யார் என்ன சொன்னாலும்.. ஆர்த்தியுடன் குஷ்பூ! ஒரு போட்டோவால் கிளம்பிய சர்ச்சை! ரசிகர்கள் கேட்ட கேள்வி


  • சென்னை: நடிகர் ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கண்கலங்கியபடி தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த வேதனைகள், மன அழுத்தங்கள், குடும்ப பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    அப்போது அவர் பேசிய ஒரு விஷயம்தான் இன்னும் அதிக சர்ச்சையை கிளப்பியது. தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு "மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு நடிகை... இட்லிக்கு பெயர் போனவர்" என்று குறிப்பாக சொல்லாமல் சில சுட்டுக்காட்டுகளை கொடுத்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள் அந்த குறிப்பை நடிகை குஷ்பூவுடன் இணைத்து பேச தொடங்கினர்.

    Advertisement

    ரவி மோகன் குற்றசாட்டு

    ஏன் இந்த இணைப்பு? என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது. ரவி மோகன் - ஆர்த்தி காதல் திருமணத்தின் ஆரம்ப நாட்களிலேயே குஷ்பூ முக்கிய பங்கு வகித்ததாக ரவி மோகனும், குஷ்பூவும் பழைய பேட்டிகளில் பேசியிருக்கிறார்கள். குடும்பங்களுக்கு இடையே பாலமாக இருந்து இந்த உறவை முன்னெடுத்தவர் குஷ்பூ என்ற பேச்சு அப்போது இருந்தது. அதனால் இப்போது ரவி மோகனின் அந்த மறைமுக குறிப்பு அவரை நோக்கிதானா என்ற சந்தேகம் சிலரிடம் எழுந்தது.

    இதற்கிடையில் ஆர்த்தி ரவி தொடர்ந்து தன்னுடைய மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள், வாழ்க்கையை முன்னேறச் சொல்லும் மோட்டிவேஷனல் பதிவுகள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். அந்த பதிவுகளுக்கு நடிகை குஷ்பூ ஆதரவாகவும், ஆறுதல் அளிப்பதுபோலவும் கமெண்ட்ஸ் போட்டிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    Advertisement

    குஷ்பூ பதிலடி

    அதுமட்டுமல்லாமல், சில நாட்களுக்கு முன்பு குஷ்பூ வெளியிட்டிருந்த ஒரு பதிவு கூட இணையத்தில் பேசப்பட்டது. அதில், "சிலர் தங்களுடைய உண்மையான நிறத்தை வெளியில் காட்டிவிட்டார்கள். நான் சொன்னது உண்மை என்பதைக் காலமே நிரூபித்துவிட்டது" என்ற வகையிலான வரிகளை பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த சிலர், இது ரவி மோகனை குறிவைத்து போட்ட பதிவா என்றும் விவாதித்தனர்.

    இப்படி ஏற்கனவே பல யூகங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது குஷ்பூ பகிர்ந்த ஒரு குடும்ப புகைப்படம் மீண்டும் இந்த விவகாரத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது.

    குஷ்புவின் பதிவு

    அந்த புகைப்படத்தில் ஆர்த்தி ரவி, அவருடைய அம்மா, குழந்தைகள், குஷ்பூ, குஷ்பூவின் குடும்பத்தினர் என அனைவரும் ஒன்றாக சிரித்தபடி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதோடு குஷ்பூ பயன்படுத்திய பாடல் வரிதான் இணையத்தில் மேலும் பேச்சை கிளப்பியுள்ளது. "யார் என்ன சொன்னாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்..." என்ற உணர்ச்சி மிக்க பாடலை பின்னணியாக வைத்து அந்த பதிவை பகிர்ந்திருக்கிறார்.

    Advertisement

    இதையடுத்து சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துக்கள் குவிந்தன. "அப்படின்னா குஷ்பூ ஆர்த்தி பக்கம் தானா?" "ரவி மோகன் சொன்ன மூன்றெழுத்து நடிகை இவர்தானா?" "இப்போ இந்த குடும்ப சந்திப்பின் அர்த்தம் என்ன?" என்ற கேள்விகள் எழுந்தன.

    நெகட்டிவ் கமெண்ட்ஸ்

    சிலர் எல்லை மீறி குஷ்பூவை கடுமையாக விமர்சித்தும் கமெண்ட்ஸ் போட்டுள்ளனர். "உங்களால்தான் இந்த குடும்பம் பிரிந்ததா?", "இது என்ன டிராமா?" போன்ற நெகட்டிவ் கருத்துகளும் வந்துகொண்டிருக்கின்றன.

    ஆனால் உண்மையில் ரவி மோகன் குறிப்பிட்ட நடிகை யார் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதியும் இல்லை. அது வெறும் நெட்டிசன்களின் யூகம்தான். இருந்தாலும் குஷ்பூவின் இந்த லேட்டஸ்ட் குடும்ப சந்திப்பு புகைப்படம், ஏற்கனவே இருந்த சர்ச்சையை மீண்டும் தலைதூக்க வைத்திருக்கிறது.

    Advertisement

    இப்போது ரசிகர்களின் ஒரே கேள்வி - இந்த சர்ச்சைக்கு குஷ்பூ விளக்கம் கொடுப்பாரா... அல்லது அமைதியே பதிலாக இருக்குமா?

    English Summary

    A recent family photo shared by actress Khushbu featuring Aarthi and her family has sparked fresh online speculation amid Ravi Mohan’s ongoing personal controversy. The post gained attention because of earlier social media discussions linking Ravi Mohan’s cryptic comments to an unnamed actress, though no official confirmation exists. Khushbu’s emotional song choice in the post further fueled fan theories, with many questioning whether it was an indirect message of support for Aarthi. While some users criticized the post, others viewed it as a simple family gathering. The viral image has once again intensified public curiosity around the controversy.