சனி பிரதோஷத்துல இறக்க புண்ணியம் பண்ணி இருக்கணும்.. பாக்யராஜ்க்கு கிடைச்சிருக்கு.. ஏனென்றால்? கஸ்தூரி விளக்கம்


  • சென்னை: திரைக்கதை மன்னன் பாக்யராஜின் மறைவு இன்னும் தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது. அவரது இறுதி அஞ்சலியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு, குஷ்பு, சரத்குமார், ராதிகா, சுந்தர் சி., பார்த்திபன் என ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தினர்.

    Advertisement

    அதேபோல் நடிகை கஸ்தூரியும் பாக்யராஜின் இல்லத்திற்கு வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் அந்த நேரத்தில் வெளியான ஒரு வீடியோ, அவரை தேவையில்லாத சர்ச்சையில் சிக்க வைத்தது.

    Advertisement

    கஸ்தூரியின் வைரல் வீடியோ

    அந்த வீடியோவில் கஸ்தூரி சிரித்தபடி ஒருவருடன் பேசிக்கொண்டு வருவது மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதைப் பார்த்த சிலர், "துக்க வீட்டுக்கு வந்திருக்கிறாரா... இல்ல வேறு நிகழ்ச்சிக்கா வந்திருக்கிறாரா?", "இப்படி சிரிச்சுக்கிட்டே வரலாமா?" என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அந்த வீடியோ சில மணி நேரங்களில் வைரலாகி, கஸ்தூரி மீதும் ட்ரோல்கள் குவிந்தன.

    கஸ்தூரி விளக்கம்

    இந்த விமர்சனங்களுக்கு தற்போது மனம் திறந்து பதில் அளித்திருக்கிறார் கஸ்தூரி. அவர் பேசும்போது, "நான் துக்க வீட்டுக்குள் போய் சிரிச்சுக்கிட்டு இருந்தது கிடையாது. அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடமே வேறு. அங்க ஒரு செய்தியாளர் ஒரு சின்ன விஷயம் கேட்டார். அதுக்கு மரியாதையா புன்னகைச்சு பதில் சொன்னேன். அதுதான். அதையே வெட்டி எடுத்து, நான் பாக்யராஜ் சார் வீட்டுக்கு சிரிச்சுக்கிட்டே வந்த மாதிரி காட்டிட்டாங்க" என்றார்.

    Advertisement

    மேலும், "அந்த வீடியோவிலேயே நான் 'இதை கூட வெட்டி ட்ரெண்ட் பண்ணிடுவாங்க பாருங்க'ன்னு சொன்னேன். ஆனால் அந்த வரிகளை மட்டும் கட் பண்ணிட்டாங்க. மீதியதை மட்டும் போட்டதால் மக்கள் வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க" என்று வருத்தப்பட்டார்.

    பாக்யராஜ் மரணம் பற்றி விளக்கம்

    அதோடு, மரணம் பற்றிய தனது பார்வையையும் கஸ்தூரி பகிர்ந்துள்ளார். "என்னுடைய அப்பா, அம்மா இறந்தபோதுகூட நான் கதறி அழல. அதனால எனக்கு பாசம் இல்லைன்னு அர்த்தமில்லை. வாழ்க்கையின் எதார்த்தத்தை நான் புரிஞ்சிருக்கேன். பிறந்த எல்லாரும் ஒரு நாள் போகத்தான் போறோம். நாம் எவ்வளவு அழுதாலும் அவர்கள் திரும்ப வரப்போறதில்லை. அதனால் அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு வாழ கற்றுக்கொள்ளணும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

    Advertisement

    பாக்யராஜின் மறைவு குறித்து பேசிய கஸ்தூரியின் வார்த்தைகள்தான் பலரையும் நெகிழ வைத்துள்ளது. "பாக்யராஜ் சார் ரொம்ப புண்ணியம் செஞ்சவர். அதனால்தான் அவருக்கு இப்படி ஒரு இறப்பு கிடைச்சிருக்கு. காலையில் வாக்கிங் போயிட்டு வந்தவர்... யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்காம திடீர்னு போயிட்டார்.

    பாக்யராஜ் இறப்புக்கு பிறகு அவர் பெயரில் வெளியான அறிக்கை.. பின்னணியில் இந்த நடிகர் தானா? ரசிகர்கள் கேள்வி இதுதான்

    சிலரை பாருங்க... கடைசி காலத்தில் படுக்கையிலேயே கிடந்து எவ்வளவு கஷ்டப்படுறாங்க. ஒரு சின்ன வேலையைக்கூட அவர்களால செய்ய முடியாம தவிக்கிறாங்க. ஆனால் பாக்யராஜ் சாருக்கு அப்படி எந்த வேதனையும் வரல. இது எல்லாருக்கும் கிடைக்கிற வரம் இல்லை" என்று அவர் உணர்ச்சியுடன் பேசினார்.

    Advertisement

    அவர் மேலும், "எங்களுடைய இந்து மரபுப்படி நல்ல மரணம் என்பது மிகப்பெரிய பாக்கியம். அதுவும் அன்றைய தினம் சனிக்கிழமை பிரதோஷ நேரத்தில் அவர் உயிர் பிரிந்திருக்கிறார். அந்த நேரத்தில் இறப்பது மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களுக்கு கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது... பாக்யராஜ் சாருக்கு கண்டிப்பாக நல்ல நிலை கிடைத்திருக்கும்" என்றார்.

    பாக்யராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்ட அடுத்த நொடி... நடந்த சம்பவம்..! கண்கலங்க பேசிய நட்டி

    பாக்யராஜ் குறித்து கஸ்தூரி பேசிய இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள், "ஒரு சில வினாடி வீடியோவை வைத்து ஒருவரை தீர்ப்பு சொல்லக்கூடாது", "முழு வீடியோ பார்க்காம ட்ரோல் பண்ணுறது தவறு", "பாக்யராஜ் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் போனது உண்மைதான்", "மரணம் பற்றி கஸ்தூரி சொன்ன வார்த்தைகள் சிந்திக்க வைக்கிறது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Kasthuri: Actress Kasthuri has clarified the controversy surrounding a viral video from K. Bhagyaraj's funeral, Speaking about Bhagyaraj's demise, Kasthuri said his peaceful passing, without prolonged illness or suffering, was a blessing. She added that, according to Hindu beliefs, passing away during Shani Pradosham is considered highly auspicious and is believed to be the fortune of those who have led a virtuous life.