பாக்யராஜ்க்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு சென்ற குஷ்பூ.. சாந்தனு செய்த செயல்.. கலங்கிய சுந்தர் சி


  • சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் மறைவு இன்னும் தமிழ் திரையுலகினரால் ஜீரணிக்க முடியாத சோகமாகவே உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற குஷ்பூ மகள் அவந்திகாவின் திருமணத்தில், பட்டு வேட்டி - சட்டையில் சிரித்த முகத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பாக்யராஜ், இன்று புகைப்படமாக மட்டுமே இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரது நண்பர்களும், திரையுலகினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Advertisement

    அந்த வரிசையில், நடிகை குஷ்பூ மற்றும் அவரது கணவர், இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் இன்று நேரில் பாக்யராஜ் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

    Advertisement

    ஆறுதல் சொன்ன சுந்தர் சி

    பாக்யராஜின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு, அருகில் நின்றிருந்த மகன் சாந்தனுவை பார்த்ததும் குஷ்பூ உணர்ச்சிவசப்பட்டார். உடனே அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறிய காட்சி, அங்கிருந்த பலரது கண்களையும் கலங்க வைத்தது. அருகில் நின்றிருந்த சுந்தர்.சியும், "இப்படி நடக்கும் என்று யாருமே நினைக்கவில்லை" என்பதுபோல் பூர்ணிமா, சாந்தனு மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த காட்சி ரசிகர்களிடம் இன்னும் அதிகமான எமோஷனல் ஏற்படுத்தியதற்கு காரணம், சில நாட்களுக்கு முன்பே கோவாவில் நடைபெற்ற அவந்திகாவின் திருமணத்தில் பாக்யராஜ் மகிழ்ச்சியாக கலந்து கொண்டு, அனைவருடனும் சிரித்துப் பேசி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததே. அந்த விழாவில் குஷ்பூ குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தவர், சில மணி நேரங்களிலேயே மறைந்து விட்டார் என்ற உண்மையை பலராலும் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    Advertisement
    பாக்யராஜ் கடைசியாக கொடுத்த சர்ப்ரைஸ்.. என் வாழ்க்கையில் மறக்க முடியாது! பூர்ணிமா உருக்கம்

    குஷ்பூ வெளியிட்ட பதிவு

    பாக்யராஜ் மறைந்த செய்தி வெளியான உடனேயே, குஷ்பூ தனது சமூக வலைதளத்தில் உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டு, "உங்களுடன் இருந்த தருணங்கள் என்றும் என் நினைவில் இருக்கும். மிஸ் யூ" என்று வேதனையை பகிர்ந்திருந்தார்.

    அதன் பிறகு, மகளின் திருமணத்தில் எடுத்த குடும்ப புகைப்படத்தை குஷ்பூ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தபோது, சிலர் அதை விமர்சித்தனர். அதற்கு பதிலளித்த அவர், "என் மகளின் திருமணம் நடந்து 48 மணி நேரம்தான் ஆகிறது. மகிழ்ச்சியாக இருக்க எனக்கும் உரிமை இருக்கிறது. பூர்ணிமாவை யாருக்கு நன்றாக தெரியும்... உங்களுக்கா? எனக்கா?" என்று நேரடியாக பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    அந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்திருந்தாலும், தனது நண்பரின் குடும்பத்தை மறக்காமல் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திருமண மகிழ்ச்சிக்கும், நண்பரை இழந்த துக்கத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு குடும்ப நண்பராகவே குஷ்பூ நடந்து கொண்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், தனது சமூக வலைதளத்தில் மகள் அவந்திகாவின் திருமணம் தொடர்பான நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து வரும் குஷ்பூ, மறுபுறம் பாக்யராஜின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருப்பதும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

    English Summary

    K. Bhagyaraj: Actress Khushbu and filmmaker Sundar C visited the residence of legendary director K. Bhagyaraj to pay their final respects following his demise. After offering floral tributes to Bhagyaraj's portrait, Khushbu emotionally embraced his son Shanthanu and consoled the grieving family, while Sundar C also expressed his condolences to Poornima, Shanthanu, and other family members. The emotional visit comes just days after Bhagyaraj attended Khushbu's daughter Avantika's wedding in Goa, where he was seen happily celebrating with the family. Fans have been touched by the contrast between those joyful moments and the tragic loss. Khushbu, who had earlier shared a heartfelt condolence message and later defended herself against criticism over a wedding-related social media post, has now once again shown her support by standing beside Bhagyaraj's family during their time of grief.