சென்னை: ஒரு நடிகராக தேசிய விருதை 3 முறையில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் ஒரு இயக்குனராக முதல் தேசிய விருதையும் ஒரே வருஷத்தில் பெறுவது மிகப்பெரிய சாதனை தான். அந்த மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ் வெளியிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது
72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முறை தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ராயன் மற்றும் அமரன் திரைப்படங்கள் அதிக கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இந்த ஆண்டு தேசிய விருதுகளில், 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம் (Best Regional Film - Tamil) என்ற விருதை வென்றது. அதேபோல், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் வெளிப்படுத்திய நடிப்புக்காக தனுஷுக்கு Special Mention (Best Actor) விருதும் அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஒரு நடிகராக 3வது முறையாகவும், ஒரு இயக்குனராக முதல் முறையாகவும் தனுஷ் தேசிய விருது பெற்றிருக்கிறார். இந்த செய்தி நேற்று வெளியானதுமே ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தனுஷுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தனுஷ் போல வேற யாருக்கெல்லாம் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம். சிறந்த தமிழ் திரைப்படம் - ராயன், Special Mention (Best Actor) - தனுஷ் (கேப்டன் மில்லர்), சிறந்த இயக்குநர் - ராஜ்குமார் பெரியசாமி (அமரன்), சிறந்த பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் குமார் (அமரன்),சிறந்த எடிட்டிங் - ஆர். கலைவாணன் (அமரன்)
இதனால் தமிழ் சினிமா மீண்டும் தேசிய அளவில் தனது தரத்தை நிரூபித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில் ஓம் நமச்சிவாய என்று ஆரம்பத்திலேயே தொடங்கி இருக்கிறார். மேலும் ராயன் திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக சிறப்பு அங்கீகாரம் சிறந்த நடிகர், விருதையும் பெற்றிருப்பது என்னை மிகவும் பணிவாகவும் உணர்ச்சிவசப்படுத்துவதாகவும் உணர வைக்கிறது. இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கிய தேசிய திரைப்பட விருது நடுவர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் திரைபயணம் முழுவதும் தொடர்ந்து ஆதரவளித்து வந்த பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் உண்மையான நன்றிகள். ஒரு நடிகராக இது எனது 3வது தேசிய விருது. ஒரு இயக்குனராக நான் பெரும் முதல் தேசிய விருது. ரசிகர்கள் இல்லாமல் இதில் எதுவும் சாத்தியமாகி இருக்காது. அவர்கள்தான என் பலத்தின் தூண்கள். என் இதயத்தின் ஆழத்திலிருந்து அனைவருக்கும் நன்றி. கேப்டன் மில்லர் எனக்கு மிகவும் நெருக்கமான படம். என் திரை பயணத்தில் இதுதான் என்னுடைய மிகச்சிறந்த நடிப்பு என்று நான் எப்போதும் நம்பி இருக்கிறேன். நான் மிகவும் நேசிக்கும் அந்த கேரக்டருக்காக இந்த சிறப்பு அங்கீகாரம் கிடைத்திருப்பது இந்த விருதை இன்னும் அர்த்தம் உள்ளதாக மாற்றுகிறது. வாழ்க்கையில் கிடைக்கும் முதல் வெற்றி எப்போது மறக்க முடியாதது. இயக்குனராக ராயன் படத்திற்காக நான் பெரும் முதல் தேசிய விருது என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றி பாதுகாக்கும் ஆசிர்வாதவாத இருக்கும். நான் எப்போதும் சொல்வது போல எண்ணம் போல் வாழ்க்கை... ஹர ஹர மகாதேவ் என்று அந்த பதிவை முடித்து இருக்கிறார். தனுஷ் இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இளம் வயதிலேயே பெற்ற நடிகர்களில் ஒருவராக மாறி இருந்தார். அதற்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்திற்காக மீண்டும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அந்த படத்தில் சிவசாமி கேரக்டரில் அவர் நடித்த நடிப்பு நாடு முழுவதும் பாராட்டை பெற்றது. இப்போது கேப்டன் மில்லர் படத்திற்காக ஸ்பெஷல் மென்ஷன் அங்கீகாரமும் ராயன் படத்திற்காக இயக்குனராக முதல் தேசிய விருதும் கிடைத்திருப்பதால் தனுஷின் தேசிய விருது பட்டியலில் மேலும் முக்கிய இரண்டு அங்கீகாரங்கள் சேர்த்துள்ள. ஒரு சாதாரண நடிகராக தொடங்கி தேசிய விருது பெற்ற நடிகராக உயர்ந்து இன்று இயக்குனராகவும் அதே தேசிய விருதை வென்றிருக்கும் தனுஷின் பயணம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதான சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் அவர் எழுதிய பதிவில் "என் ரசிகர்கள் தான் என் பலத்தின் தூண்கள்" என்ற ஒரு வரி இந்த முறை தேசிய விருதுகளை விட அதிகமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது.நடிகர் தனுஷின் பதிவு
தனுஷ் பெற்ற தேசிய விருதுகள்
ரசிகர்களை கவர்ந்த வரி