உயிருக்கு போராடுற நேரத்தில் கூட இப்படியா? KPY பாலா பெயரை சொல்லி நெல்லை விவசாயிக்கு அதிர்ச்சி!

  • சென்னை: தன்னுடைய உழைப்பில் இருந்து பலருக்கு அமைதியாக உதவி செய்து வரும் கேபிஒய் பாலாவின் பெயரை பயன்படுத்தி நடந்த புதிய மோசடி சம்பவம் சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதநேயத்தை நம்பி உதவி கேட்டு காத்திருந்த ஒரு இளைஞரை குறி வைத்து அவரது நம்பிக்கையே சிலர் பணம் பறிக்கும் ஆயுதமாக பயன்படுத்த முயற்சி செய்த சம்பவம் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

    Advertisement

    நெல்லை இன்ஸ்ட்டா பிரபலம்

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிறிய கிராமத்தை சேர்ந்த, " Smiley Thirai" என்ற இன்ஸ்டா பிரபலம், விவசாய வாழ்க்கை, கிராமத்து இயற்கை, தினசரி உழைப்பு போன்ற வீடியோக்களை வெளியீட்டு வருகிறார். அவருடைய எளிமையான வாழ்க்கை முறையால் ஆயிரக்கணக்கானோர் அவரை பாலோ பண்ணுகின்றனர். இந்த நிலையில் அவருடைய நெருங்கிய நண்பரும், அதே ஊரை சேர்ந்த ஒரு சிறுவன் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    Advertisement

    அந்த சிறுவனின் மருத்துவ செலவுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது சமூக வலைத்தள பக்கங்களில் மனதை உருகும் வீடியோக்களை வெளியிட்டு உதவி கோரி இருந்தார். பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தனர். அந்த மனிதநேயம் முயற்சியையே சில மோசடி நபர்கள் தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்த முயன்றுள்ளார்கள்.

    கேபிஒய் பாலா பெயரை சொல்லி ஏமாற்றம்

    அவர்கள் நாங்கள் கேபிஒய் பாலா டீமில் இருந்து பேசுகிறோம் என்று கூறி தொடர்பு கொண்டு, சிகிச்சை செலவு, மருத்துவ ரிப்போர்ட், தேவையான தொகை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தங்களுக்கு அனுப்ப சொல்லி இருக்கிறார்கள். கே பி ஒய் பாலா தொடர்ந்து ஏழை மக்களுக்கு உதவி செய்து வருவதால் உண்மையிலேயே உதவி கிடைக்கப் போகிறது என்று நம்பிய அந்த இளைஞரும் அனைத்து ஆவணங்களையும் அனுப்பி உள்ளார். ஆனால் அதற்குப் பிறகுதான் அதிர்ச்சி காத்திருக்கிறது.

    Advertisement

    ஏமாற்று போன்கால்

    உங்களுக்கு 6 லட்சம் உதவி ஏற்பாடு செய்துள்ளோம், ஆனால் அதற்கு முன்பாக ஒரு லட்சத்திற்கு 2000 வீதம் டேக்ஸ் கட்ட வேண்டும். அந்த பணத்தை செலுத்தி விட்டால் உடனடியாக ஆறு லட்சம் உங்கள் கணக்கில் வரும் என்று பணம் கட்ட வற்புறுத்தியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அந்த இளைஞர் நாங்க ஹாஸ்பிடல் பீஸ் கட்ட முடியாத நிலையில் இருக்கிறோம், அதனால நேரடியாக பாலா அண்ணாவிடம் பேச வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

    சந்தேகம்

    ஆனால் அதற்கு அந்த நபர் நானே பேச வைக்கிறேன். முதலில் பணத்தை மட்டும் கட்டுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. உடனே இது முழுக்க முழுக்க மோசடி முயற்சி என்பதை உணர்ந்த அந்த இளைஞர் தொலைபேசி உரையாடல்களை, வாட்ஸ் அப் சார்ட் என எல்லாவற்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கேபிஒய் பாலாவின் பெயரை தவறாக பயன்படுத்தி ஏமாற்ற முயற்சிப்பவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதேபோல கே பி ஒய் பாலாவிற்கும் தன்னுடைய பெயரில் இதுபோல ஏமாற்று வேலைகள் நடக்கிறது என்பது தெரியாமல் இருக்கலாம், அதையும் அந்த அண்ணா தெரிந்து கொள்ள வேண்டும். பாலா கஷ்டப்படுற பணத்தில் இருந்து பலருக்கு உதவி செய்றாங்க ஆனா அதை வைத்துக் கூட இது போல ஏமாற்று பேர்வழிகள் ஏமாத்துறாங்க என்பதற்காக அந்த நபரின் போன் நம்பரையும் அந்த இளைஞர தன்னுடைய வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

    கவனம் மக்களே

    உயிருக்கு போராடும் சூழ்நிலையில் கூட இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உதவி செய்யும் மனிதர்களின் நல்ல பெயரையே சிலர் மோசடிக்காக பயன்படுத்துவதும் மிகவும் வேதனையாதனது. கஷ்டத்தில் இருக்கும் மக்கள் இதுபோல நபர்களை நம்பி விட வேண்டாம். நம்முடைய சின்ன சலனம் கூட இது போன்ற ஏமாற்று பேர்வழிகளுக்கு லாபமாகிவிடும். கவனமாக இருக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

    English Summary

    KPY Bala: A new fraud incident using the name of KBY Bala, who has been quietly helping many people through his hard work, has shocked the social media. The incident where some people tried to use his faith as a weapon to extort money targeting a young man who was waiting for help by believing in humanity has become a topic of conversation.