மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோவை ரீ கிரியேட் செய்தது தப்பா போச்சு... கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பிரபலம்

  • சென்னை: மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்து பிரபலமானதை விட மாதம்பட்டி ரங்கராஜன் தன்னுடைய குடும்ப விஷயத்தின் மூலமாகத்தான் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அவருடைய தனிப்பட்ட வீடியோக்களை ஜாய் கிரிசில்டா வெளியீட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த வீடியோக்களை ரீகிரியேட் செய்து பிரபலமானவர்தான் அர்ஜுன் ராம் என்பவர். அவர் இப்போது மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

    Advertisement

    மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் கல்யாணம் முடிந்து 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னுடைய மகன் ராகா ரங்கராஜுக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான், அவர் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் என்று சில மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் கொடுத்திருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.

    Advertisement

    மாதம்பட்டி ரங்கராஜ் குடும்ப பிரச்சனை

    இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் ராகா ரங்கராஜ் என்னுடைய மகன் தான் அவனை என்னுடைய ஆயுசு முழுக்க பாதுகாத்துக் கொள்வேன் என்று மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று ஒரு பதிவு வெளியிட அது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் சில மாதங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய பிரைவேட் வீடியோக்கள் பலவற்றை ஜாய் ஒன்றன்பின் ஒன்றாக சோசியல் மீடியாவில் வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அது பெரிய அளவில் வைரலாகி வந்தது.

    அப்போது ஜாய் வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜின் வீடியோவில் அவர் பேசும் ஓய் பொண்டாட்டி என்ற கேப்ஷனை வைத்து அர்ஜுன் ராம் என்பவர் மாதம்பட்டி ரங்கராஜை போல ரீ கிரியேட் செய்து வீடியோக்கள் வெளியிட்டார். அதற்கு ஜாய் கிரிசில்டா கூட லைக் கொடுத்து கமெண்ட் கொடுத்து இருந்தார். இதனால் இந்த வீடியோக்கள் வைரல் ஆகி வந்தன. இந்த நிலையில் இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய மகனை ஏற்றுக் கொண்டதால் நேற்று அர்ஜுன் ராம் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

    Advertisement

    மாதம்பட்டி ரங்கராஜ் போஸ்ட்

    அந்த வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி தன்னுடைய மகனை தூக்கி வைத்து கொண்டிருக்கிறாரோ அதேபோல அர்ஜுன் ராம் ஒரு நாயை தூக்கி வைத்து கொஞ்சி இருந்தார். இதுதான் இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுவரைக்கும் நீங்கள் மாதம்பட்டி ரங்கராஜை ரீகிரேட் செய்திருந்தீங்க அது ஓகே ஆனால் இப்போ ஒரு குழந்தையை நாயுடன் கம்பர் பண்ணி இருக்கீங்களே என்று பலரும் அர்ஜுன் ராமை விமர்சித்து வந்தனர்.

    மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து
    உடனே அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இன்று ஒரு வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, நான் இதுவரைக்கும் மாதம்பட்டி ரங்கராஜனை ரீ கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தேன். ஆனால் இனி அது வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல நான் இப்போது வெளியிட்ட வீடியோவில் கூட அவரை கிண்டல் செய்யவில்லை. காரணம் அவர் தன்னுடைய மகன் என்று ராகா ரங்கராஜை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரை பாராட்ட தான் வேண்டுமே தவிர நான் கிண்டல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    Advertisement

    ஜாய் கிரிசில்டா வெளியிட்ட வீடியோ

    ஆனாலும் நான் அவர் வெளியிட்ட புகைப்படத்தை ரீ கிரியேட் செய்ய வேண்டும் என்று தான் என்னுடைய மகன் போல வளர்த்துக் கொண்டிருக்கும் நாயுடன் போட்டோ எடுத்து வெளியிட்டேன். எனக்கு கல்யாணம் ஆகவில்லை, குழந்தையும் இல்லை. அதனால் நான் மகன் போல வளர்க்கும் என்னுடைய நாயுடன் போட்டோ எடுத்தேன். அது சிலருக்கு மனவருத்தத்தை கொடுத்து இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்குறேன்.

    மன்னிப்பு கேட்ட நபர்

    நான் எந்த விதத்திலும் குழந்தையை நாயுடன் கம்பர் பண்ணவில்லை. நான் என்னுடைய நாயை குழந்தையாக பார்க்கிறேன் அதனால் எல்லோரையும் அதேபோல பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. யாருக்கேனும் நான் வெளியிட்ட வீடியோ வருத்தத்தை கொடுத்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.

    Advertisement

    இதுவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எது எப்படியோ மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோவை ரீகிரியேட் செய்து பிரபலமான அர்ஜுன் ராம் இப்போது அவருடைய கடைசி வீடியோ என்று ஒன்று போட அதுவும் இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Madhampatty Rangaraj: Madhampatty Rangaraj became a big hit on social media because of his family affair rather than his acting in Mehndi Circus. Joy Grisilda created a sensation by releasing her personal videos. Arjun Ram is famous for recreating those videos. He has now released a video apologizing.