சென்னை: அரசு அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் பாரம்பரிய உடை அணிந்து வரவேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகனின் அறிவிப்பு இப்போது இணையத்தில் விவாதமாக மாறி இருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை மற்றும் சேலையை ஊக்குவிப்பது நல்ல விஷயம் தான் என்றாலும் அதை அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று சொல்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவாகரத்தில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவு கவனம் ஈர்த்திருக்கிறது.
நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தில் உள்ள தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் ஒரு நாள் "மரபு ஆடை தினம்" கடைபிடிக்கப்படும் என்று பேசியிருந்தார். முதல்வர் விஜய் வாரத்தில் ஒரு நாள் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து வருவதை பார்த்து இந்த யோசனை தனக்கு வந்ததாகவும் அதேபோல அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் வாரம் ஒரு நாள் பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்திருக்கிறார் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் பேசியிருந்தார். வேஷ்டி சட்டை, சேலை அணிவது நமது பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதுடன் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது இந்தத்திட்டத்தின் பின்னணி என்று அவர் ஒரு காரணத்தையும் சொல்லி இருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அதில் பல வருஷங்களாக பேண்ட், சட்டை அணிந்தவர்கள் திடீரென வேஷ்டி அணிய இயலாது. பயண நேரத்திலும் அது சிரமம். இதை ஆப்ஷனாக வைக்க வேண்டும், அதிகாரமாக அல்ல. முதல்வரை முதலில் கதர் வேஷ்டி சட்டை அணிய சொல்லுங்கள். இவரை போல எல்லோரும் பட்டு வேஷ்டி சட்டை அணிய இயலுமா? அதுவும் அதிகரித்து வரும் எல் நினோ காலத்தில்? என்று ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த பதிவுக்கு அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். அதில் அதிகமானோர் ப்ளூ சட்டை மாறன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது, பணகக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது அப்படி இருக்கும்போது பேருந்தில் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து கொண்டு செல்வது கூட கஷ்டமாகத்தான் இருக்கும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் உடை விஷயத்தில் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் ஆப்சனாக வையுங்கள் என்று கருத்து கூறி வருகிறார்கள்.அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
முதல்வர் சம்மதம்
ப்ளூ சட்டை மாறன் பதிவு
எடுத்த சபதம் முடிப்பேன்.. கறி தின்னாமல் வெறியோடு காத்திருக்கும் அமைச்சர் ராஜ்மோகன்!
மக்கள் கருத்து