சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் பயணத்தை ஒரே படம் தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு தற்போது மிகப்பெரிய உதாரணமாக மாறியுள்ளது நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம். கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தவித்த சூர்யாவுக்கு, ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய 'கருப்பு' திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் வெளியாகிய இந்த படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் குடும்ப பார்வையாளர்களிடமும் அபார வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கருப்பசாமி வழிபாட்டை மையமாக வைத்து ஃபேண்டசி, ஆக்ஷன், சென்டிமென்ட், த்ரில் என அனைத்து அம்சங்களையும் கலந்த திரைக்கதையை உருவாக்கியிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. சூர்யாவுடன் த்ரிஷா இணைந்து நடித்திருந்தது ரசிகர்களுக்கு கூடுதல் ஈர்ப்பாக அமைந்தது.
படம் வெளியாகி நான்கு வாரங்களை கடந்த நிலையிலும் 'கருப்பு' இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 28-வது நாளில் மட்டும் இந்தியாவில் சுமார் 37 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழ்நாடு மட்டுமே சுமார் 30 லட்சம் ரூபாய் வசூலை வழங்கியுள்ளது. மாலை மற்றும் இரவு காட்சிகளில் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 28-வது நாளிலும் சுமார் 877 ஷோக்களில் படம் திரையிடப்பட்டிருப்பது படத்தின் வரவேற்பை வெளிப்படுத்துகிறது. முதல் வாரத்தில் 113.85 கோடி ரூபாய் வசூலுடன் அதிரடி தொடக்கத்தை பெற்ற 'கருப்பு', இரண்டாவது வாரத்தில் 54.30 கோடியும், மூன்றாவது வாரத்தில் 21.20 கோடியும் வசூல் செய்தது. தற்போது உலகம் முழுவதும் படம் 340 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் 'கருப்பு' முதலிடத்தை பிடித்துள்ளது. 'கருப்பு' வெறும் வசூல் சாதனை மட்டுமல்ல. நீண்ட காலமாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு இது புதிய உயிர் கொடுத்த படம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்த சூர்யா, சமீப ஆண்டுகளில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் இருந்த நிலையில், 'கருப்பு' அவரது மார்க்கெட்டை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய 'கருப்பு' தற்போது Amazon Prime Video தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள் தற்போது வீட்டிலிருந்தே படத்தை ரசித்து வருகின்றனர். திரையரங்குகளில் 340 கோடி வசூல் சாதனை படைத்த 'கருப்பு', ஓடிடியிலும் புதிய சாதனைகளை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.28-வது நாளிலும் குறையாத வசூல்
கருப்பு பட வசூல் நிலவரம்
340 கோடி கிளப்பில் இணைந்த கருப்பு
Karuppu OTT: ஓடிடியில் வரும் கருப்பு.. அதுவும் எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? வெளியான தகவல்
சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய படம்
ஓடிடியிலும் தொடங்கிய வசூல் வேட்டை
சூர்யாவின் கம்பேக் மட்டும் அல்ல... தமிழ் சினிமாவின் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் 'கருப்பு' தனது பெயரை பதித்து விட்டது என்பதில் சந்தேகமே இல்லை.