கனகா வீட்டுக்கு போன குட்டி பத்மினி.. ஸ்விக்கி சாப்பாடு, பித்தளை பூட்டு.. முடக்கிய சொத்து விவகாரம்

  • சென்னை: நடிகை கனகா இப்படி தனிமையில் வசித்து வருவது எனக்கு மனவருத்தத்தை தருகிறது. அந்த வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் கூட கொஞ்ச நாட்களுக்கு பிறகே வெளியுலகிற்கு தெரியவரும் சூழல் உள்ளது.. ஏனென்றால் அவரது வீட்டில் உதவியாளர்கள் யாருமே இல்லை.. சாப்பாடு கூட ஸ்விக்கி மூலமே வருகிறது" என்று அக்கறையும், வேதனையும் கலந்த குரலில் தெரிவித்துள்ளார் சீனியர் நடிகை குட்டி பத்மினி.

    Advertisement

    Wow Tamizha சேனலுக்கு பேட்டி தந்துள்ள குட்டி பத்மினி, "ரசிகர்களும் கேபி டிவி நேயர்களும் தொடர்ந்து என்னிடம்,"கனகாவை நேரில் சென்று சந்தித்து, அவர் எப்படி இருக்கிறார்? அவரது நலன் குறித்து சொல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.. அதனால் கனகாவை சந்திப்பதற்காக போனேன்.

    Advertisement

    அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. சாதாரண பூட்டு கிடையாது.. மிகப் பெரிய பித்தளை பூட்டு போடப்பட்டிருந்தது. வீடு பராமரிப்பு எதுவுமே இல்லாமல் பழமையாக இருந்தது.. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, "கனவா எப்போது வருவார்? எப்போது வெளியே போவார்? என்றெல்லாம் யாருக்குமே தெரியாது" என்றனர்.

    காபி ஷாப்பில் கனகா

    நான் காரிலேயே காத்திருந்தேன். அந்த நேரத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெண்மணி இறங்கினார். உடனே என்னுடைய டிரைவர், 'அம்மா, பார்க்குறதுக்கு கனகா போலவே உள்ளது" என்றார். திரும்பி நான் பார்த்தபோது கனகா தான் நின்று கொண்டிருந்தார். உடல் எடை கொஞ்சம் அதிகரித்திருந்தது.

    Advertisement

    என்னை பார்த்ததுமே அன்புடன், "அக்கா, எப்படி இருக்கிறீங்க? நல்லா இருக்கிறீர்களா?' என்று விசாரித்தார். நான், "என்ன கனகா, உன்னை பார்க்கவோ பேசவோ முடிவதில்லையே... எப்படி இருக்கிறாய்?' என்று கேட்டேன்.. அதற்கு அவர், வாங்க அக்கா, நாம பக்கத்திலுள்ள காபி-ஷாப்புக்கு போய் பேசுவோம்" என்று கூப்பிட்டார்.

    காபி ஷாப்பில் உட்கார்ந்து நாங்கள் பேசினோம்.. "ஏன் இப்படி தனியாக இருக்கிறாய்? உனக்கு என்ன குறை? உன் அம்மாவுக்கு நீ ஒரே செல்ல மகளாச்சே?" என்று கேட்டேன். அதற்கு கனகா, "அப்பா செய்த காரியத்தால் ரொம்பவே மன வேதனை, அப்செட் ஆகிவிட்டேன்" என்றார்.

    Advertisement

    சொத்துக்கள் - புதிய வீடு

    நான் உடனே, "பரவாயில்லை, நடந்ததை கடந்துவிடு. அவர் கேட்ட சொத்துக்களை சமரசம் செய்து தந்துவிட்டாய்.. நீ உன் கடனை தீர்த்துவிட்டதாக நினைத்து கொள்.. இனி உனக்கு என்ன உதவி வேண்டும் என்று என்னிடம் சொல்.. நீ எப்போதுமே நன்றாக வாழ வேண்டும். இந்த வீட்டை இடித்துவிட்டு புதுசா கட்டுவதற்கு யாரையாவது ஏற்பாடு செய்யட்டுமா?" என்று கேட்டேன்.

    அதற்கு கனகா, "இல்லை அக்கா, இந்த இடத்தை விற்றுவிட்டு வேறு இடத்தில் வாங்க போகிறேன்" என்றார்.. உடனே நான், "இன்றைக்கு நல்ல கட்டுமான வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகளுடன் நவீன அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டை தேர்ந்தெடுத்துக் கொள்... அங்கெல்லாம் அனுமதியில்லாமல் யாருமே நுழைந்துவிட முடியாது.. செக்யூரிட்டி பலமாக இருக்கும்" என்று சொன்னேன்..

    Advertisement

    கையப்படுத்திய அரசு நிலம்

    உடனே "எனக்குச் சொந்தமான நிலம் ஒன்றை அரசு கையகப்படுத்தியது.. ஆனால் அதற்கான தொகையை இன்னும் தரவில்லை" என்றார்.

    அதற்கு நான், "நீ என்னுடன் வா. நாம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்போம். அவர் நிச்சயம் உனக்கு உதவுவார். நடிகை வாணிஸ்ரீக்கு கூட பெரிய அளவில் உதவி செய்துள்ளார்.. உன்னையும் அழைத்துச் செல்கிறேன்... எந்த போன் வந்தால், அவாய்டு செய்யாதே.. என்ன உதவி தேவைப்பட்டாலும் நான் செய்கிறேன்... மற்றவர்களை பார்த்து பயப்படுவது போல் என்னை பார்த்து பயப்படாதே.

    செல்போன் ஸ்விட்ச் ஆப்

    நான் குழந்தையாக இருந்ததில் இருந்தே உன் அம்மா எனக்கு பழக்கம். எனக்கு சோறு பிசைந்து ஊட்டி விட்டுள்ளார்.. அதனால் உனக்கு உதவுவது எனது கடமை. மனப்பூர்வமாக உனக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்கிறேன். நல்ல வக்கீலையும், ஆடிட்டரையும் ஏற்பாடு செய்து தருகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்தேன்.

    Advertisement

    நேரில் பேசியபோது கனகா, கேஷூவலாகவே பேசினார். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தோன்றவில்லை. அவருக்குத தேவைப்படும் நேரத்தில் மட்டும் மெசேஜ் அனுப்பிவிட்டு செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்துவிடுகிறார்..

    ஸ்விக்கி சாப்பாடு

    ஆனால் இப்படி அவர் தனிமையில் வசிப்பது எனக்கு மனவருத்தத்தை தருகிறது. வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் கூட கொஞ்ச நாட்களுக்கு பிறகே வெளியுலகிற்கு தெரியவரும் சூழல் உள்ளது.. ஏனென்றால் வீட்டில் உதவியாளர்கள் யாருமே இல்லை.. சாப்பாடு கூட ஸ்விக்கி மூலமே வருகிறது.

    யார் வந்தாலும் நம்மை ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயத்திலேயே அவர் தள்ளப்பட்டுள்ளார். சரியான தருணத்தில் ஆன்மீகத்தை நோக்கி நகரவில்லையானால், அது மனதையும் பெரிதும் பாதித்துவிடும். கனகாவால் யாரையும் நம்ப முடியாத நிலை உருவாகியுள்ளது." என்றெல்லாம் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்.

    English Summary

    Kanaka’s Lonely Life.. Swiggy Food, Brass Lock & Property Dispute Revealed by Kutty Padmini