மொத ராத்திரி.. இத்தனை போராட்டமா ஒரு மனுஷனுக்கு? கல்யாணம் களைகட்டியதா? இல்லையா? விமர்சனம் இதோ!

  • சென்னை: ஒரு கல்யாண வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் மாப்பிள்ளையும் பொண்ணு மட்டும் நம்ம வாழ்க்கையில் என்னடா நடக்குது என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு கல்யாணத்தை மையமாக வைத்து ஒரே இரவில் நடக்கும் கதையாக வந்திருக்கிறது மொத ராத்திரி. இந்த படம் எப்படி இருக்கிறது? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரிஷிக்காந்த் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்மா அனில் குமார் நடித்திருக்கிறார். மருதநாயகம் என்ற கேரக்டரில் ரிஷிக்காந்தும், முத்து செல்வியாக அனிஷ்மாவும் வருகின்றனர்.

    Advertisement

    படத்தின் கதை

    துபாயிலிருந்து ஊருக்கு வரும் மருதநாயகத்துக்கு கல்யாணம் என்றாலே அலர்ஜி. ஆனால் வீட்டில் அவருக்கு தெரியாமலே கல்யாண வேலைகள் தடபுடலாக நடக்கிறது. இன்னொரு பக்கம் கிராமத்தில் இருக்கும் முத்து செல்விக்கும் இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. காரணம் அவர் ஏற்கனவே ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். இருவரையும் சேர்த்து வைத்து விட்டால் போதும் என்று குடும்பத்தினர் நினைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் என்பது வாழ்க்கையை செட்டில் பண்ணிக் கொள்ளும் விஷயம்மாக இல்லாமல் எப்படியாவது இந்த கல்யாணத்திலிருந்து தப்பிக்கணும் என்ற பிரச்சினையாக தான் இருக்கிறது.

    பிடிக்காத கல்யாணம்

    கடைசியில் இருவருக்கும் பிடிக்காத கல்யாணம் நடந்து முடிகிறது. அதற்கு பிறகு தான் படத்தில் உண்மையான ஆட்டமே ஆரம்பிக்கிறது. முத்து செல்வி கல்யாணமான அன்னைக்கு இரவே காதலுடன் கிளம்பி விட வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அந்த முடிவை செயல்படுத்துவது அவ்வளவு சுலபமாக இல்லை. ஒரு பக்கம் கணவன் வீடு, இன்னொரு பக்கம் காதலன், நடுவில் கல்யாண வீட்டில் சுத்தி கொண்டு இருக்கும் உறவினர்கள்.. இதற்கு நடுவில் மருதநாயகமும் முத்து செல்வியும் சிக்கிக் கொள்ள படம் கொஞ்சம் கொஞ்சமாக காமெடி கலந்த கலாட்டாவாகவே மாறுகிறது.

    Advertisement

    குறிப்பாக கல்யாண வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை வைத்து இயக்குனர் உருவாக்கி இருக்கும் காமெடி நல்லா வேலை செய்கிறது. சில இடங்களில் உண்மையில் ஒரு கல்யாண வீட்டில் என்னவெல்லாம் ரகளை நடக்குமோ அது அப்படியே கண் முன்பு வந்து போகிறது‌. கல்யாணம் என்றாலே உறவினர்கள் இலவசமாக கொடுக்கும் அட்வைஸ், தேவையில்லாத கேள்விகள், குடும்ப கவுரவம் பற்றிய பேச்சுகள் என நம்ம வீட்டு கல்யாணங்களில் பார்த்த விஷயங்களை கொஞ்சம் பெரிதாக்கி திரையில் காட்டி இருக்கிறார்கள். இது நல்ல அறிமுக படமாக இருக்கிறது.

    படத்தின் பிளஸ்

    ஆரம்பத்தில் திருமணமே வேண்டாம் என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதும், கல்யாணத்திற்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் முழிப்பதும் ஒரு கட்டத்தில் கோபம் வெடிப்பும் என மருதநாயகம் நன்றாகவே செட்டாகிவிட்டார். அனிஷ்மாவும் முத்து செல்வியாக படம் முழுக்க ஒரு பதட்டத்தோடு ஓடிக்கொண்டே இருக்கிறார். எனக்கு என்ன வாழ்க்கை வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்று எண்ணம் கொண்ட கேரக்டர் என்பதால் சில இடங்களில் அவருடைய போராட்டம் சீரியஸாகவும், சில இடங்களில் வேடிக்கையாகவும் மாறுகிறது.

    Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ!
    படத்தில் இன்னொரு பிளஸ் என்னவென்றால் கல்யாணத்தை வெறும் காமெடி பின்னணியாக மட்டும் பயன்படுத்தாமல் அந்த கல்யாணத்தில் பெயரில் நடக்கும் கட்டுப்பாடுகளையும் இயக்குனர் லைட்டாக நக்கல் அடித்து இருக்கிறார். குடும்ப கவுரவம் என்று சொல்லி அடுத்தவர்களின் வாழ்க்கையை முடிவு செய்வது, பெண்ணுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்காமல் எல்லாவற்றையும் தீர்மானிப்பது போன்ற விஷயங்களை படம் சும்மா கடந்து போகவில்லை.

    Advertisement

    குறைகளும் இருக்கு

    ஆனால் படம் எல்லா இடத்திலும் ஒரே வேகத்துடன் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில் கதையை எப்படியாவது கிளைம்ஸ்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சில காட்சிகளில் கொஞ்சம் இழுக்கப்பட்ட உணர்வு வருகிறது. சில விஷயத்தை வெவ்வேறு கோணத்தில் பேசிக்கொண்டே இருப்பதால் சரி அடுத்து என்னதான் வரும் என்று நமக்கே தோன்றுகிறது.

    ஜனநாயகன் பிளாக்பஸ்டரா? இல்லை பில்டப் மட்டும் தானா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரிவியூ
    அதுபோல காதலன் மட்டும் தொடர்ந்து பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருப்பது சில இடங்களில் லாஜிக் கேள்வியை எழுப்புகிறது. இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருந்தால் நன்றாக இருக்கும். மொத்தத்தில் முதல் ராத்திரி ஒரு பெரிய மாஸ் கல்யாண கதை கிடையாது. ஆனால் பிடிக்காத திருமணத்தில் சிக்கிக்கொண்ட இருவரின் ஒரே இரவு போராட்டத்தை காமெடி, பதட்டம், எமோஷனல் கலந்து சொல்ல முயற்சி செய்த படம். கல்யாணத்திற்கு வந்த உறவினர்களை விட கல்யாணமே வேண்டாம் என்று நினைத்ததால் மணமகன், மணமகள் தான் இந்த படத்தில் அதிகமாக ஓடுகிறார்கள். இந்த ஓட்டத்தை ரசிக்க முடிந்தால் மொத ராத்திரி ஒரு ஜாலியான ஒன் நைட் வாட்ச்.

    English Summary

    Motha Rathiri: Everyone is happy in a married home. But only the groom and the girl are in the mood of what is happening in our lives. Motha Rathri is a story that takes place in one night with such a wedding as the center. How is this picture? Let's see in detail about that. Directed by debutant director Raja Karuppasamy, Rishikanth is debuting as the hero in this film. Anushma is paired with Anil Kumar. Rishi Kanth plays the character of Maruthanayak and Anishma plays the role of Muthu Selvi.