மோகன் சர்மாவுக்கு வந்த நிலை.. ரஜினி செய்த உதவி முதல் முதியோர் இல்ல வாசம் வரை மறைக்கப்பட்ட உண்மை

  • சென்னை: "நடிகர் மோகன் சர்மா முதியோர் இல்லத்தில் உள்ளார்.. திரைத்துறையில் ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த கலைஞர்கள், திட்டமிடாத வாழ்க்கையாலும் குடும்பச் சூழலாலும் கடைசி காலத்தில் வறுமைக்கும் முதியோர் இல்லங்களுக்கும் தள்ளப்படும் சோகமான நிலைமைக்கு ஆளாகிறார்கள். வயது முதிர்வில் உடற்பிணிகளும் உறவுகளின் ஆதரவின்மையும் அதிகரிக்கும்போது, பணமிருந்தாலும் வாரிசுகள் இல்லாத நிலையிலும் முதியோர் இல்லங்களே பலருக்கு இன்று தஞ்சமாக மாறுகின்றன" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.

    Advertisement

    2nd channel சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "சினிமாவில் கடைசி காலத்தில் நடிகர்கள் வறுமையில் வாடுவதை பார்க்கும்போது, சம்பாதிக்கும் காலத்தில் அவர்கள் ஏன் பணத்தைச் சேர்த்து வைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதில் 2 முக்கியக் காரணங்கள் உள்ளன.

    Advertisement

    சின்ன சின்ன கேரக்டர்கள்

    முதலாவதாக, பெரிய ஸ்டார்களை போல இல்லாமல் சின்ன சின்ன கேரக்டர்கள், துணை நடிகர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் மிகவும் குறைவு.. அன்றாட குடும்பச் செலவுகள், ஆடம்பர வாழ்வு அல்லது தவறான தொழில்களில் முதலீடு செய்து பணத்தை இழப்பது என அந்த வருமானம் கரைந்துவிடுகிறது.

    இரண்டாவதாக, எதிர்காலத்தை பற்றிய கவலையில்லாமல் வாழும் திட்டமிடாத வாழ்க்கைமுறை.. அதாவது கைக்கு வரும் 2 லட்சம், 5 லட்சம் பணத்தை வைத்துக்கொண்டு காஸ்ட்லி ஹோட்டல்களில் தங்குவது, மது அருந்துவது, நடிகைகளுக்கு செலவழிப்பது என ஜாலியாக அழித்துவிடுகிறார்கள். சேமிப்பு எதுவுமே இல்லாததால், வயதான காலத்தில் பெரிய பெரிய மெடிக்கல் செலவுகள் வரும்போது நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

    Advertisement

    நடிகைகளிடம் பணத்தை விட்ட நடிகர்கள்

    ரஜினி, கமலோடு நடித்த பெரிய ஸ்டாராக இருந்தவர் சுருளிராஜன். ஆனால் இளமைக் காலத்தில் ஒழுக்கமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்காமல், சம்பாதித்த பணத்தை இழந்துவிட்டார். பல நடிகர்கள் சம்பாதித்த பணத்தை நடிகைகளிடம் தாரைவார்த்துவிட்டு வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

    சம்பாதிக்கும் காலத்தில் முறையான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்தவர்கள் கவுண்டமணி, செந்தில்.. இவர்களை போன்ற நடிகர்கள் இன்று பாதுகாப்பாக செட்டில் ஆகியிருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் டாக்டர்களாக உயர்ந்து பெற்றோரை காப்பாற்றுகிறார்கள். ஆனால் சூரியராஜன், லட்சுமணன் போன்ற நடிகர்கள் முறையான குடும்ப அமைப்போ, வாரிசுகளோ இல்லாததால் வறுமைக்கு தள்ளப்பட்டார்கள்.

    Advertisement

    நடிகர் மோகன் சர்மாவின் நிலையை எடுத்துக்கொண்டால், அவர் வாழும் காலத்திலேயே சரியான துணையைத் தேர்ந்தெடுத்து ஒரு குடும்ப வாழ்க்கையை அமைத்திருந்தால், இந்த வயதான காலத்தில் பேரக் குழந்தைகள் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

    நடிகை லட்சுமி

    அவரது முன்னாள் மனைவி நடிகை லட்சுமி தென்னிந்தியா முதல் பாலிவுட் வரை அனைத்து மொழிகளிலும் நடித்துப் புகழ்பெற்றவர். ஆனால் அவர்களின் ஒரே மகளான ஐஸ்வர்யா, இன்று சினிமாவில் பெரிய இடத்தைப் பிடிக்க முடியாமல் சோப்பு, ஷாம்பு விற்று வறுமையான சூழலில் வாழ்கிறார்.

