நான் சின்ன பையன்.. சூர்யாவுக்கு தான் பாதிப்பு! கருப்பு படத்தில் தர்பூசணி காட்சி கட்.. திவாகர் வினோத விளக்கம்


  • சென்னை: நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென பிக் பாஸ் பிரபலம் திவாகர் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேற லெவல் ட்ரெண்டாக மாறியுள்ளது. படத்தின் வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டிருந்த ரசிகர்கள், இப்போது திவாகரின் confidence level-ஐ பற்றிதான் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    நடுவில் வந்த திவாகர்

    ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம், நீண்டநாள் கழித்து நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய theatrical வெற்றியாக மாறியுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் செம்ம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    Advertisement

    அந்த நேரத்தில்தான் திடீரென திவாகர் களமிறங்கி, "கருப்பு படத்தில் ஒரு காட்சி கட் ஆனதற்கு நான்தான் காரணம்" என்ற ரேஞ்சில் பேசி இணையத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

    வாட்டர்மெலன் ஸ்டார் உருவான கதை

    பிக் பாஸ் மூலம் அறிமுகமான திவாகர், தன்னை "வாட்டர்மெலன் ஸ்டார்" என்று அழைத்துக் கொள்வது ரசிகர்களுக்கு புதிதல்ல. கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிட்டபடி அசினுடன் பேசும் காட்சி ரசிகர்களுக்கு நினைவிருக்கும். அதே காட்சியை ரீகிரியேட் செய்து சமூக வலைதளங்களில் வைரலான திவாகர், அந்த ஒரு act மூலமே தன்னுடைய image உருவானது என்று பலமுறை பேசியிருக்கிறார். அதற்குப் பிறகுதான் இந்த "வாட்டர்மெலன் ஸ்டார்" பட்டமும் வந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

    Advertisement

    சர்ச்சை என்றாலே திவாகர்

    திவாகர் பெயர் வந்தாலே ஏதாவது controversy follow ஆகும் என்பது சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலரின் கருத்து. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னை சிலர் தாக்கியதாக கூறி போலீஸ் புகார் கொடுத்ததும் பெரிய சர்ச்சையாக மாறியது.

    அதுவும் அடங்குவதற்குள் இப்போது சூர்யா படத்துடன் தன்னுடைய பெயரை இணைத்து புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

    சூர்யாவுக்கே பாதிப்பு வந்திருக்குமாம்

    கருப்பு டிரெய்லரில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சி போன்ற ஒன்று இருந்ததை ரசிகர்கள் கவனித்தனர். உடனே சமூக வலைதளங்களில் சிலர் அதை கஜினி reference என்று பேச, சிலர் ஜாலியாக திவாகரையும் mention செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அந்தக் காட்சி ஏற்பாட்டில் இல்லை அதை கட் பண்ணி விட்டார்கள்.

    Advertisement

    இதைத்தொடர்ந்து வெளியிட்ட வீடியோவில் திவாகர், "அந்த சீன் கட் பண்ணியது சூர்யாவுக்கு பாதிப்பு வரக்கூடாதுன்னு தான். கஜினி படம் வந்தப்போ நான் காலேஜ் படித்துக்கொண்டு இருந்தேன். ஆனா அந்த scene என் மூலம்தான் இன்னும் பிரபலமானது" என்று கூறியிருக்கிறார்.

    ஜூனியர் சூர்யா ரெடியா? தேவ்-தியாவின் லேட்டஸ்ட் வீடியோ! ஜோதிகா கொடுத்த ரியாக்ஷன், தள்ளி நின்ற

    செல்ஃபி எடுக்குறாங்க

    அதோடு அவர் கான்ஃபிடண்டை நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போய், "நான் பைக்கில் போனாலும் 10 வயசு பசங்க கூட பின்தொடர்றாங்க. அழகான பெண்களே வந்து என்னோட போட்டோ எடுத்துக்கிறாங்க" என்றும் கூறியிருக்கிறார்.

    Advertisement

    இந்த ஸ்டேட்மெண்டுகளை கேட்ட நெட்டிசன்கள், "இந்த செல்ஃப் கான்ஃபிடன்டுக்கு அவார்டு குடுக்கணும்" என்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

    இணையத்தில் பறக்கும் மீம்ஸ்

    திவாகரின் இந்த பேச்சுக்கு சோசியல் மீடியா முழுக்க ரியாட் செய்யப்பட்டு வருகிறது. "சூர்யா படத்துக்கு பெரிய போட்டியாளர் திவாகரா?" ,"இந்த கான்ஃபிடண்டை பாட்டிலில் அடைச்சு விற்கலாம்!", "இவ்வளவு நம்பிக்கை இருந்தா வாழ்க்கையில எதுவும் impossible இல்ல!" என்று மீம்ஸ் மழை பெய்து வருகிறது. சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், "இது confidence இல்லை boss... cinematic universe!" என்று கலாய்த்து வருகின்றனர்.

    Advertisement

    ஒருபுறம் சோசியல் மீடியா கலாய் ஓடிக் கொண்டிருக்க, கருப்பு மட்டும் அமைதியாக பாக்ஸ் ஆபிஸில் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூர்யா ரசிகர்கள் காத்திருந்த பெரிய வெற்றியை இந்த படம் கொடுத்திருக்கிறது.

    English Summary

    A bizarre viral controversy has emerged around Suriya’s blockbuster Karuppu, thanks to Bigg Boss fame Divakar’s latest comments. Divakar claimed that a watermelon-related scene from the film’s trailer was removed to prevent any negative impact on Suriya, linking it to his own viral “Watermelon Star” image inspired by Ghajini. He suggested that the iconic watermelon scene became even more famous because of him, triggering widespread amusement online. Divakar further made bold claims about his popularity, saying even children follow him and women ask for selfies. His comments have sparked a meme fest across social media, with netizens joking about his confidence level. Meanwhile, Karuppu continues its successful box office run unaffected by the online chatter.