சென்னை: திரையுலகில் பிரபலமாக இருக்கும் இரண்டு பிரபல நட்சத்திரங்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்தில் நாட்டு நாட்டு பாடல் மூலம் உலகம் அளவில் பிரபலமான பாடகர் கால பைரவாவும், தெலுங்கு நடிகை காவ்யா கல்யாண்ராமும் காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்ததுடன் காதல் குறித்து அழகான வார்த்தைகளையும் பதிவிட்டு இருக்கிறார்கள். அதனால் கடந்த சில மாதங்களாக இருவரையும் சுற்றி பரவி வந்த காதல் வதந்திகளுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
கால பைரவா, காவியா உடன் இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்து அவரை ஹோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவில், காவியா உடன் நேரத்தை செலவிடுவது மலைகளுக்கு அருகில் அமர்ந்து ஓடும் நதியை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற அமைதியான உணர்வை கொடுப்பதாகவும், அவருடன் பேசிக் கொண்டிருப்பது குளிர் காலத்தில் அதிகாலை தனக்கு பிடித்த காப்பியை குடிப்பது போன்ற உணர்வை கொடுப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
நீண்ட நாட்களாக தனக்குள் இருந்த பெயர் வைக்க முடியாத ஒரு உணர்வு.. உண்மை இல்லை, வீடு சேர்ந்த உணர்வு என்பதை இப்போது புரிந்து கொண்டதாகவும், இருவரும் இணைந்து ஒரு வாழ்நாள் முழுவதையும் வீடாக வாழப் போகிறோம் என்பதில் மகிழ்ச்சி என்று காதல் கலந்த கவிதையாக கால பைரவா போஸ்ட் போட்ட உடனே ரசிகர்கள் இது சாதாரண காதல் போஸ்ட் போல இல்லையே செம அழகா இருக்கு என்று கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். கால பரவா இப்படி போஸ்ட் போட்டதும் காவியா சும்மா இருப்பாங்களா? அவங்க தன்னுடைய பங்குக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து எடுத்த அழகான புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். ஆனால் அந்த பதிவில் கால பைரவா போல இவர் நீண்ட காதல் கவிதையை கொட்டாமல் "என்னுடைய மஞ்சள் நிற பூவை நான் கண்டுபிடித்து விட்டேன்" என்று சொல்லி இருக்கிறார். மேலும் அந்த பதிவில், சில மனிதர்கள் நம்முடைய வாழ்க்கைக்குள் வந்து நாம் கடவுளின் செல்லப்பிள்ளை என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். தன்னுடைய சாதாரண நாட்களை கூட வெளிச்சமாக மாற்றி உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியான பெண்ணாக உணர வைத்ததற்கு நன்றி என்றும் காவியா தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்கள் இருவருடைய பதிவுகளை பார்த்தாலே காதலை அறிவிப்பதை விட ஒருவரை ஒருவர் எந்த அளவிற்கு ஸ்பெஷலாக பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த கால பைரவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகர் மற்றும் இசையமைப்பாளர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இசையமைப்பாளரான எம் எம் கீரவாணி மகனான இவர் சின்ன வயதிலேயே இசை சூழலில் வளர்ந்ததாலே இவருக்குள் இசை ஆர்வம் அதிகமாகவே இருந்திருக்கிறது. பாகுபலி 2, அரவிந்த சமேத வீரராகவ உள்ளிட்ட படங்களில் பாடல்கள் மூலம் கவனம் பெற்ற காலபைரவுக்கு மிகப்பெரிய திருப்புமுனயாக அமைந்தது ஆர் ஆர் ஆர் திரைப்படம் தான். அதில் ராகுல் சிப்ளிகஞ்சுடன் அவர் இணைந்து பாடிய நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றதை தொடர்ந்து கால பைரவாவின் புகழ் சர்வதேச அளவிலும் சென்றது. இவர் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். எம் எம் கீரவாணியின் மகன் என்பதால் ராஜமவுலியின் குடும்பத்துடன் அவருக்கு ஏற்கனவே நெருக்கமான பந்தம் இருந்திருக்கிறது. அதுபோல காவியா கல்யாணராமை பொருத்தவரை சினிமாவுக்கு புதியவர் கிடையாது. குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு கதாநாயகியாக திரையில் வந்த காவியாவிற்கு 2023 ஆம் ஆண்டு வெளியான பகலம் திரைப்படம் முக்கியமா படமாக இருந்தது. அந்த படத்தில் மூலம் கதாநாயகியாக கவனம் பெற்ற அவர் தெலுங்கு படங்களிலே தொடர்ந்து நடித்து வருகிறார். எது எப்படியோ இப்போ நாட்டு நாட்டு பாடகருக்கு நிஜ வாழ்க்கையிலும் காதல் டூயட் ஆரம்பிச்சிடுச்சு.பாடகர் கால பைரவா பதிவு
நடிகையின் பதிவு
கால பைரவா யார்
நடிகை காவியா கல்யாணராம்