    பெரிய அளவில் சம்பாதித்த குடும்பங்களில்கூட எச்சரிக்கை உணர்வும் திட்டமிடலும் இல்லை என்றால் வாரிசுகளும் பொருளாதாரச் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இதுவே உதாரணம்.

    Advertisement

    முதியோர் இல்லத்திற்கு மக்கள் போவதற்கு முக்கியமாக 2 காரணங்கள் உள்ளன. மனிதர்கள் தங்கள் உடைகளைத் துவைப்பது, சமையல் செய்வது போன்ற சுய வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளும் வரை தனியாக வாழ்ந்துவிட முடியும். ஆனால் வயது முதிர்வால் நடமாட முடியாமல், கழிப்பறைக்குச் செல்லக்கூட மற்றவர் உதவி தேவைப்படும் போது முதியோர் இல்லத்தை நாட வேண்டிய சூழல் உருவாகிறது.

    பென்ஷன் தொகை

    அடுத்து, பிள்ளைகள் வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தாலும் அல்லது வாரிசுகள் இல்லாத சூழலிலும், துணையை இழந்த முதியவர்களைப் பராமரிக்க ஆள் இல்லாமல் போகிறது. உறவினர்கள் வீட்டிலும் சில நாட்களுக்கு மேல் தங்க முடியாது. இதனால் தங்களின் பென்ஷன் அல்லது சேமிப்பைக் கொடுத்துப் பராமரிப்புக்காக இல்லங்களில் சேர்கிறார்கள்.

    Advertisement

    வேறு வழியின்றித் தங்களின் வீடு, சொத்து, பேங்க் டெபாசிட் அல்லது பென்ஷன் தொகையைக் கொடுத்துத் தங்களைக் கடைசி காலத்தில் பராமரிக்குமாறு முதியோர் இல்லங்களை அணுகுகிறார்கள். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தம்பதியருக்குக்கூட வாரிசு இல்லாததால், அவர்கள் கடைசி காலத்தில் முதியோர் இல்லத்தில்தான் தங்கியிருந்தார்கள்.

    அன்பும், அரவணைப்பும்

    இன்றைய சூழலில் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் முதியவர்களுக்கு முதியோர் இல்லங்கள் கட்டாயத் தேவையாகிவிட்டன. பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்கும்போது போன் மூலம் அன்போடு 'அப்பா நல்லா இருக்கீங்களா?' என்று கேட்க முடியுமே தவிர, நேரில் இருந்து பராமரிக்கும் அரவணைப்பைக் கொடுக்க முடியாது.

    உதாரணமாக, முதியவர் ஒருவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தால், போன் வழியே ஸ்பைடர் மேனை அனுப்பி அவரைக் காப்பாற்ற முடியுமா? நேரில் இருந்து பார்த்துக்கொள்ள ஒரு ஆள் தேவை என்பதால் முதியோர் இல்லங்கள் அவசியமாகின்றன.

    முதியோர் இல்லம்

    சொந்த வீட்டில் நாம் தான் ராஜா.. நமது அதிகாரத்தை காட்டலாம். ஆனால் முதியோர் இல்லத்திற்குச் சென்றுவிட்டால் அங்கிருக்கும் விதிகளுக்குக் கட்டுப்பட்டு தான் வாழ வேண்டும். அங்கு நமது அதிகாரத்தைக் காட்ட முடியாது.. அந்த சிஸ்டத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    அதேபோல, முதியோர் இல்லங்களில் பலதரப்பட்ட மனிதர்கள் சேர்ந்து வாழும்போது, அவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகளும், சங்கடமான கேள்விகளும், உட்பூசல்களும் எழத்தான் செய்யும். 2 பேர் இருந்தாலே அங்கு மனஸ்தாபங்கள் வந்துவிடும் என்பதால் இது இயல்பானதுதான்.

    நடிகர் மோகன் சர்மா போன்றவர்களுக்குத் தங்களின் கடைசி காலத்தில் வேறு எந்த வழியும் இல்லாத காரணத்தினால்தான் இதுபோன்ற முதியோர் இல்லங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்,

    English Summary

    Mohan Sharma's Tragic Life! From Rajinikanth's Help to an Old Age Home, The Untold Story