கார்த்திக் ஜோடியாக நடித்த ஜோதிகாவின் அக்கா.. இப்போ எங்கே இருக்கிறார்? லீக்கான போட்டோ!

  • சென்னை: 90களில் தமிழ் சினிமாவை பார்த்தவர்களுக்கு, ஜோதிகாவின் அக்கா ரோஷினியின் முகத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. கார்த்திக் உடன் சிஷ்யா, அருண் விஜய் உடன் துள்ளித் திரிந்த காலம் என்று மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரோஷினி. ஆனால் இரண்டு மூன்று படங்கள் நடித்து முடித்ததும் திடீரென சினிமாவிலிருந்து விலகிவிட்டார். இப்போது அவருடைய புகைப்படங்கள் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    ஜோதிகாவின் நிஜ அக்கா

    அதுவும் ஜோதிகா தன்னுடைய 20வது திருமண நாளில் மீண்டும் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தில் ரோஷினியும் இருக்கிறார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் இவர் ஜோதிகா அக்கா ரோஷினி தானே என்று கேள்வி எழுப்பி பழைய விஷயங்களை எல்லாம் தோண்ட ஆரம்பித்து விட்டனர். முதலில் ஒரு சின்ன குழப்பத்தை நாம சரிசெய்து விடலாம். எல்லோரும் நடிகை நக்மா தான் ஜோதிகாவின் அக்கா என்று நினைத்திருப்போம். ஆனால் நக்மா ஜோதிகாவின் ஒன்றிவிட்ட சகோதரிதான். ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா ரோஷினி தான். ரோஷினியின் நிஜப் பெயர் ராதிகா சாதனா. இது ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.

    Advertisement

    கார்த்திக் உடன் நடிப்பு

    1997 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான சிஷ்யா படத்தின் மூலமாக ரோஷினி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அவருடைய சினிமா வருகைக்கும் நக்மா தான் காரணம். அவரால்தான் ரோஷினிக்கு சிஷ்யா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிஷ்யா படத்தில் அவர் நடித்திருந்த கேரக்டரை இப்போது பார்க்கும்போது கதாநாயகிகளுக்கே உரிய அந்த இயல்பான அழகு அப்படியே தெரிகிறது. அதிலும் பாடல் காட்சிகளில் கூட அதிக அலங்காரம் இல்லாமல், முகப்பாவனைங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ரோஷினியின் தனி அடையாளம்.


    அருண் விஜய்க்கு ஜோடி

    தமிழில் அறிமுகமான அடுத்த கட்டத்திலேயே ரோஷினிக்கு தெலுங்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைத்தது. 1997ல் சிரஞ்சீவி நடித்த மாஸ்டர் படத்தில் அவருடன் நடித்திருந்தார். அதற்கு பிறகு பதித்ர பிரேமா, சுப லேகலு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். கன்னடத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். 1998ல் வெளியான துள்ளித் திரிந்த காலம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்தார். பாலசேகரன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

    Advertisement

    அந்த படத்தில் ரோஷினி தேவி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் சோகமான முகபாவனையே மிகவும் பொருத்தமாக இருந்தது. அவர் சிரித்தாலும் சரி, பாடல் காட்சிகளில் இருந்தாலும் இவருக்கு என்ன நடந்தது என்ற கேள்வி முகமே கேட்பது போல இருக்கும். அதனால் தான் அந்த படத்தின் காட்சிகளை பார்க்கும்போது கூட ரோஷினி முகம் தனியாக நினைவில் நிற்கிறது.

    ஜோதிகா போட்டோவில்

    சமீபகாலமாக அவர் எங்கே போனார்? என்ன ஆனார் என்று தேடல் ரசிகர்களுக்கு இருந்தது. திருமணத்திற்கு பிறகு பெரிதாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை. இந்த நிலையில் தான் ஜோதிகா தன்னுடைய 20வது திருமண நாள் கொண்டாட்டத்தில் குடும்பத்தோடு எடுத்த போட்டோவில் ரோஷினியும் இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் எப்படி இருந்த ரோஷினி இப்போ இப்படி மாறிட்டாங்க பாருங்களேன் என்று ஆச்சரியத்துடன் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

    English Summary

    Actress Roshini : Those who watched Tamil cinema in the 90s would not easily forget the face of Jyothika's elder sister, Roshini. She captured the audience's attention within a very short span of time—appearing in films like *Sishya* alongside Karthik and *Thulli Thirintha Kaalam* with Arun Vijay. However, she suddenly stepped away from the film industry after acting in just two or three movies. Now, her photographs are going viral in the media.