சென்னை: சினிமா பிரபலங்கள் பலர் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் ஒரு சிலர் மட்டும் அந்த நாளை மற்றவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை விதைக்கும் நாளாக மாற்றுகிறார்கள். அந்த பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வருபவர் கேபிஒய் பாலா.
தனது வருமானத்திலிருந்து ஏழை குடும்பங்கள் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் என பலருக்கும் தொடர்ந்து உதவி செய்து வரும் பாலா இந்த ஆண்டு தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 13 மாணவ மாணவிகள் தினமும் பள்ளிக்கு வர போதிய பேருந்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். அந்த தகவல் பாலாவின் கவனத்திற்கு போனதும் எந்த விளம்பரமும் இல்லாமல் நேராக பள்ளிக்கு சென்று அந்த 13 பேருக்கும் புதிய சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார். 10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்! இதற்கு இடையே சிலர் தமிழ்நாடு முதல்வர் விஜய் அரசு இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தரமான புதிய சைக்கிள்களை வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கும் நிலையில் அதற்கும் முன்பே தன்னால் முடிந்த அளவில் பாலா இந்த உதவியை செய்திருப்பதை பாராட்டி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமான பாலா இன்று காமெடி நடிகராக மட்டுமில்லாமல் சினிமாவில் ஹீரோவாகவும் மாறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய வருமானத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்து வருகிறார். ஆம்புலன்ஸ் வழங்கியது, ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுத்தது, மருத்துவ செலவுகள் செய்வது என நாளுக்கு நாள் அவருடைய உதவிகள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அவ்வப்போது அவரைப் பற்றி சில விமர்சனங்களும் இருந்தது... அதிலும் பாலா அவருடைய சொந்த பணத்தில் உதவிகள் செய்யவில்லை, இன்னொருவருடைய பினாமி.. இவர் அரசியலுக்கு வருவதற்காக இப்படி உதவி செய்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அதுவும் தன்னுடைய பிறந்த நாளில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு அவர் கொடுத்த சைக்கிள் உதவியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.கேபிஒய் பாலா செய்த உதவி
அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுடன் கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய பாலா பிறகு அனைவருடனும் சேர்ந்து சைக்கிள் ஓட்டியபடி பள்ளியை சுற்றி வந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் இது வெறும் சைக்கிள் இல்லை 13 குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கொடுத்த நம்பிக்கை என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.முதல்வர் விஜய்யை முந்திய பாலா
பாலா பற்றிய விமர்சனங்கள்