Deva: தம்பி இறந்த சோகம் மறைவதற்குள் அண்ணனும் மறைந்தார்.. சோகத்தில் தேனிசை தென்றல் தேவா குடும்பம்

  • சென்னை: தமிழ் சினிமாவில் சில பாடல்களை கேட்டாலே நம்மை அறியாமல் உதடுகள் முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். அந்த பாடல்களுக்கு பின்னால் இருந்த இசையமைப்பாளரை நினைத்துப் பார்த்தால், முதலில் நினைவுக்கு வருபவர்களில் ஒருவர்தான் தேனிசை தென்றல் தேவா. ரஜினிகாந்தின் பாட்ஷா முதல் அஜித்தின் ஆசை, விஜய்யின் பிரியமுடன் வரை பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த தேவா, இன்று நம்முடன் இல்லை என்ற செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

    Advertisement

    உடல்நலக்குறைவு காரணமாக தேவா காலமானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டியவர், இன்று உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. அவருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்த ரசிகர்களுக்கு இது சாதாரண இழப்பு கிடையாது. அதிலும் கடந்த ஆண்டு அவருடைய தம்பி சபேஷ் மறைந்த சோகத்திலிருந்து குடும்பத்தினர் மீண்டு வருவதற்குள், இப்போது தேவாவும் மறைந்திருப்பது இன்னும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement
    விஜய், அஜித் கூட அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க! ஆனால் ரஜினி செய்த செயல்! இசையமைப்பாளர் தேவா உருக்கம்

    தம்பி மறைவால் உடைந்து போன தேவா

    தேவாவின் வாழ்க்கையில் அவருடைய தம்பி சபேஷ் எவ்வளவு முக்கியமானவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. சபேஷும் இசையமைப்பாளர்தான். சபேஷ் - முரளி என்ற பெயரில் இருவரும் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். தேவாவின் இசை பயணத்திலும் அவருடைய சகோதரர்களுக்கு முக்கியமான பங்கு இருந்தது.

    கடந்த 2025 அக்டோபர் மாதம் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தம்பியின் மறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேவா, தன்னுடைய வாழ்க்கையில் ஒரு கை போய்விட்டது போல இருப்பதாகக் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். அந்த சோகம் மறைவதற்குள் இப்போது தேவாவும் மறைந்துவிட்டார் என்ற செய்தி அவருடைய குடும்பத்தினருக்கும், இசை உலகத்தினருக்கும் எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

    Advertisement
    பிக் பாஸில் இருந்து வெளியே வந்த காரணம் இதுதான்! இசையமைப்பாளர் தேவா முன்பு பிளாக் பாண்டி உருக்கம்

    தேவாவின் ஹிட் பாடல்கள்

    தேவாவை பற்றி பேச ஆரம்பித்தால் அவருடைய பாடல்களை பட்டியலிடுவதற்கே நேரம் போதாது. ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாட்ஷா, முத்து போன்ற படங்களில் அவருடைய இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக பாட்ஷா படத்தின் பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருக்கின்றன. காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, குத்து பாடல்களாக இருந்தாலும் சரி, தேவாவுக்கென்று ஒரு தனி பாணி இருந்தது.

    அதிலும் சென்னையின் கானா இசையைத் தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர்களில் தேவாவுக்கு முக்கியமான இடம் உண்டு. சாதாரணமாகத் தெருவில் கேட்கும் இசையையும், மக்களின் பேச்சு வழக்கையும் திரைப்பட பாடல்களுக்குள் கொண்டு வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர். அவருடைய பாடல்களில் இருந்த அந்த எளிமையும் உற்சாகமும்தான் இன்றைக்கும் பலருக்கு பிடித்தமானதாக இருக்கிறது. தேனிசை தென்றல் தேவா மறைந்தாலும், அவர் இசையமைத்த பாடல்கள் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் அவர் நம்மிடையேதான் இருப்பார்.

    English Summary

    music composer Deva: In Tamil cinema, there are certain songs that, the moment we hear them, our lips begin to hum along almost instinctively. When we think of the music directors behind such tracks, one of the first names that comes to mind is 'Thenisai Thendral' Deva. Having composed super-hit songs for numerous films—ranging from Rajinikanth’s *Baashha* to Ajith’s *Aasai* and Vijay’s *Priyamudan*—the news that Deva is no longer with us has left his fans deeply saddened.