“தியேட்டரில் 300 கோடி வசூல்… ஓடிடியில் சிக்கிய கருப்பு” சிஜி தவறு!” மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி


  • சென்னை: சூர்யாவின் வெற்றிக்காக நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த படம் என்றால் அது 'கருப்பு' தான். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பல வருடங்களாக சூர்யாவுக்கு எதிர்பார்த்த அளவிலான ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கிடைக்காமல் இருந்த நிலையில், அந்த குறையை ஒரே அடியாக தீர்த்த படம் 'கருப்பு' என்று ரசிகர்களே கொண்டாடினர்.

    Advertisement

    உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டிய இந்த படம், சூர்யாவின் கம்பேக் ஹிட்டாகவும் பேசப்பட்டது.

    Advertisement

    தியேட்டரில் பாராட்டு

    படம் தியேட்டரில் ஓடியபோது 'கருப்பு' குறித்து பெரும்பாலும் பேசப்பட்டது சூர்யாவின் ஸ்க்ரீன் பிரசென்ஸ், திரிஷாவுடன் இருக்கும் காட்சிகள், ஆர்.ஜே. பாலாஜியின் மாஸ் பிரெசன்டேஷன், சாய் அபயங்கரின் இசை, பின்புல ஸ்கோர் ஆகியவைகள்தான். அதிலும் குறிப்பாக, ஃபேண்டஸி கலந்த ஆக்ஷன் மாஸ் ட்ரீட்மெண்ட்டாக வந்த இந்த படம் குடும்ப ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் வெற்றிக்கு பின் மகிழ்ச்சியில் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு கார் பரிசாக வழங்கிய சம்பவமும் அப்போது பெரிதாக பேசப்பட்டது.

    ஓடிடியில் சிக்கல்

    ஆனால் தியேட்டரில் மாஸ் ஹிட்டான 'கருப்பு', ஓடிடியில் வெளியான பிறகு வேறு காரணத்துக்காக வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை மீண்டும் பார்த்த ரசிகர்கள், அதிலிருந்த சில CG மற்றும் VFX குறைகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

    Advertisement

    சிக்கிய காட்சிகள்

    குறிப்பாக சூர்யா சிங்கம் போன்ற தோற்றத்தில் வரும் சில காட்சிகள், ஹெட் ரிப்ளேஸ்மெண்ட் ஷாட்கள், சில ஆக்ஷன் காட்சிகளில் தெரிந்த கிராஃபிக்ஸ் குறைகள் ஆகியவை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. "இது தியேட்டரில் எப்படி மிஸ் ஆயிடுச்சு?", "300 கோடி வசூல் செய்த படத்தில இதெல்லாம் எப்படி விட்டுட்டாங்க?" என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், சமீபத்திய பேட்டியில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நேரடியாக பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது, ஒரு Head Replacement ஷாட்டை தரமாக செய்ய குறைந்தது எட்டு மாதங்கள் தேவைப்படும். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்த வேண்டும். ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் எங்களால் பணத்தை செலுத்த முடியவில்லை. அதே நேரத்தில் அந்த ஷாட்டை படத்திலிருந்து நீக்கவும் முடியாத நிலை இருந்தது என்று விளக்கியுள்ளார். ஓடிடியில் வெளியான பிறகுதான் அந்தக் காட்சிகள் அதிகமாக பேசப்பட்டாலும், அவற்றில் குறைகள் இருப்பது தங்களுக்கும் தெரியும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

    Advertisement
    கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா?

    மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி

    மேலும், "அந்த சிங்கம் காட்சியில் மிகவும் குறைவான ஷாட்டுகளையே வைத்து சமாளித்தோம். தியேட்டரில் அது பெரியதாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஓடிடியில் அது கண்டிப்பாக பேசப்படும் என்று முன்பே தெரியும்.

    ரசிகர்கள் எடுத்துக் காட்டிய தவறுகளின் ஸ்க்ரீன் ஷாட்கள் அவர்களிடம் இருப்பதைவிட என்னிடமே அதிகமாக இருக்கிறது. எல்லாமே எனக்கு தெரியும். இந்த தவறுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதில் என்னால் பெரிதாக சிறப்பாக செய்ய முடியவில்லை அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை இன்னும் சிறப்பாக திட்டமிடுவோம்" என்று பாலாஜி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    ஆனால் பாலாஜியின் இந்த விளக்கமே இப்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. "தியேட்டரில் படம் 300 கோடி வசூல் செய்து லாபம் பார்த்த பிறகு இப்போ தான் உண்மையை சொல்றாரு", "ஓடிடியில் மாட்டிய பிறகுதான் குறை ஒத்துக்கறாங்க", "அப்போ தியேட்டரில் ரசிகர்கள் கவனிக்கலன்னு தெரிஞ்சே சமாளிச்சுட்டாங்களா?" என்று பலரும் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலர், "குறை இருந்ததைக் கூட இப்பவாவது ஒத்துக்கிட்டாரே... அதுவே பெரிய விஷயம்" என்றும் கூறி வருகிறார்கள்.

    ஆர்ஜே பாலாஜி பேசியதை ஏத்துக்க முடியல! அவமானப்படுத்திட்டாரு! கமலுக்கு அடுத்து சூர்யா தான்.. போஸ் வெங்கட் ஆதங்கம்
    Advertisement

    மொத்தத்தில், தியேட்டரில் மெகா ப்ளாக்பஸ்டர் ஆக மின்னிய 'கருப்பு', ஓடிடியில் வெளியான பிறகு அதன் CG தவறுகள் காரணமாக மீண்டும் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. அதிலும், "தவறு இருந்தது உண்மை" என்று இயக்குநரே ஒப்புக்கொண்டிருப்பது இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த படமா இது, இல்ல ஓடிடியில் ட்ரோலுக்கு சிக்கிய படமா இது என்ற இரு முனைகளிலும் 'கருப்பு' இப்போது பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    Karuppu OTT Trolls: Suriya’s Karuppu, which ended his long wait for a solid theatrical blockbuster, has found itself back in the headlines for an entirely different reason after its OTT release. Directed by RJ Balaji and starring Suriya, Trisha, Indrans, and Swasika, the film became a major box office success when it released in theatres last month, grossing over ₹300 crore worldwide and emerging as one of Suriya’s biggest comeback hits.