கஷ்டம் காதலுக்கு இஷ்டம்.. 4வது விமானம்.. சோசியல் மீடியாவை அதிரவிடும் தம்பதி.. புலம்பும் நெட்டிசன்கள்

  • சென்னை: சோசியல் மீடியாவில் இப்போது ஒரு தம்பதியின் பதிவு தான் பயங்கரமாக வைரலாகி வருகிறது. காரணம் என்னவென்றால் சாதாரணமாக கணவன் மனைவி சேர்ந்து புதிய கார் வாங்கி பார்த்து இருக்கிறோம். வீடு வாங்கிவிட்டோம் என்று பதிவிடுவதை பார்த்திருப்போம். ஆனால் இந்த தம்பதி எங்களுடைய 4வது விமானம் என்று போட்டிருக்கும் பதிவு தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

    Advertisement

    இன்ஸ்டாகிராமில் mathu2357 மற்றும் jayj2357 என்ற கணக்குகளுடன் தொடர்புடைய இந்த தம்பதி விமானம் ஒன்றுக்கு பக்கத்தில் அமர்ந்து பூஜை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில் இருவரும் மாலை அணிந்து கொண்டு விமானத்தின் முன்பு பூஜையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அருகில் பூஜை பொருட்கள் விளக்கு உள்ளிட்டவை இருக்கிறது.

    Advertisement

    தனி விமானம் வாங்கிய தம்பதி

    அதுமட்டுமல்லாமல் அந்த பதிவின் கேப்ஷனில் "இது எங்களுடைய 4வது விமானம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது இன்னும் எண்ணிக்கை தொடரும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்ததும் நெட்டிசங்களுக்கு ஒரே ஷாக். பொதுவாக ஒரு விமானத்தை தனிப்பட்ட முறையில் வாங்குவது என்பது பெரும்பாலானவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். அதிலும் 4வது விமானம் என்று இந்த தம்பதி கூறி இருப்பது தான் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    தனி விமானத்தின் விலை

    ஒரு சிலர் சமூக வலைத்தள பகுதிகளில் இந்த விமானத்தின் மதிப்பு 3 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இந்த தம்பதி தாங்கள் வாங்கிய விமானத்தில் விலை, அவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் என்று எந்த முழுமையான விவரங்களை வெளியிடவில்லை. அதனால் இதன் தொகையை உறுதியான விலையாக எடுத்துக் கொள்ள முடியாது.

    Advertisement

    அதே நேரத்தில் விமானத்தை மட்டுமல்லாமல் அதை நிறுத்துவதற்காக இடமும் பிரமாண்டமாக வைத்திருக்கிறார்கள். இவர்களில் வாழ்க்கை முறை எந்த அளவிற்கு வசதியானது என்பதை இந்த பதிவு காட்டுகிறது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த பதிவில் கஷ்டம் காதலுக்கு இஷ்டம் என்ற பாடல் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதை வைத்து தான் இப்போ நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

    நெட்டிசன்களின் கருத்து

    நாங்கள் சொந்தமாக ஒரு பைக் வாங்குவதற்கும், கார் வாங்குறதுக்கு நாக்கு தள்ளுது.. காதலித்து திருமணம் செய்தவர்கள் சொந்தமாக ஏதாவது வாங்கினால் அதற்கு இந்த பாடலை பயன்படுத்துவார்கள், ஆனால் இவங்க இவ்வளவு பெரிய ஒரு தனி விமானத்தை வாங்கிவிட்டு அதற்கு இந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதுவும் 4வது விமானத்திற்கு இந்த பாடல் என்றால் இவங்க காதல் எந்த அளவிற்கு உயர்ந்தது என்று கிண்டல் செய்கிறார்கள்.

    Advertisement

    சப்போர்ட்

    இந்த தம்பதி இது தமிழ்நாட்டில் விமானத்தை வாங்கவில்லை என்பது தெரிகிறது. வெளிநாட்டில் வாங்கி இருக்கிறார்கள் ஆனாலும் இவர்கள் கொடுத்த கேப்ஷனும் வீடியோவுக்கு பயன்படுத்திய பாடல் தான் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆனால் இதே விஷயத்தைப் பற்றி இன்னும் சிலர், அவர்கள் உழைத்து சம்பாதித்து வாங்கியது அதனால் அவர்கள் என்ன வேணாலும் பாட்டு வைக்கலாம் அதில் என்ன தப்பு? என்று அந்த தம்பதிக்கு சப்போர்ட் செய்து வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.

    English Summary

    flight A couple: A post by a couple is currently going viral on social media. While we often see couples sharing news about buying a new car or a house, this particular couple has grabbed everyone's attention by posting about their fourth airplane.