தியேட்டரில் சிரிக்க வைத்த மொத ராத்திரி.. ஓடிடிக்கு வந்தாச்சு! எதில், எப்போ பார்க்கலாம்?

  • சென்னை: திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற மொத ராத்திரி படத்தை மிஸ் பண்ணியவர்களுக்கு இப்போ ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகி உள்ளது. படம் எப்போது ஓடிடியில் வெளிவரும் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

    Advertisement

    ரிஷிகாந்த், அனிஷ்மா அனில் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கிய மொத ராத்திரி திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார்.

    Advertisement

    மொத ராத்திரி பட கதை

    படத்தின் கதை என்னன்னா, புதிதாக திருமணமான ஜோடியின் முதல் இரவை மையமாக வைத்துதான் படம் நகர்கிறது. ஒரு கிராமத்து திருமணத்தை சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள், தவறான புரிதல்கள், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என ஒரே இரவில் நடக்கும் கதையாக படம் உருவாகி உள்ளது. குறிப்பாக ரிஷிகாந்த் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். அனிஷ்மா ஏற்கனவே சிறை, யூத் உள்ளிட்ட படங்களில் கவனம் பெற்ற நிலையில் இந்த படத்திலும் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளார்.

    மொத ராத்திரி ஓடிடி அப்டேட்

    படத்தை பார்த்த ரசிகர்களின் ஆரம்ப விமர்சனங்களிலும் ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பு மற்றும் படத்தின் காமெடி காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்தது. அதனாலயே இந்த படம் தியேட்டரிலும் நல்ல வசூலை பெற்றுவிட்டது. ஆனால் தியேட்டரில் பார்க்க முடியாமல் போனவர்களுக்கு இப்போது அந்த வாய்ப்பு வந்துவிட்டது. மொத ராத்திரி திரைப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    Advertisement

    பிரபலங்கள் பாராட்டு

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த படத்திற்கு தனுஷும் பாராட்டு தெரிவித்து இருந்தார். முதல் முறையாக இணைந்து பணியாற்றிய படகுழு முயற்சியை பாராட்டிய அவர் குடும்பத்துடன் படத்தை பார்க்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். சிம்பு, ஆர்ஜே பாலாஜி உட்பட பலர் பட குழுவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    அதனால் தியேட்டரில் இந்த ஃபீல்குட் குடும்ப படத்தை மிஸ் பண்ணியவர்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் மொத ராத்திரியை வீட்டிலேயே பார்க்கலாம். கலகலப்பான குடும்ப கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ஓடிடி ரிலீஸ் நல்ல டைம் பாஸ் ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

    English Summary

    Modha Rathiri: For those who missed the movie *Modha Rathiri*—which received a warm reception from fans upon its theatrical release—there is now a fantastic update: details regarding its OTT release have just been revealed.