மதுரையில் கடை திறக்க வந்த கயாடு லோஹர்.. விஜய்க்கு நடந்த அதே சம்பவம்! திருந்துவாங்களா மக்கள்?

  • சென்னை: ஒரு கடை திறப்பு விழா என்றால் ரிப்பன் வெட்டுவது, குத்துவிளக்கு ஏற்றுவது, கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து சொல்வது என இயல்பாக நடந்து முடிவயும். ஆனால் அந்த விழாவுக்கு ஒரு நடிகை வந்துவிட்டால் மட்டும் கதை வேற லெவலுக்கு போய் விடுகிறது அதுவும் இளம் ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கும் நடிகை கயாடு லோஹர் வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்? மதுரையில் தனியார் செல்போன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில் அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் அந்த பகுதியை பரபரப்பாகி உள்ளது.

    Advertisement

    மதுரையில் நடிகை கயாடு லோஹர்

    கயாடு லோஹர் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்ற தகவல் பரவியதும் அங்கு ரசிகர்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். பொதுவாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக ரசிகர்கள் ஆசைப்படுவது இயல்புதான். ஆனால் அந்த ஆசை எல்லை தாண்டும் போதுதான் பிரச்சனையை ஏற்படுகிறது. அவர் வந்ததோ ஒரு தனியார் கடை திறப்பு விழாவுக்கு அங்கு சாலை முழுவதும் ரசிகர்கள் கூடி நடிகையின் காரை போக கூட விடாமல் சூழ்ந்து கொண்டனர்.

    Advertisement

    அதிலும் சில ரசிகர்கள் ஐ லவ் யூ என்று கத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். சில ரசிகர்கள் அவருடைய போட்டோவை வரைந்து கையில் பிடித்தபடி அவர் வெளியே வரும் வரைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அதுபோல சில ரசிகர்கள் அன்பின் மிகுதியால் செய்த செயல்கள் எல்லாம் முகம் சுளிக்க வைக்கின்றது.

    உங்க உயிரும் முக்கியம்

    பொதுவாக நடிகரோ அல்லது நடிகையோ... யாராக இருந்தாலும் சரி அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தானே? அவர்கள் பிரபலமாக இருக்கிறார்கள் என்பதற்காக ரசிகர்கள் தங்களுடைய சொந்த வேலை வெட்டி எல்லாம் விட்டுவிட்டு, குடும்பத்தையும் கவனிக்காமல் இதுபோன்று வெயிலில் நடுரோட்டில் வாகனங்களை மறித்து காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் பலருடைய ஆதங்கமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.

    Advertisement

    எப்போது மாறும் இந்த நிலை

    நடிகை பொதுவாக ஒரு கடை திறப்புக்கு வருகிறார் என்றால் அதற்கு பணம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். அவர் வந்த வேலையை பார்த்துவிட்டு போகிறார். ஆனால் அவருடைய ரசிகர்கள் மட்டும் சாப்பாடு கூட இல்லாமல் வெயிலில் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே இது போல தான் சில நடிகர் நடிகைகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடி விடுவதால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது.

    விஜய்க்கு நடந்த சம்பவம்

    அப்படி இருந்தும் இதுபோல ஒரு நடிகை வருகிறார் என்றதும் இவ்வளவு கூட்டமும் ஆர்ப்பாட்டமும் தேவையா? என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முன்பும் இதுபோல ரசிகர்கள் தொல்லைகள் பலருக்கு நடந்திருக்கிறது. சமீபத்தில் கூட விஜய்யின் பொதுக்கூட்டத்தில் ரசிகர்கள் அவருடைய பேச்சைக் கூட கேட்காமல் போட்டோ எடுப்பதற்காக முண்டியடித்து இருக்கிறார்கள். அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து இருக்கிறார்கள். அது குறித்து பல விமர்சனங்கள் வந்தது.

    Advertisement

    அதே சமயத்தில் விஜய்யும் தன்னுடைய ரசிகர்களிடம் இதுபோல செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். அப்படி இருந்தும் சிலர் அவரை பின்தொடர்வதை செய்து வந்தனர். அதேபோலத்தான் இப்போது நடிகையின் வாகனத்தையும் ஒரு சிலர் பின் தொடர்ந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    English Summary

    Kayadu Lohar: The area became abuzz with activity as a large number of fans gathered to catch a glimpse of him while he was attending the opening ceremony of a private mobile phone shop in Madurai.