சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரனுக்கும் வஹிதா அக்தருக்கும் இடையிலான பிரச்சினை மீண்டும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. இருவருக்கும் இடையே ஏற்கனவே தனிப்பட்ட உறவு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், இப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இருவரும் வெளியிட்டிருக்கும் அடுத்தடுத்த வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை திருப்பியிருக்கின்றன.
முதலில் முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோவை பார்த்த பலரும், அதில் அவர் சொல்ல வந்த விஷயம் என்ன என்று பேசத் தொடங்கினர். அதற்குப் பிறகு வகிதா வெளியிட்ட வீடியோவும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, முத்துக்குமரன் வீடியோவில் "நம்பி விளையாட்டா செஞ்சு... வினையை இழுத்துடாதீங்க" என்ற கருத்து கவனம் பெற்ற நிலையில், அதற்குப் பதில் கொடுப்பது போல வகிதாவின் பதிவு இருப்பதாகச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு முத்துக்குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் வழக்கமாக தீபாவளி நாளில் தலை கறி, எலும்பு கறி, முட்டை வறுவல் என்று இட்லியோடு விதவிதமாக சாப்பிடுவேன். ஆனா இப்போ நேரம் சரியில்லாததால் முருகருக்கு விரதம் இருக்கிறேன். அதனால இந்த தீபாவளிக்கு இட்லி, சாம்பார் மட்டும்தான் உணவு என்றும், அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டிக்கொள்வதாகவும் பேசியிருந்தார். அவருடைய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். அதே நேரத்தில், ஏற்கனவே வஹிதாவுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, முத்துக்குமரனின் சில வார்த்தைகளை அந்தப் பின்னணியுடன் தொடர்புபடுத்திப் பேசவும் தொடங்கினர். முத்துக்குமரனின் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து வஹிதா அக்தரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதில் காரி துப்புவது போன்ற செயலைச் செய்திருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இது முத்துக்குமரனின் பதிவுக்கான பதிலாக இருக்குமோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அந்தப் பதிவுக்கு இட்லி வீடியோவுக்கு பதில் என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருப்பதால், இந்த வீடியோவை முத்துக்குமரனுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். இந்த பிரச்சினை இப்போது திடீரென உருவானதல்ல. ஏற்கனவே முத்துக்குமரன் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக வஹிதா அக்தர் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக தற்கொலை முயற்சி செய்தபடி வெளியிட்ட வீடியோக்களும் அப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் வஹிதா கூறிய குற்றச்சாட்டுகளை முத்துக்குமரன் மறுத்தார். இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகியதாகவும், தன்னைப் பற்றித் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் விளக்கமளித்திருந்தார்.முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோ
முத்துக்குமரன் கமிஷனர் ஆபீசுக்கு போனதும்.. வாஹதா போட்ட அடுத்த பதிவு! லிஸ்ட் பெருசாகிட்டே போகுது!
காரி துப்பிய வஹிதா
பழைய புகார்