சென்னை: ஒரு நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் நடந்த சில நிமிட உரையாடல்கள் தான் என்று சோசியல் மீடியாவில் பெரிய விவாதமாக மாறி உள்ளது. காரணம் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பற்றிய கேள்விக்கு போட்டியாளர்கள் அளித்த பதில்கள் தான். இதை பார்த்த பலரும் காமெடி செய்யலாம் ஆனால் நாட்டுக்காக உயிரையும், வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்களை இப்படி அறியாமையால் கேவலப்படுத்துவதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு காமெடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் வ உ சிதம்பரனார் ஜெயிலில் என்ன இழுத்தார் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு பெண் அவர் படகோட்டி என்று பதில் சொல்கிறார். மற்றொரு பெண் கடலில் கப்பல் இழுத்து இருப்பார் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு பிறகு தொகுப்பாளர் என்னங்க இப்படி எல்லாம் சொல்றீங்களே என்று கேட்கிறார்.
காமெடி நிகழ்ச்சி
அந்த பெண் சிரித்தபடி நீங்க இழுத்தார்... என்று சொன்னதும் பாஞ்சாலி புடவையை துரியோதனன் இழுத்த மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன் என்று சொல்கிறார். இந்த வீடியோ வெளியானதும் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் மோகன் ஜி மிகவும் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், மக்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அரசியல் தலைவர்கள் அமைதியாக இருக்கலாமா? ஒரு காமெடி நிகழ்ச்சியில் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகி, கப்பலோட்டிய தமிழனை இப்படி அவமானப்படுத்தி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாற்றி இருக்கிறார்கள். தமிழர்கள் என்றால் அவ்வளவு கேவலமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. வா.உ. சிதம்பரனார் யார் தெரியுமா? என்று பலர் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி நினைவு படுத்தி வருகிறார்கள். வ உ சிதம்பரனார் சாதாரண மனிதர் இல்லை. ஆங்கிலேயர்களின் கடல் வணிக ஆதிக்கத்தை உடைக்க இந்தியர்களின் சொந்த கப்பல் நிறுவனமான சுவதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை தொடங்கியவர். அதனால் தான் அவரை கப்பலோட்டிய தமிழன் என்று தமிழர்கள் பெருமையாக அழைக்கிறார்கள். அவரது சுதந்திரப் போராட்ட செயல்பாடுகளுக்காக ஆங்கிலேயர்கள் கடுமையாக தண்டனை வழங்கினார்கள். சிறையில் அவரை மாட்டுக்கு பதிலாக செக்கை இழுக்க வைத்தனர். அந்த கொடுமையை தாங்கி கொண்டும் தனது கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. அதனால் தான் அவரை இன்று வரை செக்கு இழுத்த செம்மல் என்று தமிழர்கள் மரியாதையுடன் அழைக்கிறார்கள். தமிழர்களுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவர் சிறையில் செக்கு இழுத்து உடல்நிலை குறைவு ஏற்பட்டு சொந்த ஊரில் கூட அவரால் வாழ முடியாமல் சென்னையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார். ஆனால் இந்த தியாகங்கள் எல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை. இப்போதைய இளம் தலைமுறையினருக்கு ஒரு நடிகரின் முதல் படம் எது? கடைசி படம் எது? என்பது வரை தெளிவாக தெரிகிறது. எந்த ஹீரோ எப்போது பிறந்தார்? என்பதும் தெரியும் ஆனால் இந்த நாட்டுக்காக உயிரை பணயம் வைத்த வ.உ.சி யார் என்று தெரியவில்லை என்றால் அது யாருடைய தோல்வி? பெற்றோரின் வளர்ப்பு சரியில்லையா? அல்லது ஆசிரியர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளா? என்று பல கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். கதிகலங்கி போவார்கள்.. இதை கொஞ்சம் யோசிங்க! ஜனநாயகன் படம் லீக் ஆனது பற்றி இயக்குநர் மோகன் ஜி ஆதங்கம் ஏனென்றால் அந்த நிகழ்ச்சியை இலட்சக்கணக்கான இளைஞர்களும், குழந்தைகளும் பார்க்கிறார்கள். நமக்காகவும், நம் தலைமுறையினருக்காகவும் ரத்தம் சிந்தி போராடியவர்களை இதுபோன்று அலட்சியமாக பேசுவது வேதனையாக இருக்கிறது. ஹீரோக்களை கொண்டாடுங்கள் ஆனால் உண்மையான வரலாற்று நாயகர்களை மறந்து விடாதீர்கள்.வ உ சிதம்பரனார் பற்றிய கேள்வி
கோபத்தில் மக்கள்
தற்போதைய நிலை
சிலர், சினிமா நடிகர்களை தலைவா, தளபதி, சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுவது தவறில்லை. ஆனால் அதே நேரத்தில் நாட்டுக்காக போராடிய உண்மையான தலைவர்களை மறந்துவிடக்கூடாது என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடிக்காக பல விஷயங்கள் பேசப்படுகின்றன ஆனால் சுதந்திர போராட்ட வீரர்கள் தேசிய தலைவர்கள் வரலாற்று நாயகர்கள் குறித்து பேசும் போது குறைந்தபட்ச புரிதலும் பொறுப்புறவும் இருக்க வேண்டும் என்பதே தற்போது பலரின் கருத்தாக உள்ளது.சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்