குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி


  • சென்னை:தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தன்னுடைய நேரடியான பேச்சால் எப்போதும் கவனம் ஈர்த்து வருபவர் நடிகை குஷ்பு. எந்த விஷயமாக இருந்தாலும் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லும் குஷ்பு, இந்த முறை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து மிகவும் ஆவேசமாக பேசி கவனம் ஈர்த்துள்ளார்.

    சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிக்கும் போக்குகள், குடும்பங்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு அவதூறு பரப்பும் சில யூடியூப் சேனல்கள் குறித்து கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கொந்தளித்த குஷ்பு

    பேட்டியில் பேசிய குஷ்பு, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் சமூகத்திற்கு மிகப்பெரிய களங்கம் என்று கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் சிலர் சட்ட loopholes மூலம் தப்பித்து விடுவது மக்களுக்கு வேதனை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    "பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை அல்லது தூக்குத்தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்" என்று அவர் ஆவேசமாக தெரிவித்தார்.

    உங்க வீட்டிலேயே பண்ணிப் பாருங்க

    இதோடு நிற்காமல், சமூக வலைதளங்களில் பெண்களின் உடல்களை மார்க்கிங் செய்து, புகைப்படங்களை பகிர்ந்து அவமதிக்கும் சிலரையும் குஷ்பு கடுமையாக விமர்சித்தார்.

    "பெண்களின் உடலை மார்க்கிங் பண்ணி இணையத்தில் போடுறவங்க, ஒரு முறை தங்களோட வீட்டில் இருக்குற பெண்களை அப்படி பண்ணிப் பாருங்க... அப்போதான் அந்த வலி என்னனு புரியும்" என்று கடும் வார்த்தைகளில் எச்சரித்தார். இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    யூடியூப் சேனல்களுக்கு பதில்?

    சமீபகாலமாக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, விவாகரத்து, குடும்ப சண்டைகள் போன்ற விஷயங்களை வைத்து பல யூடியூப் சேனல்கள் கண்டெண்ட் உருவாக்கி வருவது குறித்து மறைமுகமாக குஷ்பு பேசியதாக பலர் கருதுகிறார்கள்.

    "பணத்திற்காக அடுத்தவர்களின் குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து, நேரில் பார்த்த மாதிரி அவதூறு பரப்புறவங்க தங்கள் வீட்டில் இருக்கும் தாய், மனைவி, அக்கா, தங்கை பற்றி ஒரு நிமிடம் நினைக்கணும்" என்று அவர் கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    குஷ்புவின் நேரடி பேச்சு மீண்டும் வைரல்

    குஷ்பு இதற்கு முன்பும் பல சமூக பிரச்சனைகள் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். அரசியல், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமை, சமூக நீதிப் பிரச்சனைகள் என எந்த விஷயமாக இருந்தாலும் தன் கருத்தை தயக்கமின்றி வெளிப்படுத்தும் பிரபலங்களில் குஷ்பு முக்கியமானவர்.

    அரசியல்வாதியாக இருந்தாலும், நடிகையாக இருந்தாலும், சில நேரங்களில் அவரது கருத்துகள் சர்ச்சையாக மாறியிருக்கின்றன. ஆனால் இந்த முறை அவர் பேசிய விஷயம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    முதல்வராக ஜனநாயகன் விஜய்.. குஷ்பு வெளியிட்ட பதிவு! இது தொடக்கம் மட்டும் தான்! நயன்தாராவின் போஸ்ட்

    நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?

    குஷ்புவின் பேச்சு வெளியானதும் இணையத்தில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். "இதுதான் சொல்லணும்", "பெண்களை அவமதிப்பவர்களுக்கு இப்படித்தான் பேசணும்", "குஷ்பு பேசியது கடுமையான வார்த்தை தான்... ஆனா உண்மை" என்று பலர் பதிவிட்டு வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பிய குஷ்புவின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Actress and politician Khushbu has sparked widespread discussion with her strong remarks against crimes targeting women and online defamation culture. Speaking to reporters recently, she expressed anger over increasing sexual violence against women and girl children, calling such acts a stain on society. Khushbu stated that if offenders are proven guilty, they should face the harshest legal punishment. She also criticized individuals who humiliate women online by objectifying or sharing abusive content, saying such people should think about the women in their own families before engaging in such behavior. In addition, her comments appeared to indirectly target YouTube channels and digital creators who create sensational content around celebrity divorces, family disputes, and personal controversies for views and money. Her blunt statements have now gone viral, with many social media users supporting her outspoken stand on women’s safety and responsible media behavior.