கலா மாஸ்டர் பற்றிய சர்ச்சை.. தெருவில் போறவங்கள கூப்பிட்டு உட்கார வைக்கல.. கோபத்தில் கத்திய குஷ்பூ

  • சென்னை: சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்னும் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது, கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷுக்கு சிறப்பு நடிகர் அங்கீகாரம் கிடைத்ததும் ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை உருவாக்கியது. அதுபோல கலா மாஸ்டர் இந்த தேசிய விருது குழுவில் ஜூரியாக இருந்ததும் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் நடிகை குஷ்பு எது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    Advertisement

    தனுஷுக்கு தேசிய விருது

    ஒரு தரப்பினர் தனுஷின் ராயன் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருதை வரவேற்ற நிலையில், மற்றொரு தரப்பினர் ராயன் படத்தை விட மெய்யழகன் வாழை போன்ற படங்களின் கதை ஸ்கிரீன் பிளே, எமோஷனல் என பல அம்சங்களில் சிறப்பாக இருந்தது அவற்றை விட ராயன் எப்படி செலக்ட் ஆனது என்று கேள்வி எழுப்பினர். அதிலும் ராயன் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் அந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்படத்தை ஏற்க முடியவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

    Advertisement

    கலா மாஸ்டர் பற்றிய சர்ச்சை

    இந்த சர்ச்சைக்கு நடுவில் தேசிய விருது குழுவில் ஜூரியாக இருந்த கலா மாஸ்டரின் பெயரும் அதிகமாக பேசப்பட்டது. சோசியல் மீடியாவில் சிலர் அவருக்கு என்ன தகுதி? எப்படி ஜூரியாக இருந்தார்? என்று விமர்சிக்க தொடங்கினர். இதற்கு நடிகை குஷ்பூ கோபத்துடன் பேசி இருக்கிறார். அதில், ஒரு விருது கிடைக்கிறது என்றால் காரணம் இருக்கும்.. தேசிய விருது படத்திற்கு கிடைத்திருக்கிறது என்றால் அந்த படத்தில் ஏதோ ஒரு விஷயம் தேர்வு குழுவினரை கவர்ந்திருக்கும்.

    ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விதிமுறைகள் இருக்கின்றன. சிறந்த இயக்குநர் பிரிவில் போட்டியிடும் படங்கள் அனைத்தையும் ஒப்பிட்டு பார்த்த பிறகுதான் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. இந்த குழுவில் திரைப்படத் துறையை பற்றி நன்கு தெரிந்தவர்கள் தான் இருக்கிறார்கள். தெருவில் போகிறவர்களை கூப்பிட்டு அங்கே உட்கார வைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

    Advertisement

    நடிகை குஷ்பூ பேட்டி

    மேலும் குஷ்பூ பேசுகையில், ஒரு படம் நமக்கு பிடித்திருக்கலாம் ஆனால் தேசிய விருது குழுவில் இருக்கும் அனைவருக்கும் அந்த படம் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை போல் நமக்கு பிடிக்காத படம் அவர்களுக்கு பிடித்திருக்கலாம், அதுதான் தேர்வு குழுவின் முடிவு என்று கூறியிருக்கிறார். அத்துடன் நான் சின்னதம்பி போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்திருக்கிறேன், அந்த படத்திற்கு எனக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. அதற்காக ஏன் எனக்கு தரவில்லை என்று நான் கேள்வி கேட்க முடியுமா?

    சர்ச்சைக்கு பதில்

    தேர்வு குழுவில் பார்வையில் வேறு நடிகையின் நடிப்பு பெட்டராக இருந்ததாக நினைத்து இருந்திருக்கலாம். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுபோல கலா மாஸ்டர் பற்றிய சர்ச்சைக்கும் பேசும்போது இன்று எல்லோரும் கலா மாஸ்டருக்கு என்ன தகுதி என்று கேட்கிறார்கள் ஆனால் அவரே தேசிய விருது பெற்றபோது யாரும் இந்த கேள்வியை எழுப்பவில்லை. அப்போது அவர் திறமையானவர் என்று ஏற்றுக் கொண்டார்கள்.

    Advertisement

    இப்போது ஜுரியாக இருந்ததற்கு மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள்? ஒரு பெண் அந்த பொறுப்பில் இருப்பதால்தான் இவ்வளவு தாக்குதலா? அதுதான் எனக்கு தோன்றுகிறது. இது மிகவும் தவறான அணுகுமுறை என்று கோபத்துடன் பேசி இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Khushbu: The 72nd National Film Awards, which were announced a few days ago, are still the talk of the social media. In particular, the National Award for Best Director was announced for Raayan, directed by actor Dhanush, while Dhanush's Special Actor recognition for Captain Miller created mixed reactions among fans. Similarly, Kala Master was a jury in this national award committee and actress Khushbu has expressed her apprehension about the fact that she is facing a lot of criticism.