சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று கதாநாயகன் மற்றும் குணச்சித்திர நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். ஆனால் சமீப காலமாக அவர் நடிக்கும் படங்களை விட, அவர் அளிக்கும் அரசியல் கருத்துக்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக, தமிழக அரசியல் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து அவர் பேசும் ஒவ்வொரு கருத்தும் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது. அந்த வரிசையில் தற்போது அவர் பேசியுள்ள "மின்வெட்டு" தொடர்பான கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாஸ்டர் மகேந்திரன், "தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்கு... என் வீட்டுலயும் மின்வெட்டு இருக்கு. அதுக்காக முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்டா உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா? மைக்க நீட்டி கேள்வி கேட்ட உடனே கரண்ட் வந்துருமா?" என்று பேசியிருந்தார். மேலும் சோலார் என்று சிலர் கண்டுபிடிச்சுருக்காங்களே அதை பயன்படுத்த வேண்டியதுதானே? ஒரு பல்புக்கு ஒரு சோலார் பேனர் வைத்து அதில் ஒயர் கொடுத்தால் கரண்ட் வந்துட போகுது.. எனக்கு அந்த அறிவு இருக்கு.. அது எல்லாருக்கும் இல்லனா நாம ஒன்னும் செய்ய முடியாது. வேணும்னா என் வீட்டில் இருந்து கூட கரண்ட் எடுத்துக்கோங்க.. ஆறு மாசத்துக்கு எந்த கேள்விகளையும் கேட்காதீங்க.. இதற்கு முந்தைய ஆட்சியிலும் தான் கரண்ட் கட் இருந்துச்சு அப்ப யாருமே கேட்கலையே ஏன் இப்ப மட்டும் கேள்வி கேக்குறீங்க என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலானது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல ஆதரவு கிடைக்காமல், எதிர்மாறாக கடும் விமர்சனங்கள் குவிய தொடங்கின. மகேந்திரனின் இந்த கருத்தை பார்த்த பலரும், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் கேள்வி கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது?", "சாலை உடைந்தாலும் கேட்கக்கூடாதா?", "தண்ணீர் வரலன்னாலும் கேட்கக்கூடாதா?" "கரண்ட் இல்லன்னா EB ஆபீஸ்லயும் கேட்கக்கூடாதா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பல அரசியல் விமர்சகர்களும், "மக்கள் பிரச்சனையை அரசிடம் கேட்பதுதான் ஜனநாயகம். கேள்வி கேட்பதை தவறு போல சித்தரிப்பது சரியான அணுகுமுறை அல்ல" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அதிகம் கொண்டாடுபவர்கள் மீம் கிரியேட்டர்கள்தான். மகேந்திரனின் வீடியோவை வைத்து நூற்றுக்கணக்கான மீம்கள் தற்போது இணையத்தில் சுற்றி வருகின்றன. "பெட்ரோல் விலை ஏறினா கேட்காதீங்க...", "தண்ணீர் வரலன்னா கேட்காதீங்க..." "ரோடு உடைஞ்சா கேட்காதீங்க...", "வரி உயர்ந்தா கேட்காதீங்க...", "கேள்வி கேட்டா உடனே சரியாகிடுமா?" என்ற வசனங்களுடன் பலர் கிண்டலடித்து வருகின்றனர். சில மீம்களில், "எக்ஸாம் பெயில் ஆயிட்டியா? டீச்சரை கேட்டா பாஸ் ஆகிடுவியா?", "மொபைல் ரீசார்ஜ் முடிஞ்சிடுச்சா? கம்பெனியிடம் கேட்டா உடனே ரீசார்ஜ் ஆகிடுமா?" என்று மகேந்திரனின் தர்க்கத்தை வைத்து நகைச்சுவை பதிவுகளும் வைரலாகி வருகின்றன. மகேந்திரனை இப்படி ட்ரோல் செய்வது இது முதல் முறை அல்ல. கடந்த சில ஆண்டுகளாக மாஸ்டர் மகேந்திரன் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதெல்லாம் அது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த முறை சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மகேந்திரனின் கருத்தை விமர்சிப்பவர்களில் எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, சில விஜய் ரசிகர்களும் இருக்கிறார்கள். "விஜய்க்கு ஆதரவாக பேச நினைத்திருக்கலாம். ஆனால் தவறான உதாரணம் கொடுத்ததால் பிரச்சனை பெரிதாகிவிட்டது" என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மாஸ்டர் மகேந்திரன் பேட்டி
நெட்டிசன்கள் எதிர்கேள்வி
மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு புதிய விருந்து
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா
ட்ரோல் மெட்டீரியலாக மாறிய மகேந்திரன்