சென்னை: ஒரு படம் வெற்றி பெறுவதற்கு கதை முக்கியம் என்றால், அந்த படத்தை பார்த்த பிறகும் ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடல்கள் அந்த வெற்றியை இன்னும் அழகாக்கும். அப்படித்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'டோரதி' படத்திலும் இளையராஜாவின் இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் படக்குழுவினர், இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
டோரதி படத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ், முத்துக்குமார், சௌந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருநங்கைகளின் காதல் உணர்வுகளை பேசும் கதைக்களம் ஒரு பக்கம் கவனம் பெற்ற நிலையில், படத்தின் இசையும் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. கதையின் உணர்வுகளை இசை வழியாக கடத்துவதில் இளையராஜாவுக்கு இருக்கும் அனுபவம் இந்த படத்திலும் அழகாக தெரிகிறது.
காலில் விழுந்த இயக்குனர்
படத்தின் வெற்றியை தொடர்ந்து சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் வெற்றி விழாவைக் கொண்டாடிய படக்குழுவினர், அடுத்ததாக இளையராஜாவைச் சந்தித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் அவரிடம் ஆசி பெற்றனர். அப்போது கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றதுடன், அவருக்கு சந்தன மாலையும் அணிவித்து தனது மரியாதையை காட்டினார். பின்னர் படக்குழுவினர் கொண்டு சென்ற கேக்கையும் இளையராஜா வெட்டினார்.
'டோரதி' படத்தின் வெற்றிக்கு அதன் கதை ஒரு முக்கியமான காரணம் என்றாலும், பாடல்களையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சில படங்களில் பாடல்கள் வந்ததும் கேட்டுவிட்டு மறந்துவிடுவோம். ஆனால், சில பாடல்கள் படத்தோடு சேர்ந்து மனதில் தங்கிவிடும். அந்த வகையில், 'டோரதி' படத்தின் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதிலும் இந்தப் படத்தில் வந்த முத்து மணி மாலை, கல்யாண விருந்து பாட்டு இன்ஸ்டா ரீல்ஸ்களிலும் கலக்கி கொண்டிருக்கிறது. இளையராஜாவின் இசையில் இருக்கும் தனிச்சிறப்பு என்னவென்றால், காட்சியின் உணர்வுக்கு ஏற்ற இசையைக் கொடுத்து, அந்தத் தருணத்தை இன்னும் அழுத்தமாக மனதில் பதிய வைப்பதுதான். அதனால்தான் அவருடைய பாடல்கள் பல ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. 'டோரதி' படத்தின் வெற்றியைக் கொண்டாடும் இந்த நேரத்தில், அந்த இசைக்காக இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருப்பது படக்குழுவின் மகிழ்ச்சியையும் மரியாதையையும் காட்டுகிறது.பாடல்கள் வெற்றி
டோரதிக்காக கார்த்திக் சுப்புராஜ் கேட்டது ஒன்று.. ஆனால் இளையராஜா கொடுத்தது வேற! பின்னணி சுவாரசியம்
கொண்டாடும் மனது
டோரதி பார்த்து விட்டு இளையராஜா சொன்னது.. முத்துமணி பாடல் உருவானது பற்றி கார்த்திக் சுப்புராஜ் உருக்கம்