நடிகர் போஸ் வெங்கட் வீட்டில் நடந்த குபேர பூஜை.. வெளியான வீடியோவால் எழுந்த விவாதம்

  • சென்னை: நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் வீட்டில் நடைபெற்றுள்ள சிறப்பு பூஜை தொடர்பான புகைப்படங்களும் வீடியோகளும் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக வீட்டின் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்த குபேரர் சிலை மற்றும் அதற்காக நடத்தப்பட்ட வழிபாடு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதை அடுத்து போஸ் வெங்கட்டின் அரசியல் மற்றும் கொள்கை நிலைப்பாட்டுகளுடன் இந்த பூஜையை ஒப்பிட்டு நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

    Advertisement

    போஸ் வெங்கட் சின்னத்திரையில் மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானார். அதற்கு பிறகு சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததுடன் இயக்குனராகவும் மாறினார். கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமான அவர் தொடர்ந்து சார் உள்ளிட்ட படங்களிலும் கவனம் பெற்றார். சினிமாவை தாண்டி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வரும் போஸ் வெங்கட் திமுகவின் ஆதரவாளராக மட்டுமல்லாமல் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    Advertisement

    போஸ் வெங்கட் அரசியல் பயணம்

    கடந்த 2025 ஆம் ஆண்டு திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணைத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இப்படிப்பட்ட பின்னணியில் தான் தற்போது அவரது வீட்டில் நடைபெற்றிருக்கும் இந்த பூஜை கவனம் பெற்றுள்ளது. வைரல் ஆகி வரும் வீடியோவில் போஸ் வெங்கட் வேஷ்டி சட்டையில் பூஜையில் அமர்ந்து இருக்கிறார். அவருடன் குடும்பத்தினரும் உறவினர்களும் இருக்கின்றனர்.

    போஸ் வெங்கட் வீட்டில் பூஜை

    வீட்டில் ஏராளமான வெள்ளி மற்றும் தங்க நிற சிலைகள் பூஜை பொருட்கள், விளக்குகள் என பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குபேரரை போன்ற தங்க நிற சிலை ஒன்று அலங்கரிக்கப்பட்டு வைத்துள்ளது. அதற்கு மலர்கள் அணிவிக்கப்பட்டு, பணத்தால் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. வீடியோவில் போஸ் வெங்கட் பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்வதும் இருக்கிறது.

    Advertisement

    கிண்டல் பதிவு

    அதுபோல இந்த நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் உட்பட திரை உலகை சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ வெளியானதும் சமூக வலைதளங்களில் ஒருத்தரப்பினர் போஸ் வெங்கட்டை விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். காரணம் போஸ் வெங்கட் நீண்ட காலமாக திமுக ஆதரவாளராகவும் பகுத்தறிவு சார்ந்த அரசியல் பேசி வருகிறார். இதனால் பெரியார் பகுத்தறிவு பற்றி பேசும் போஸ் வெங்கட் வீட்டில் குபேர பூஜையா? அரசியல் கொள்கை வேறு தனிப்பட்ட நம்பிக்கை வேறா என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பு இருக்கின்றனர். ஒரு சிலர் இதை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்தம் வருகின்றனர்.

    Advertisement

    ரசிகர்கள் கேள்வி

    குறிப்பாக பொதுவெளியில் பகுத்தறிவு மத நம்பிக்கைகள் குறித்து பேசுபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று விவாதத்தை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பி இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் ஒருவர் அரசியலில் ஒரு கொள்கையை ஆதரிப்பதால் அவருடைய வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் அதனுடன் இணைத்து பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வருகிறார்கள். குறிப்பாக குடும்பத்தில் ஒருவருக்கு குறிப்பிட்ட கடவுள் வழிபாடு அல்லது பாரம்பரிய சடங்குகளில் நம்பிக்கை இருந்தால் அவர்களுக்காக அந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது? என்று சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    English Summary

    Photos and videos of a special puja held at the home of actor-director Bose Venkat are currently circulating rapidly on social media. In particular, the grandly decorated idol of Lord Kubera and the associated rituals have drawn significant attention. Consequently, netizens are engaging in discussions comparing this puja with Bose Venkat's political and ideological stances.