சென்னை: சினிமாவில் காதல் காட்சிகளில் நடிக்கும் பலரையும் ரசிகர்கள் ரசிப்பார்கள். ஆனால், திரைக்கு வெளியே நிஜ வாழ்க்கையில் ஒரு தம்பதி தங்களுக்குள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் தருணங்கள் இன்னும் அதிகமாக மனதைத் தொடும். அப்படித்தான் நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் தங்களுடைய 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையைக் கொண்டாடிய வீடியோ தற்போது ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.
திருமணமாகி இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டாலும், இருவருக்கும் இடையிலான காதல் இன்னும் அப்படியே இருப்பதை போல அந்த வீடியோவில் பல காட்சிகள் இருக்கிறது. குறிப்பாக, சூர்யாவிடம் தனது திருமண உறுதிமொழிகளை பேசிய ஜோதிகா, ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியிருக்கிறார். அவர் சொன்ன வார்த்தைகள்தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
என்னுடைய கடைசி மூச்சு உன்னுடன் இருக்க வேண்டும். நீ இல்லாமல் நான் எப்படி தூங்குவேன் என்று எனக்குத் தெரியவில்லை. நீ எனக்கு முன்னால் இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டால், நானும் உன்னைத் தேடி அங்கே வந்துவிடுவேன். ஏனென்றால், நீ சொர்க்கத்திலும் இருப்பவர்களை உன்னுடைய பேச்சால் போரடித்துவிடுவாய் என்பது எனக்குத் தெரியும். சூர்யாவின் மடியில் என் உயிர் பிரிய வேண்டும் எனக்கு எல்லாமே அவர்தான் என்று ஜோதிகா நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். கணவர் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை வெளிப்படுத்திய அதே நேரத்தில், கடைசியாக ஒரு சின்ன காமெடியையும் சேர்த்திருக்கிறார் ஜோதிகா. சூர்யா தன்னை விட்டு பிரிந்துவிட்டால் அவரைத் தேடி சொர்க்கத்துக்கே சென்றுவிடுவேன் என்று அவர் கூறியதைப் பார்த்த ரசிகர்கள், இந்த காதல்தான் உண்மையான காதல் என்று நெகிழ்ந்து வருகின்றனர். சூர்யா, ஜோதிகா இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகள் காதலித்த பிறகு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஆண்டு தங்களுடைய 20வது திருமண நாளை கொண்டாடிய இருவரும், அந்த நிகழ்வை வழக்கமான திருமண நாள் கொண்டாட்டமாக மட்டும் வைத்துக்கொள்ளவில்லை. தங்களுடைய திருமண உறுதிமொழிகளை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் வகையில், குழந்தைகள் தியா, தேவ் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை புதுப்பித்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற அந்த நிகழ்வில் ஜோதிகா வெள்ளை நிற திருமண உடையிலும், சூர்யா மணமகன் உடையிலும் வந்தார்கள். 20 ஆண்டுகளுக்கு பிறகும் மீண்டும் திருமணம்
இந்த நிகழ்வுக்கு 'தி சீக்வல்' என்று பெயரிட்டிருந்தனர்.