துருவ் விக்ரம் போஸ்ட் போட்டதும், அனுபமா போட்ட புது குண்டு.. முகமூடி கிழிந்தது அப்போது தானாம்!

  • சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் கொடுத்த பேட்டி சோசியல் மீடியாவை அதிர வைத்திருந்தது. தன்னுடைய முன்னாள் காதலனால் தான் பட்ட வேதனைகள் குறித்து அவர் பேசியது பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் அவர் நடிகர் துருவ் விக்ரமை தான் சொல்கிறார் என்ற விவாதங்களும் எழுந்தது. இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு துருவ் விக்ரம் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அது அதிகமாக கவனிக்க பட்டதும் அனுபமா பேசிய அடுத்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    அனுபமா பரமேஸ்வரன் ஏற்கனவே மலையாள சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அதில் அவர் முன்னாள் காதலன் யார் என்று பெயரை சொல்லவில்லை என்றாலும் பலரும் துருவ் விக்ரம் என்றே சொல்லி வந்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்தும் அனுபமா எந்த பதிவுகளும் வெளியிடவில்லை.

    Advertisement

    நடிகை அனுபமா பேட்டி

    சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் அனுபமா தனது மனதில் இருப்பதை அப்படியே சோசியல் மீடியாவில் போஸ்ட் ஆக அடிக்கடி போட்டு வருவார். அப்படித்தான் சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய காதல் பிரேக்கப் ஆகிவிட்டது என்பது போலவும் தான் பழைய நிலைக்கு ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன், இரண்டு வருடங்களாக வலி வேதனையை அனுபவித்தேன் என்று அவர் வெளியிட்ட பதிவு பெரிய அளவில் பேசப்பட்டது.

    அதற்குப் பிறகு அவர் யாரை சொல்கிறார் தேடலுக்கு அனைவருடைய கைகளும் துருவ்வை காட்டியது. காரணம் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா இருவரும் பைசன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதலித்து வந்ததாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது, அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் போஸ்ட்களும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
    இப்போது அனுபமா துருவ் விக்ரமை அன்பாலோ செய்திருக்கிறார்.

    Advertisement

    அனுபமா பரமேஸ்வரன் எமோஷனல்

    இதனால் இதுதான் உண்மை என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும்போது அனுபமாவின் முதல் பேட்டி வெளியானதும் அதற்கு தன்னுடைய ஆதங்கத்தை தெரிவிப்பதுபோல துருவ் விக்ரம் ஒரு இன்ஸ்டா ஸ்டோரி பகிர்ந்து இருந்தார். அதில் கடற்கரையில் தான் வேகமாக ஓடிக் கொண்டிருப்பது போலவும், கடல் அலையில் விரக்தியாக நடந்து செல்வது போலவும் இருந்தது. இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார் என்று பலரும் சொல்லி வந்தனர்.

    அனுபமா பேசிய 2வது பாக வீடியோ

    இப்படியான நிலையில் அனுபமா பேசி 2வது பாக வீடியோவும் வெளியாகிவிட்டது. அதில் அவர் பேசும்போது, என்னுடைய முன்னாள் காதலனுடன் எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் நான் புரிந்து கொண்டு அதிலிருந்து எப்படியாவது வெளியே வரவேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் அந்த நபர் ஒருநாள் என்னிடம் நன்றாக பேசுவார், பிறகு அடுத்த நாள் வந்து என்னை உடல் அளவிலும் மனதளவிலும் கஷ்டப்படுத்துவார். அதனால் நான் ரொம்பவும் பயத்தில் இருந்தேன்.

    Advertisement

    அப்போது அந்த நபரே பிரேக் அப் செய்து கொள்வோம் என்று சொல்லிவிடுவார். பிறகு 2 நாட்கள் பேசமாட்டார். நான் அதை நினைத்து வருத்தத்தில் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் 3வது நாள் வந்து சாரி கேட்டு விடுவார். இப்படித்தான் கொஞ்ச நாட்கள் நடந்து போனது. அதற்கு பிறகு தான் நான் இது சரிப்பட்டு வராது என்ற முடிவு செய்து என்னை நானே தேடிக் கொண்டு வெளியே வர முயற்சி செய்தேன். அந்த சமயத்தில் பிரச்சனை இரண்டு குடும்பத்தில் பெற்றோர்களுக்கும் போனது அவர்கள் வந்து பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் அந்த நபரின் (காதலித்தவரின்) முகத்திரை கிழிந்தது.

    Advertisement

    பிரேக்கப் காரணம்

    அவருடைய நிஜ கேரக்டர் என்னவென்று பெற்றோர் முன்புதான் அவர் காட்டினார். அதற்கு பிறகு தான் நிரந்தரமாக பிரிந்து விடுவது நல்லது என்று நான் உறுதியாக முடிவெடுத்தேன். என்னுடைய கடந்த கால கஷ்டங்கள் எல்லாவற்றையும் ஆரம்பத்தில் நான் அந்த நபரிடம் சொல்லி இருந்தேன். அப்போது அவர் எனக்கு ஆறுதல் சொல்வது போல தான் பேசிக் கொண்டிருந்தார். நானும் நம்முடைய கஷ்டங்களை புரிந்து கொண்ட நபராக இருக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால்‌ அதற்கு பிறகு தான் என்னுடைய கடந்த கால கஷ்டங்களை வைத்தே என்னை பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்து விட்டார்.

    Advertisement

    அதை செய்யாதே, இதை செய்யாதே என்று சொல்லி அவருக்கு பிடித்த மாதிரியே என்னை மாற்றிக் கொண்டிருந்தார். நானும் எனக்கே தெரியாமல் எனக்கு என்ன பிடிக்கும்? பிடிக்காது? என்பதை எல்லாம் மறந்து அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை நிறைவேற்றவே தொடங்கி விட்டேன். அது கூட எனக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் என்னை ஒவ்வொரு இடத்திலும் குற்றம் சொல்லி கொண்டிருப்பது, எமோஷனல் பிளாக் மெயில் செய்ததுதான் என்னை மனரீதியாக பாதிக்க வைத்தது. அதனால் உடல் எடை குறைந்து, உடலிலும் பல பிரச்சனைகள் வந்தது என்று அனுபமா பேசி இருக்கிறார். முதல் பாகம் வெளியான போது பெரிய அளவில் பேசப்பட்ட இவருடைய பேச்சு 2வது பாகம் வெளியானதும் மீண்டும் அனுபமா பற்றி பேச வைத்திருக்கிறது.

    Topics: #emotional

    English Summary

    Anupama: A recent interview given by actress Anupama Parameswaran created a stir on social media. Her remarks regarding the pain she endured because of a former boyfriend have prompted much reflection among many. At the same time, speculation arose that she was referring to actor Dhruv Vikram. Amidst this, Dhruv Vikram made a social media post a few days ago; following the significant attention that post received, a subsequent video featuring Anupama has also been released.