சென்னை: சினிமா பிரபலங்கள் விமான நிலையத்தில் இருப்பது தெரிந்தாலே போதும் அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் எங்கே போகிறார்கள்? யாரை சந்திக்க போகிறார்கள்? என்று சோசியல் மீடியாவில் ஆளுக்கொரு கதை உருவாக்க தொடங்கி விடுகிறார்கள். இப்போது அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பெயரில் பரவிய ஒரு தகவலுக்கு அவரே ஒரே வரியில் கொடுத்த கமெண்டு கவனம் பெற்று இருக்கிறது.
விஷயம் என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் லண்டன் செல்கிறார் என்று சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவியது. அதுவும் தமிழக முதல்வர் விஜய் தற்போது இங்கிலாந்து பயணத்தில் இருக்கும் நேரத்தில் இந்த தகவல் பரவியதால் ரசிகர்கள் மத்தியில் வழக்கம் போல பல்வேறு யோகங்களும் கிளம்பியது. ஆனால் உண்மையான கதை வேறு. கீர்த்தி லண்டனுக்கு போகவில்லை அவர் சென்றிருப்பது கனடா அதுவும் டொராண்டோ.
ஏற்கனவே லண்டனில் திரிஷா இருக்கிறார். அதுபோல ராதிகா சரத்குமாரும் போயிருக்கிறார். இப்போது கீர்த்தி சுரேஷ் அங்கேயே போகிறாரே அப்போ அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ? என்று ஆளுக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் இதை பார்த்து கடுப்பான கீர்த்தி சுரேஷ் தன்னைப் பற்றி வதந்தி பரவி வந்த ஒரு வீடியோவுக்கு கீழே "ஆமா கரெக்ட் லண்டனில் தானே டொரண்டோ பிலிம் பெஸ்டிவல் நடக்குது" என்று நக்கலாக கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதாவது டொரன்டோ எங்கே இருக்கிறது என்று கொஞ்சம் பார்த்துகிட்டு பேசுங்கப்பா என்று அவர் சொல்லி இருக்கிறார். அந்த ஒரு கமெண்ட் தான் இப்போ ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது. இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள டோரதி திரைப்படம் இந்த ஆண்டு dorando international film festivalல் உலக அளவில் திரையிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் அதற்காக கனடாவுக்கு சென்றுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதுவே கார்த்திக் சுப்புராஜ் இளையராஜா கூட்டணியில் உருவான முதல் படம் என்பதால் படத்துக்கு ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. மேலும் டோரதி செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தை பார்த்த அனுராக் காஷ்யப் இது கார்த்திக் சுப்புராஜின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகவும் எதிர்பாராத வகையில் ஆச்சரியப்படுத்தும் படமாகவும் இருப்பதாக முன்பே பாராட்டி இருந்தார். அதுபோல இந்த படத்தில் இளையராஜாவின் முத்துமணி மாலை, கல்யாண விருந்து போன்ற பாடல்கள் இப்போதே செம ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு பிரபலம் குறித்து தவறான தகவல் வந்தால் நீண்ட விளக்கம் கொடுப்பார்கள். சிலர் மறுப்பு தெரிவிப்பார்கள், இன்னும் சிலர் அந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்காமல் கீர்த்தி சுரேஷ் ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்திருக்கிறார்.கீர்த்தி சுரேஷ் பற்றிய வதந்தி
கனடாவில்
கீர்த்தி சுரேஷ் பதிலடி