சென்னை: ஒரு குழந்தையின் சிரிப்பில் உலகையே காணும் பெற்றோர்கள் வாழும் சமூகத்தில், மனிதநேயமே தலைகுனியும் அளவுக்கு ஒரு கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. வெறும் ஒன்றரை வயது மட்டுமே ஆன அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை கொடூரமான சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில் ஒன்று அர்ஷித்தின் புகைப்படம் தான். சிரித்த முகத்துடன் காணப்படும் அந்த பிஞ்சின் புகைப்படத்தை பார்த்த பலரும் கண்ணீர் விட்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த அகிலா - அகில் தம்பதியரின் மகன் தான் அர்ஷித். ஆனால் விதி அந்த குழந்தையின் வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே கொடூரமாக விளையாடியது. கடந்த 2024-ம் ஆண்டு குழந்தையின் தந்தை உயிரிழந்தார். தந்தையை இழந்த துயரத்தை கூட புரிந்து கொள்ள முடியாத வயதில் இருந்த அர்ஷித், தாயின் அரவணைப்பில்தான் தனது உலகத்தை பார்த்து வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அகிலாவுக்கு அஷ்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மே 29-ம் தேதி குழந்தை சாப்பிடும் போது மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவர்களுக்கு ஆரம்பத்திலேயே சந்தேகம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்களே அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த பிஞ்சின் உடலில் மொத்தம் 51 காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தலையில் பலத்த தாக்குதலுக்கான அடையாளங்கள், உடலின் பல பகுதிகளில் காயங்கள், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட தடயங்கள் என மனித மனம் ஏற்றுக்கொள்ள முடியாத பல கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒரு குழந்தை எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்கும் என்பதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் அகிலா மற்றும் அவரது காதலன் அஷ்கர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை மீது தொடர்ந்து சித்திரவதை நடத்தப்பட்டதா? எவ்வளவு நாட்களாக இந்த கொடுமை நடந்தது? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாடகி கே.எஸ். சித்ரா வெளியிட்ட பதிவு பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் சித்ராவின் வேதனை வெறும் ஒரு பிரபலத்தின் இரக்க உணர்வு மட்டுமல்ல என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் குழந்தையை இழந்த தாயின் வலி என்ன என்பதை நன்கு அறிந்தவர்களில் ஒருவர் சித்ரா. பல ஆண்டுகள் காத்திருந்து பெற்ற ஒரே மகள் நந்தனாவை கடந்த 2011-ம் ஆண்டு ஒரு விபத்தில் இழந்தார் சித்ரா. துபாயில் குடும்பத்துடன் இருந்தபோது நீச்சல் குளத்தில் தவறி விழுந்த அவரது மகள் உயிரிழந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரிகமபவில் “வெட்டிவேரு வாசம்” பாடலை பாடிய சிறுமி.. விஜய் ஆண்டனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! பெரிய மனசு தான்! அதேபோல் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்த சம்பவம் குறித்து மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளார். "அமைதியாய் இளைப்பாறு தங்கமே. இதயத்தை நொறுக்கும் துயரம் இது" என்று அவர் எழுதியிருந்தார். விஜய் ஆண்டனியின் இந்த வார்த்தைகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மூத்த மகள் மீரா உயிரிழந்த சம்பவம். ஒரு பெற்றோர் அனுபவிக்கக்கூடாத மிகப்பெரிய துயரம் குழந்தையை இழப்பதுதான் என்று அவர் கூறியிருந்தார். இரண்டு பெற்றோர்களின் கண்ணீரையும் மீண்டும் வரவழைத்த அர்ஷித் அதனால் அர்ஷித்தின் மரணம் குறித்த செய்தி வெளியாகியதும் இருவரின் பதிவுகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. "தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள் என்பதால் தான் இந்த பிஞ்சின் வேதனையை அவர்கள் இன்னும் ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அர்ஷித்தின் புகைப்படங்களை பகிர்ந்து தற்போது ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க பதிவிட்டு வருகின்றனர். "தந்தையை இழந்தாய்... பாதுகாக்க வேண்டியவர்களிடமே சிக்கிக்கொண்டாய்... இறுதியில் உலகத்தையே அழவைத்து சென்றுவிட்டாய்" என்று பலர் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். ஒரு பச்சிளம் குழந்தையின் மரணம் மட்டுமல்ல இது. குழந்தைகளை பாதுகாக்க தவறிவிட்ட சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கிய சம்பவமாக இது மாறியுள்ளது. அர்ஷித்தின் சிரித்த முக புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து வருகிறது.ஏற்கனவே தந்தையை இழந்த குழந்தை
மருத்துவர்களையே அதிரவைத்த உடல்
தாய் மற்றும் காதலன் கைது
சித்ராவின் மனதை நொறுக்கிய சம்பவம்
அந்த இழப்பில் இருந்து மீள சித்ராவுக்கு பல ஆண்டுகள் ஆனது. தனது மகள் குறித்து பல நேர்காணல்களில் பேசும்போதெல்லாம் கண்கலங்கியுள்ளார். "ஒரு குழந்தையை இழந்த பிறகு வாழ்க்கையே மாறிவிடுகிறது" என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார். அதனால்தான் அர்ஷித்தின் மரணம் குறித்த செய்தி அவரை இன்னும் அதிகமாக பாதித்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.விஜய் ஆண்டனியின் வருத்தம்
அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த விஜய் ஆண்டனி, பின்னர் பல நிகழ்ச்சிகளில் குழந்தைகளை இழந்த பெற்றோரின் மனநிலையை பற்றி பேசியுள்ளார். தனது மகளின் நினைவுகளை பலமுறை பகிர்ந்துள்ளார். சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு
சித்ராவும் விஜய் ஆண்டனியும் வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவரையும் இணைக்கும் ஒரு வலி இருக்கிறது. அது குழந்தையை இழந்த துயரம்.மன்னித்து விடு தங்கமே