Mandadi OTT : பாயை மாத்தி ரூட் எடு.. ஓடிடியில் வந்த சூரியின் மண்டாடி.. எதில் பார்க்கலாம்?

  • சென்னை: சூரி நடிப்பில் வெளியான படங்களில் 'மண்டாடி' படத்துக்கு கொஞ்சம் தனி இடம் கிடைத்திருக்கிறது. காமெடி நடிகராக இருந்த சூரி, 'விடுதலை'க்குப் பிறகு கதாநாயகனாக தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து வருகிறார். அந்த வரிசையில் கடல், மீனவர்கள் வாழ்க்கை, படகுப்போட்டி என இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத ஒரு களத்தில் உருவான படம்தான் 'மண்டாடி'.

    Advertisement

    கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து திரையிடப்படும் திரைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இப்போது தியேட்டரில் படத்தை தவறவிட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.

    Advertisement

    மண்டாடி ஓடிடி ரிலீஸ்

    'மண்டாடி' திரைப்படம் Netflix ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. தற்போதைய தகவல்களின்படி, அக்டோபர் 9-ம் தேதி முதல் படத்தை ஓடிடியில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மண்டாடி படத்தின் கதைதான் முதலில் கவனத்தை ஈர்த்தது. ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கடலோடிகளின் வாழ்க்கை மற்றும் பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தின் கதை

    ஒரு படகில் இருக்கும் 6 பேரை வழிநடத்துபவர்தான் 'மண்டாடி' என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் விஷயம். படத்தில் சூரி முத்துக்காளி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சுஹாஸ் சாட்டாப்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுக்கிடையிலான மோதலும், படகுப்போட்டியும் சேர்ந்து கதையை நகர்த்துகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், படகுப்போட்டி காட்சிகளை சாதாரணமாக ஒரு சில காட்சிகளாக வைத்துவிடாமல், படத்தின் முக்கியமான பகுதியாகவே உருவாக்கியிருக்கிறார்கள்.

    Advertisement

    Mandadi Review: மண்டாடி முழு படம் எப்படி இருக்கு? சூரிக்கு கடல் கை கொடுத்ததா? இல்லையா?
    அதற்காக கடலில் சுமார் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தியதாக சூரியே நிகழ்ச்சியில் கூறியிருந்தார். மண்டாடி படத்தைப் பற்றி பேசும்போது சூரி எடுத்த ரிஸ்க்கையும் சொல்லித்தான் ஆக வேண்டும். கடலில் படப்பிடிப்பு நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் படகுப்போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளில் உடல் உழைப்பு அதிகம். இந்தப் படத்துக்காக சூரி தீவிரமான பாய்மரப் படகு பயிற்சியை மேற்கொண்டதாகவும், சில ஆபத்தான கடல் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்ததாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    அதனால்தான் சூரி இந்தப் படத்தைப் பற்றி பேசும்போது, "ரிஸ்க்கை எடுக்கவில்லை; ரிஸ்க்கையே படமாக எடுத்திருக்கிறோம்" என்று சொல்லியிருந்தார். அந்த வார்த்தைக்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு இருந்திருக்கிறது என்பதை படம் பார்க்கும்போது புரியும்.

    சூரியுடன் பெரிய நடிகர்கள்

    சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். சத்யராஜ், ரவீந்திர விஜய், பாலசரவணன், மிதுன் ஜெய்சங்கர், ஸ்டண்ட் சிவா, அச்சுத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியிருக்கிறார். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். பீட்டர் ஹெய்ன் உள்ளிட்டோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

    Advertisement

    குறிப்பாக கடல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், 'மண்டாடி'யை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. அதனால்தான் படம் இந்தியா முழுவதும் IMAX திரைகளிலும் வெளியிடப்பட்டது. திரையரங்கில் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்தும் நேரம் அமையாமல் விட்டவர்கள், குழந்தைகளுடன் வீட்டில் இருந்து படம் பார்க்க நினைப்பவர்கள் என பலருக்கும் Netflix வெளியீடு வசதியாக இருக்கும்.

    English Summary

    Mandadi OTT : Among the films starring Soori, *Mandadi* holds a somewhat unique place. The OTT release date for the movie has now been announced; it is reported that the film will premiere on Netflix on October 9th.