கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல்


  • சென்னை: நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் வசூலில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், படத்தை சுற்றி புதிய சர்ச்சை ஒன்று சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் கதை தூத்துக்குடி ஆறுமுகநேரி ஹைகோர்ட் மகாராஜா சம்பவத்தை தழுவியது என்ற பேச்சு ஓடிய நிலையில், இப்போது 90களின் பிரபல சீரியல் ஆன விடாது கருப்பு உடன் ஒப்பிட்டு புதிய விவாதம் கிளம்பியுள்ளது.

    Advertisement

    ஹைகோர்ட் மகாராஜா கதையா?

    ஆர்.ஜே. பாலாஜி சொன்ன பதில் கருப்பு வெளியானதிலிருந்து, "இந்த கதை உண்மை சம்பவத்தை தழுவியது" என்ற பேச்சு இணையத்தில் பரவியது. குறிப்பாக தூத்துக்குடி ஆறுமுகநேரியில் உள்ள ஹைகோர்ட் மகாராஜா சம்பவத்தோடு படத்தை இணைத்து பலர் கருத்து தெரிவித்தனர்.

    Advertisement

    இதற்கு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். "அந்த கதையை நான் இன்ஸ்டாகிராம் வழியாகத்தான் பின்னர் தெரிந்து கொண்டேன். உண்மையில் மாசாணி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டபோது, நீதிமன்றத்திலேயே நீதி கிடைக்கவில்லை என்றால் கருப்பசாமி நேரடியாக வந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் இருந்து இந்த கதை உருவானது" என்று கூறியிருந்தார்.

    இப்போது புதிய சர்ச்சை

    இந்த விவாதம் அடங்கும் முன்பே, இப்போது வேறொரு விஷயம் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. 90களில் வெளியான விடாது கருப்பு சீரியலில் வந்த ஒரு காட்சியின் கருவையே முழு திரைப்படமாக மாற்றியிருக்கிறார்கள் என்று சிலர் கூறி வருகின்றனர்.

    Advertisement

    அந்த சீரியலில் நடிகை தேவதர்ஷினி செய்தியாளர் கதாபாத்திரத்தில் ஒரு ஊருக்கு செல்வார். அங்கு போலீசார் மீட்ட நகைகளை உடனே உரியவர்களிடம் ஒப்படைப்பதை பார்த்து ஆச்சரியப்படுவார். அப்போது "நீதிமன்றத்துக்கு போனால் இவ்வளவு சீக்கிரம் கிடைக்காது" என்ற உரையாடல் வரும்.

    அதற்கு அங்கிருந்த ஒருவர், நீதிமன்றத்துக்கு போனா நகை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காதா? என்று கேட்பார். அதற்கு தேவதர்ஷினி நீதிமன்றத்துக்கு போனால் அந்த நகை நமக்கு முழுசா கிடைக்காது என்று சொல்வார். அப்போது பக்கத்தில் இருந்த இன்னொரு பெண் இது கருப்பசாமி பூமி "எங்கள் கருப்பசாமி நீதியை தாமதப்படுத்த மாட்டார்" என்று கூறுவார். இந்த கருவையே கருப்பு படத்தின் முழு கதையாக விரிவாக்கியிருக்கிறார்கள் என்பதே தற்போது சிலரின் வாதம்.

    Advertisement

    கருப்பு படத்தின் கதை

    கருப்பு படத்தில், கேரளாவில் இருந்து சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் அப்பா-மகள் முக்கிய கதாபாத்திரங்கள். அவர்களிடம் இருந்த நகை திருடப்படுகிறது. பின்னர் அது மீட்கப்பட்டாலும், காவல் நிலையத்திலேயே ஒரு பகுதி நகை மாயமாகிறது.

    நீதிமன்றம் வழியாக நீதி பெற முயன்றும் விஷயம் நீள்கிறது. அப்போது கருப்பசாமியின் உருவமாக சூர்யா களமிறங்கி, நீதிமன்றத்திலேயே வாதிடுகிறார். இதுதான் விடாது கருப்பு சீரியலின் அந்த கருவை நினைவுபடுத்துகிறது என்று சமூக வலைதளங்களில் சிலர் கூறி வருகின்றனர்.

    கலாய்க்கும் இணையவாசிகள்

    இதையடுத்து இணையத்தில் மீம்ஸ்களும் கிண்டல்களும் குவிந்து வருகின்றன. "அரைமணி நேர சீரியல்காட்சியை மூன்று மணி நேர படமாக்கிட்டாங்களா?", "கரு ஒன்றாக இருக்கலாம்... ஆனா இவ்வளவு ஒற்றுமையா?", "இது தழுவலா... இல்ல நீட்டிப்பா?" என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Advertisement

    ரசிகர்கள் கொடுக்கும் பதிலடி

    மறுபக்கம் சூர்யா ரசிகர்கள் அமைதியாக இல்லை. "ஒரே மாதிரி ஒரு கரு இருப்பதாலே முழு கதையும் ஒன்றாகிவிடாது. நீதிமன்றம், நீதி, பொதுமக்கள் பிரச்சனை போன்ற விஷயங்கள் பல படங்களில் வந்திருக்கின்றன. அதனால் எல்லாம் காப்பி என்று சொல்ல முடியுமா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    சர்ச்சையிலும் வசூல் வேட்டை

    இந்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருந்தாலும், கருப்பு படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் தெரியவில்லை. குடும்ப ரசிகர்கள், பெண்கள், பொதுமக்கள் என பல தரப்பினரிடமும் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த பெரிய திரை வெற்றியாக இந்த படம் மாறியிருக்கிறது.

    Advertisement

    உண்மை என்ன?

    ஒரு கரு, ஒரு யோசனை, ஒரு காட்சி இவை பல படைப்புகளில் ஒத்துப்போகலாம். ஆனால் அதையே முழுக்க காப்பி என்று கூறுவது சரியா என்பது இன்னும் விவாதமாகவே உள்ளது. ஆனால் தற்போது இணையவாசிகள் சொல்லும் ஒரு வரி மட்டும் வைரல்:‌ "கருப்பு படம் வெறும் ஹிட் படம் இல்லை... தினமும் புதிய சர்ச்சை உருவாக்கும் படம்!"

    English Summary

    Suriya’s blockbuster Karuppu is facing a fresh wave of social media controversy, with some netizens claiming the film’s core idea resembles a scene from the iconic 90s Tamil serial Vidaathu Karuppu. The debate began after viewers pointed out similarities between a serial episode involving justice, stolen jewellery, and faith in Karuppasamy, and the film’s courtroom-centered storyline. This comes shortly after another discussion linking the film to the High Court Maharaja folklore, which director RJ Balaji had already addressed, saying the idea came from a spiritual thought during a temple visit. While critics online are mocking the similarities, Suriya fans argue that sharing a broad concept does not automatically make it a copy. Despite the controversy, Karuppu continues its strong box office run without visible impact.