான பிரமோஷன் என்பது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    நடிகைக்கு சம்மன்

    இந்த பிரமோஷன் வெளியானதாக காரணமும் இருக்கிறது. சமீபத்தில் ஒளிபரப்பான ஹார்ட் பீட் சீரிஸின் 3வது பாகத்தில் தேஜு வேடத்தில் நடித்த யோகலட்சுமி அந்த சீரிஸில் தொடரப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த ஏமாற்றத்தையே தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் தங்களது மார்க்கெட்டிங் யுக்தியாக மாற்றி உள்ளது. ரசிகர்களை காத்திருக்க வைத்த குற்றவாளி என்று யோகலட்சுமிக்கு சம்மன் அனுப்புவது போல வடிவமைக்கப்பட்ட இந்த ப்ரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

    ஹார்ட் பீட் சீசன் 3 அப்டேட்

    ஹார்ட் பீட் சீரியஸ் ஓடிடி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மருத்துவ பின்னணியிலான இந்த சீரிஸில் ஆர்கே ஹாஸ்பிடலை மையமாகக் கொண்டு மருத்துவர்களின் வாழ்க்கை, நட்பு, காதல் மற்றும் எமோஷனல் என பல சம்பவங்களை வைத்து இந்த சீரிஸ் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. 2 சீசன் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் 3வது சீசன் கடந்த வாரம் தான் ஒளிபரப்பானது. அதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

    Advertisement

    தேஜு கம்பேக்

    2வது சீசனில் கதாநாயகி தீபா பாலு அதாவது அனு உயிர் பிழைப்பாரா? இல்லையா? என்று எல்லோரும் காத்திருந்த நிலையில் இப்போது 3வது சீசனில் அவருடைய அப்பாவுடன் அனு சேர்ந்து விட்டார். அதேபோல இந்த சீரியஸில் போன சீசனில் இருந்த பலர் இந்த சீசனில் இல்லை. இதனால் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் கதை புது கோணத்தில் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

    இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்? ஹார்ட் பீட் 3 முதல் நூறு சாமி வரை.. காத்திருக்கும் சர்ப்ரைஸ் படங்கள்
    இந்த நிலையில் யோகலட்சுமியை மையமாக வைத்து வெளியான இந்த சம்மன் ப்ரோமோ ரசிகர்களிடம் மேலும் ஆர்வத்தை தூண்டி உள்ளது. மீண்டும் தேஜு வரப்போகிறாரா? அப்போ அவருடைய கேரக்டர் இனி எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கேள்விகளை குவிக்கிறார்கள்.

    English Summary

    Yogi Lakshmi: The news that Jio Hotstar has sent a samban to actress Yogalakshmi, who became popular with the Heartbeat series, has been spreading like wildfire on social media since yesterday. What happened to many people who saw the poster published as a court notice? Any problem? They were confused. But now it has been revealed that there is an interesting twist after that summons.