சென்னை: பாடகி கெனிஷா பிரான்சிஸ் மற்றும் அவரது தோழி மெர்லின் ஆகியோருக்கு இடையே துபாயில் நிகழ்ந்த மோதல் குறித்தும், அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகள் குறித்தும் பேட்டி ஒன்றில் விரிவாகப் பேசியுள்ளார் தனியார் ஊடக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
Aramnaadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "கெனிஷா பிரான்சிஸின் நெருங்கிய தோழியான மெர்லின் அண்மையில் ஒரு சேனலுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் பகிர்ந்துள்ள ஒவ்வொரு தகவலும் அதிர வைக்கின்றன. கெனிஷாவை வைத்து ஒரு வில்லன் சினிமாவே எடுக்கலாம் என்கிற அளவிற்குப் பல்வேறு மிரட்டல்களிலும், ஏமாற்று வேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
கிராமப்புறங்களில் முகத்தில் மஞ்சள் பூசி, பெரிய பொட்டுடன் "சூனியக்காரி" போலத் தோற்றமளிக்கும் நபர்களின் நவீன வடிவமே இந்த "ஸ்பிரிச்சுவல் ஹீலர்" (Spiritual Healer). ஆன்மீக மருத்துவர் என்ற பெயரில், மன உளைச்சலிலுள்ளவர்களை தன்வசப்படுத்தி ஏமாற்றும் வேலைகளை கெனிஷா கோவாவில் செய்து வந்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி தன் குடும்பப் பிரச்சினைகளால் மனமுடைந்து இருந்த வேளையில்தான் இவரிடம் சென்று சிக்கியுள்ளார். கெனிஷா தன்னை ஒரு பெரிய பாடகியாகக் காட்டிக்கொண்டாலும், அவர் பாடி எந்தவொரு பாடலும் புகழ்பெறவில்லை. ஜெயம் ரவி மூலமாகப் பிரபலம் அடைந்த பிறகுதான் அவருக்குப் பாடும் வாய்ப்புகளே வரத் தொடங்கின. இந்த நிலையில், நாகர்கோவிலை சேர்ந்தவரும், கடந்த 20 வருடங்களாக துபாயில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருபவருமான மெர்லின், துபாயில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தக் கெனிஷாவை 9 லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்தார். அவருடன் சேர்த்து 6 பேருக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட், சொகுசு கார்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம் என அனைத்தையும் ஏற்பாடு செய்தார். தாம் வரும்போது ஜெயம் ரவியையும் அழைத்து வருவதாகக் கெனிஷா சொன்னதால் மெர்லின் டபுள் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், துபாய் ஹோட்டலுக்கு அவர்கள் வந்திறங்கியபோது நிலைமையே தலைகீழாக மாறியது. அன்போடு பூங்கொத்து கொடுக்கச் சென்ற மெர்லினின் நெற்றிப் பொட்டில் தன் விரலை வைத்து, சுவற்றில் முட்டும் அளவிற்குப் பலமாகத் தள்ளியுள்ளார் கெனிஷா. அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில், "உன் கணவன் உன்னை விட்டுச் சென்றதற்குக் காரணமே நீ அசிங்கமாக இருப்பதும், உன் வாய் நாறுவதும்தான்" என்று மிகக் கொச்சையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த அநாகரிகமான செயலின்போது நடிகர் ஜெயம் ரவியும் உடனிருந்து மெர்லினை சத்தம் போட்டுள்ளார். இதற்கு பின்னால் ஒரு பெரிய திட்டமிடல் இருந்துள்ளது. மெர்லினின் குடும்பப் பின்னணியை ரகசியமாகத் திரட்டிய கெனிஷா, அவருக்கு ஆன்மீக கவுன்சிலிங் தருவதாக கூறி சொல்லி 3 லட்சம் ரூபாய் பறிக்க முயன்றுள்ளார். அதற்கு மெர்லின் மறுத்ததாலும், தாம் கேட்ட கூடுதல் தொகையை தர மறுத்ததாலும் ஏற்பட்ட வன்மத்தில்தான் கெனிஷா இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் அன்று, "ஏற்பாடுகள் சரியில்லை, நான் பாட மாட்டேன்" என்று சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு மெர்லினைக் கெஞ்ச வைத்துள்ளார். பிறகு மேடையில் பாடி முடித்த மறுநாளே, மெர்லினிடம் சொல்லிக் கொள்ளாமல் தன் குழுவோடு ஏர்போர்ட் சென்று தப்பியோடியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மெர்லின் துபாய் போலீசில் சிசிடிவி காட்சிகள் மற்றும் பணப் பரிவர்த்தனை ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இப்போது துபாய் கோர்ட் கெனிஷாவிற்கு இந்தக் கிரிமினல் வழக்கில் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. இதனால் அவர் தலைமறைவாகக் கோவாவில் சுற்றி வருகிறார். இனி அவரால் துபாய் செல்ல முடியாது, அப்படி சென்றால் துபாய் ஜெயிலில் அடைக்கப்படுவார். மேலும், தொடரப்பட்டுள்ள மானநஷ்ட வழக்கில் பல கோடி ரூபாய் அவர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்... ஜெயம் ரவியே, பயந்து போய்த்தான் இப்போது இவர்களிடம் மாட்டித் தவித்து வருகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இத்தகைய நபர்கள் விரிக்கும் "ஹனி ட்ராப்" மற்றும் "மணி ட்ராப்" வலைகளில் ஜெயம் ரவி போன்றவர்கள் எளிதாகச் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களிடம் சென்றால் நம் கஷ்டங்கள் தீராது, நம் பாக்கெட்டில் இருக்கும் பணம் மட்டும்தான் தீரும்" என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.பெரிய பொட்டு சூனியக்காரி
நான் அவரை விட்டு விலகி போகிறேன்.. நம்பி ஏமாந்துட்டேன்! உருக்கமாக கெனிஷா போஸ்ட்! காரணம் இதுதானா?
துபாய் நட்சத்திர ஹோட்டல்
கெனிஷா கிளம்பியதுமே இப்படி? சென்னை நீலாங்கரை பங்களாவில் ரவி மோகன் செய்த வேலையால் கதவை உடைத்த போலீஸ்
கெனிஷா விடுத்த விரல் மிரட்டல்
மிரண்ட மெர்லின்
நான் துரோகம் செய்ய மாட்டேன்.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ரவி மோகன்.. நெகிழ வைத்த வார்த்தை
மாட்டிக்கிட்டாரு ஜெயம் ரவி