Karuppu OTT: ஓடிடியில் இன்று வெளியான கருப்பு” படம்.. ஆரம்பமே அசத்தல்! இனி காத்திருக்கும் பெரிய பஞ்சாயத்து?


  • சென்னை: 13 ஆண்டுகளாக ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு, அந்த ஏக்கத்தை ஒரே படத்தில் முடிவுக்கு கொண்டு வந்தது 'கருப்பு'. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.340 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

    Advertisement

    ஆனால் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது வசூல் சாதனை அல்ல. தியேட்டர்களில் இன்னும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் 'கருப்பு', தற்போது Amazon Prime Video ஓடிடி தளத்திலும் வெளியாகி இருப்பதுதான்.

    Advertisement

    கருப்பு ஓடிடி ரிலீஸ்

    ஏனென்றால் சமீப காலங்களில் தியேட்டரில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பல படங்கள், ஓடிடியில் வெளியான பிறகு கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம், கொண்டாட்டம், விசில் சத்தம் ஆகியவற்றுக்கு மத்தியில் ரசிக்கப்பட்ட காட்சிகள், வீட்டில் அமைதியாக பார்க்கும்போது அதே தாக்கத்தை ஏற்படுத்தாமல் போன சம்பவங்களும் நிறைய இருக்கின்றன.

    அதே நேரத்தில் தியேட்டரில் கவனிக்கப்படாமல் போன சில படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை அள்ளியதும் உண்டு.
    அதனால் தான் தற்போது 'கருப்பு' திரைப்படத்தின் உண்மையான தேர்வு ஆரம்பமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

    Advertisement

    தியேட்டரில் இன்னும் ராஜாங்கம்

    பொதுவாக ஒரு படம் தியேட்டர் பயணத்தை முடித்த பிறகே ஓடிடிக்கு வரும். ஆனால் கருப்பு இன்னும் சில திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே Amazon Prime Video-வில் வெளியாகியுள்ளது. இதனால் இதுவரை படம் பார்க்காதவர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே தியேட்டரில் பார்த்த ரசிகர்களும் மீண்டும் படத்தை பார்க்கத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் #KaruppuOnOTT என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    ஆர்.ஜே. பாலாஜியின் நெகிழ்ச்சி பதிவு

    இந்த சூழலில்தான் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, நடிகர் சூர்யாவுடன் இரவு நேரத்தில் காரில் பயணம் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார். "முதல் நாளிலிருந்தே நீங்கள் வைத்த நம்பிக்கையே இந்த வெற்றிக்கு காரணம். என் வாழ்க்கையை மாற்றிய மனிதர் நீங்கள்" என்று சூர்யாவை புகழ்ந்த அவர், "Karuppu Happened" என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.

    Advertisement

    வசூல் சாதனை

    40 கோடி வசூல் சாதனையை கருப்பு ஏற்கனவே பதிவு செய்து விட்டது. ஆனால் ஓடிடி ரசிகர்கள் மிகவும் கடுமையான விமர்சகர்கள். அவர்கள் ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு லாஜிக்கையும் ஆராய்ந்து பேசுவார்கள். தியேட்டரில் வெற்றிபெற்ற கருப்பு... Amazon Prime Video-விலும் அதே மாயாஜாலத்தை நிகழ்த்துமா? அல்லது புதிய விவாதங்களுக்கு வழிவகுக்குமா? என்பதுதான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் கவனித்து வரும் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

    English Summary

    Suriya’s blockbuster film Karuppu has officially made its OTT debut on Amazon Prime Video after enjoying a highly successful theatrical run. Directed by RJ Balaji, the film emerged as one of the biggest Tamil hits of the year, reportedly crossing ₹340 crore in worldwide collections.The movie, which blends fantasy, action, emotion, and folklore elements centered around Karuppasamy worship, received strong support from both family audiences and fans during its theatrical release. Actress Trisha Krishnan played the female lead opposite Suriya, adding to the film’s widespread appeal.With its arrival on OTT, Karuppu now faces a different kind of challenge. While theatrical audiences often experience films amid fan celebrations, whistles, and packed cinema halls, streaming viewers tend to examine storylines, screenplay choices, and logic more closely. This shift has led to several recent theatrical hits receiving mixed reactions after their digital release.Interestingly, Karuppu has arrived on streaming platforms while still running in select theatres, an unusual move that reflects the film’s continued popularity. Social media has already seen a surge in discussions under hashtags related to the OTT release, with many viewers revisiting the film and others watching it for the first time.