மண்டாடி vs சர்தார் 2 முதல் நாளே வசூல் போட்டி.. சூரி ஜெயித்தாரா? கார்த்தி ஜெயித்தாரா?

  • சென்னை: நேற்று ஒரே நாளில் 2 படங்களில் ரிலீஸ். ஒரு பக்கம் சூரி நடித்த மண்டாடி, இன்னொரு பக்கம் கார்த்தியின் சர்தார் 2. இருவரின் படங்களுமே வெவ்வேறு கதைகளத்தில் வந்திருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் இப்போது யார் முந்தி இருக்கிறார்கள் என்பது தான் ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருக்கிறது. முதல் நாள் வசூல் கணக்கு வெளியாகி இருக்கும் நிலையில் இந்தியாவில் சூரியின் மண்டாடி சின்னதாக முன்னிலை எடுத்திருக்கிறது. ஆனால் உலக கார்த்தியின் சர்தார் 2 முன்னால் இருக்கிறது.

    Advertisement

    தமிழ்நாட்டில் சூரி முன்னிலை

    மண்றாடி படத்துக்கு முதல் நாளே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சூரியின் நடிப்பு, கடல் காட்சிகள், படகு போட்டி காட்சிகள், ஆக்சன் மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன. கிடைத்துள்ள பாக்ஸ் ஆபீஸ் கணக்குப்படி மண்டாடி இந்தியாவில் சுமார் 5.55 கோடி கிராஸ் வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    மண்றாடி vs சர்தார் 2

    அதே நேரத்தில் சர்தார் 2 இந்தியாவில் 5.30 கோடி கிராஸ் அதாவது சுமார் 4.50 கோடி நெட் வசூலை முதல் நாளில் பெற்றிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அப்படி பார்த்தால் இந்தியா வசூலில் சூரி தான் கொஞ்சம் முன்னால் இருக்கிறார். ஆனால் உலக வசூலில் கார்த்தி முந்தி விட்டாரே. இங்கேதான் கதை திரும்புகிறது சர்தார் 2 படத்துக்கு இந்தியாவுக்கு வெளியேயும் நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. வெளிநாட்டு வசூல் மட்டும் சுமார் 1.50 கோடி எனவும், இதனால் முதல் நாள் உலகளாவில் 6.80 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    வசூல் நிலவரம்

    இதனால் உலக அளவில் பார்த்தால் கார்த்தியின் சர்தார் 2 தான் முதல் நாளில் வெற்றியாளர். அதாவது போட்டியை சிம்பலாக சொன்னால் தமிழ்நாடுட்டில் மண்றாடி கோப்பையை அடித்து விட்டது. உலக அளவில் சர்தாருக்கு தான் கிரீடமே கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதே நேரத்தில் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பிலும் வித்தியாசம் இருக்கிறது.

    யார் படம் பெஸ்ட்

    மண்டாடியை பார்த்த ரசிகர்கள் பலரும் சூரியின் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் படம் வேற லெவல் என்று பாராட்டி வருகின்றனர். கடல் பின்னணி மற்றும் படகு போட்டியை பெரிய திரையில் பார்க்கும்போது நல்ல அனுபவமாக இருப்பதாக கருத்து வருகிறது. சர்க்கார் 2 விஷயத்தில் கார்த்தியின் ஆக்சன், சில மாஸ் காட்சிகள், இடைவேளை மற்றும் பின்னணி இசைக்கு பாராட்டு இருந்தாலும் சர்தார் முதல் பாகம் அளவுக்கு படம் இல்லையே என்ற விமர்சனமும் வருகிறது.

    Advertisement

    அதனால் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் என்ன நடக்கிறது என்பது சுவாரஸ்யம். முதல் நாள் கணக்கை மட்டும் பார்த்து வைத்து தீர்ப்பு சொல்லிவிட முடியாது. மண்டாடிக்கு கதை தான் பலம் என்று பேசுகிறார்கள். சர்தார் 2க்கு கார்த்தியின் ஸ்டார் வேல்யூவும் பெரிய ஆக்ஷன் பலமாக இருக்கிறது. அதனால் முதல் நாள் முடிந்துவிட்டது. ஆனால் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் போட்டி இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது.

    English Summary

    Mandadi vs Sardar 2 Box Office : Yesterday released in 2 films on the same day. On one side is Suri starrer Mandadi and on the other is Karthi's Sardaar 2. Although both the films have come in different storylines, the big question among the fans is who is ahead at the box office now. While the first day collection is out, Suri's Mandadi icon has taken the lead in India. But Ulla Karthi's Sardaar 2 is ahead.