சென்னை: தமிழக அமைச்சரவையில் உள்ள தலித் அமைச்சர்கள் குறித்து இயக்குநர் பா ரஞ்சித் பேசிய கருத்துகள் அரசியல் மற்றும் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் அந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் மோகன் ஜி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவை வெளியிட்டு இருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவாகரத்தை கண்டித்து நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார்.
இயக்குனர் பா ரஞ்சித் பேச்சு
அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஆனால் அமைச்சரவையில் இருக்கும் 8 தலித் அமைச்சர்களில் எத்தனை பேர் தலித் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கிறார்கள்? வன்னியரசை தவிர மற்ற அமைச்சர்கள் தவிர்த்து சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து எப்போது பேசுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
ராஜ்மோகன் பற்றி விமர்சனம்
மேலும் அமைச்சர் ராஜ்மோகன் பற்றி பேசும்போது அவர் தலித்தா? இல்லையா? என்பது கூட தேர்தலில் போட்டியிடும் போது தான் எங்களுக்கு தெரிந்தது. ஒரு யூடியூபராகவும், நடிகராகவும், தற்போது அமைச்சராகவும் இருக்கும் அவர் இதுவரை எந்த தலித் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்ததில்லை. இதற்கு முன்பு ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணன் இறந்த சமயத்தில் மட்டும் சில வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார்.
மத்தபடி அவர் தலித்துக்காக எந்த குரலும் எழுப்பவே இல்லை. ஆனால் அவர் நானும் தலித் மக்களின் பிரதிநிதி என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்து இருந்தார். அதே நேரத்தில் அமைச்சர் வன்னியரசுவை மட்டும் பாராட்டினார். அவர் அதிகாரம் கிடைத்த பிறகு சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அவருடன் எனக்கு தனிப்பட்ட உறவும் உள்ளது. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றும் சொல்லியிருந்தார். 50+ பெண்களுக்கு பாலியல் கொடுமை! சேலம் மணிகண்டனை லேசில் விடக் கூடாது! மோகன் ஜி ஆதங்கம் பா ரஞ்சித் பேசிய வீடியோக்கள் வேகமாக பரவிய நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றே வெளியிட்டு இருந்தார். அதில் என் சமூகப் பிரச்சனைக்கு நான் குரல் எழுப்பினால் என்னை சாதி வெறியன் என்பார்கள். தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர்களுக்கு மட்டும் குறல் எழுப்பவில்லை என்றால் அவர்களை தலித் சமூகமே இல்லை என்பார். என்னடா முரண்? சாதி இல்லை சாதி ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டு உன் சாதி அமைச்சர் உனக்கு மட்டும் குரல் எழுப்பவில்லை என்று புலம்புற? அவர் எனக்கும் அமைச்சர் தான்... பொதுவாக தான் பேசுவார்.. வீசும் காற்றில் விஷம் பரவட்டும் தோழர்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். மோகன்ஜியின் இந்த பதிவு பா ரஞ்சித்க்கு பதிலடியாகவே சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.வன்னியரசு பற்றி பாராட்டு
அதோடு சேலம் மாவட்டத்தில் திறக்காமல் இருக்கும் அம்பேத்கர் சிலை பற்றி பேசும்போது உங்கள் கொள்கை தலைவர் அம்பேத்கர் என்றால் அரசு விழாக்களில் அவரது சிலையை திறந்து வைக்க என்ன தயக்கம்? அவரை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராக மட்டுமே சிலர் சித்தரிக்க கூடாது என்றும் சொல்லியிருந்தார்.இயக்குநர் மோகன் ஜி