கன்னியாகுமரி இன்ஸ்டா பிரபலம் வீட்டில் 118 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை.. வீடியோவால் வந்த வினை!

  • சென்னை: சோசியல் மீடியாவில் பூண்டு மிளகு சர்ச்சை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் போது, தன்னுடைய தினசரி அப்டேட், ரிலீஸ் வீடியோவால் பிரபலமான மதுமிதா வீட்டில் 118 சவரன் நகை திருடு போன விஷயம் தான் சோசியல் மீடியாவை அதிர வைத்திருக்கிறது. மாதா மாதம் நான் நகை வாங்கி விடுவேன் நீங்களும் வாங்கிடுங்க.. என்று வீடியோ போட்ட மதுமிதாவிற்கு திருடர்கள் அதிர்ச்சி கொடுத்து விட்டு போய்விட்டார்.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்து கோணம் பகுதியில் அமைந்துள்ள விஐபி கார்டனில் யூடியூபர் மதுமிதா தனது கணவர் வினோத்குமார் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஷாப்பிங் செல்ல வெளியே போயிருந்தவர் இரவு நீண்ட நேரம் ஆகி தான் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

    Advertisement

    இன்ஸ்ட்டா பிரபலம் வீட்டில் திருட்டு

    உடனே வீட்டிற்குள் ரகசிய அறைக்கு சென்று செக் பண்ணிய போது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை யாரோ கொள்ளை அடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனே இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் மதுமிதா புகாரை கொடுத்திருந்த நிலையில் போலீசார் விசாரிகளை செய்து வருகிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சூர் நாகர் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தடயவியல் வல்லுநர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கொள்ளை நடந்த வீட்டில் கிடைத்த கைரேகை பதிவுகளை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். திருடு போன நகை பணம் எல்லாம் சேர்த்து மொத்தம் 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சம்பவ ஏரியாவில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை சேகரித்தும் செல்போன் டவரில் பதிவான எண்களை சேகரித்தும் கொள்ளையர்கள் நெருங்கி இருப்பதாக தெரிகிறது.

    Advertisement

    நகை, பணம் விளம்பரம்

    அவர்கள் பிடிக்கப்பட்டால் மட்டுமே யூடியூபர் மதுமிதா வீட்டில் நடந்த கொள்ளையின் முழு பின்னணியும் தெளிவாகும். மதுமிதாவை சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். என்னிடம் 4 தங்க செயல் தாலி இருக்கிறது. அதுவும் 15 பவுன் தங்க செயின் தான் எனக்கு பிடிக்கும், இதற்கு மேலே 40 பவுன் தங்கச் தாலி பதித்திருக்கிறேன் அது எப்பவும் போட மாட்டேன்.. பங்க்ஷன் நேரத்தில் மட்டும்தான் போடுவேன் என்று ஒவ்வொரு நாளும் தன்னுடைய நகைகளை பற்றி பெரு..மையாக சொல்லி தனது வியூவர்ஸுகளுக்கு வயிறு எரிய வைத்துக் கொண்டு இருப்பார்.

    Advertisement
    புது கார் வாங்கிய இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி.. ரசிகர்கள் கேட்பது இதுதான்! என்னம்மா யோசிக்கிறாங்க!

    சர்ச்சை வீடியோ

    அது மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசீந்திரம் கோவிலில் கருவறைக்குள் சென்று வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கி இருந்தார். அதற்குப் பிறகும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வீடியோக்கள் வெளியிட்டு வரும் இவர் தான் ஒவ்வொரு மாதமும் ஒரு நகை வாங்கி விடுவேன் அதை என்னுடைய ஃபாலோவர்ஸ்களிடம் சொல்வதால் பலர் என்னிடம் நாங்களும் நகை வாங்கியிருக்கிறோம் என்று கமாண்டுகளில் சொல்கிறார்கள். அதை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.. அவர்கள் வாங்குவது கூட நானே வாங்கியது போல இருக்கிறது என்று சந்தோஷத்துடன் வீடியோ வெளியிட்ட அதே நாளில்தான் அவருடைய வீட்டிலும் திருடு போயிருக்கிறது.

    Advertisement
    சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் இன்ஸ்டா பதிவு.. மொத்த வதந்திகளுக்கும் இதுதான் பதிலா? குவியும் கமெண்ட்ஸ்

    நெட்டிசன்கள் கருத்து

    தனது வீடு பற்றியும், வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறைகள் பற்றியும் வீடியோக்கள் வெளியிட்டே திருடர்களுக்கு இவரே வழிவகுத்துக் கொடுத்துவிட்டார் என்றும், எங்க போகிறேன் என்ன வேலை விஷயமாக போகிறேன் என்று எல்லா விஷயத்தையும் தினசரி அப்டேட் ரீல்ஸ்களில் சொல்லி சொல்லி ஒரு சினிமா பட காட்சி போல இவருடைய கதையும் மாறிவிட்டதே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது.

    English Summary

    Kanyakumari : Kanyakumari insta influencer: social media, the news that 118 sovereigns of gold jewelry had been stolen from the home of Madhumitha—popular for her daily updates and release videos—has truly shaken the online community. Thieves dealt a shocking blow to Madhumitha, who used to post videos encouraging others to buy gold every month just as she did.