சென்னை: நீட் தேர்வு முறைகேடு விவாகரத்துக்கு எதிராக சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்ற மாணவர் ஆதரவு போராட்டம் கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி பேசியபோது ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் நடிகை காஜல் பசுபதி கூறிய கருத்துக்கள் சோசியல் மீடியாவில் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
மாணவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்காக மேடை எறிய சனம் ஷெட்டி தாம் நீட் விவாகரத்துக்காகவே வந்ததாக கூறியதுடன் இந்த மேடையை அரசியல் அஜெண்டாவுக்காக பயன்படுத்துபவர்கள் ஜோக்கர்கள் என்றும், நான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை.. நேற்று தான் ஜனநாயகன் பார்த்துவிட்டு இங்கே வந்தேன் என்றும் கூறினார். இந்த பேச்சுக்கு கூட்டத்தில் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவரை பேசவிடாமல் தடுத்தனர்.
நடிகை சனம் ஷெட்டி பிரச்சனை
பிறகு அவரது கையில் இருந்த மைக்கை வாங்கி கொண்டதால் தனது பேச்சை முழுமையாக முடிக்க முடியாமல் வெளியேறினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி மாணவர்களுக்காக தான் வந்தேன் ஆனால் நான் பேசிக் கொண்டிருந்த போதே மைக்கை பிடிங்கி விட்டார்கள். இது ஜனநாயகமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக திருப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவாதாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் நடிகை காஜல் பசுவதி அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும் போதும் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் வெளியே மாணவர்கள் சாப்பிடாமல் போராட்டம் பண்ணிட்டு இருக்கும்போது நான் தளபதி படம் பார்த்துட்டு வந்தேன்னு சொல்லுவ... படம் பாக்குறது உன் விருப்பம் ஆனால் அந்த மேடையில் அதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் தளபதினு சொன்னா விசில் அடிப்பாங்கன்னு நெனச்சாங்கபோல... ஆனா இது அந்த காலம் இல்லை என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார். காஜல் பசுபதி இப்படி பேசியதும் ஒரு தரப்பு மாணவர்களின் பிரச்சனையை பேசப்படும் இடையில் திரைப்படத்தையும் நடிகரையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று காஜல் பசுபதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மற்றும் சிலர் சனம் மாணவர்களுக்கு ஆதரவாகவே வந்திருந்தார். அவருடைய கருத்தை தெரிவிக்க முயன்ற போது மைக்கை பிடுங்கியதும் தப்புதான் என்றும் சொல்லி வருகிறார்கள். இந்த விவாதம் தான் இப்போ சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கிறது.நடிகை காஜல் பசுபதி கேள்வி
ரசிகர்கள் கருத்து