பாக்யராஜ் கடைசியாக போன் செய்து தழுதழுத்த குரலில் கேட்ட விஷயம்.. நம்ப முடியல! கண்கலங்க பேசிய டி ராஜேந்தர்


  • சென்னை: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் திடீர் மறைவு திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கம்போல் காலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், திடீரென நெஞ்சுவலி இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Advertisement

    இந்த செய்தி வெளியானதிலிருந்து திரையுலகினர் பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    டி ராஜேந்தர் வருத்தம்

    அதில் அவர் மிகுந்த வேதனையுடன், "இன்று காலையில் இந்த செய்தி வந்ததும் என்னால நம்பவே முடியல. பாக்யராஜ் இறந்துட்டார்னு சொன்னாங்க. என்னுடைய துக்கத்தை எங்கே போய் சொல்வது என்று தெரியவில்லை." என்று உருக்கமாக பேசினார்.

    அதன்பிறகு, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாக்யராஜின் 50 ஆண்டு திரைப்பயண விழா குறித்து அவர் நினைவுகூர்ந்தார். "அந்த விழாவுக்கு என்னை நேரடியாக பாக்யராஜ்தான் அழைத்தார். போனில் பேசும்போது அவருடைய குரலே தழுதழுத்தது. 'நாம ரெண்டு பேரும் சமகாலத்து நடிகர்கள்... சமகாலத்து இயக்குநர்கள்... ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் வேலை பார்த்ததில்லை. ஆனாலும் நீங்க என்னுடைய நல்ல நண்பர். அதனால நீங்க வந்து என்னைப் பற்றி பேசணும்'ன்னு சொன்னாரு."

    Advertisement

    "நான் சமீப காலமாக எந்த விழாவுக்கும் போகவில்லை. ஆனா பாக்யராஜுக்காக மட்டும் அந்த மேடைக்கு போய் மனசார பேசினேன். இன்று ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், அவர் இந்த உலகத்தை விட்டு போறதுக்கு முன்னாடியே, அவரைப் பற்றி எல்லாரும் பெருமையாக பேசினதை அவர் காது குளிர கேட்டு, மனம் நிறைந்து சென்றிருக்கிறார்." என்று டி. ராஜேந்தர் கண்கலங்கினார்.

    பாக்யராஜ் நேற்று இரவு தான் போன் போட்டு 'சாரி' சொல்லி பேசினார்.. இயக்குநர் சீனு ராமசாமி உருக்கம்

    அதன்பிறகு அவர் கூறிய தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "இன்று காலை 10 மணிக்கு அவர் ஒரு முக்கியமான முடிவுக்காக செல்ல இருந்தார். எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கான நாமினேஷன் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் மரணம் அவரை அழைத்துச் சென்றுவிட்டது." என்று கூறிய அவர், தனது பாணியில் அனைவரையும் நெகிழ வைத்த ஒரு வரியையும் பேசினார்.

    Advertisement
    பாக்யராஜ் இறுதி அஞ்சலியில் நடந்த சம்பவம்.. கையெடுத்து கும்பிட்ட ராதிகா.. உருக்கமான வேண்டுகோள்

    "எழுத்தாளர் சங்கத்தில் நாமினேஷன் போடணும்னு இருந்தவர்... எமலோகத்துக்கே நாமினேஷன் போட போயிட்டாரு போல. கதை, திரைக்கதை எழுதுவதற்காக இறைவனே அவரை மேலே கூட்டிட்டு போயிட்டாரோன்னு தோணுது." என்று உருக்கமாக பேசியுள்ளார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.
    "காலை 10 மணிக்கான திட்டமே நிறைவேறாமல் போய்விட்டதே...", "வாழ்க்கை ஒரு நொடியில் மாறிவிடுகிறது", "டி.ஆரின் வார்த்தைகள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது" என்று ரசிகர்கள் உருக்கமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    Advertisement

    பாரதிராஜா மறைவின் சோகம் இன்னும் மறையாத நிலையில், அவரின் சீடராக தொடங்கி தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னனாக உயர்ந்த பாக்யராஜின் திடீர் மறைவு, ரசிகர்களின் மனதில் நீங்காத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

    English Summary

    K. Bhagyaraj : The sudden demise of legendary filmmaker K. Bhagyaraj has left the Tamil film industry in deep shock. Paying an emotional tribute, actor and director T. Rajendar revealed that Bhagyaraj had personally called him in a trembling voice to invite him to speak at his 50-year cinema celebration. Rajendar also disclosed that Bhagyaraj was preparing to file his nomination for the Writers' Association leadership on the morning of his passing. His heartfelt memories and emotional words have deeply moved fans and members of the film fraternity.